செய்திகள்

சுஷ்மிதாவின் சுகமான பரத நாட்டியம்

மே 24,2018  IST

டில்லி தமிழ் சங்கத்தில் இளைய பாரத நிகழ்ச்சியில் சுஷ்மிதா சத்தியமூர்த்தியின் பரத நாட்ய நிகழ்ச்சி நடைபெற்றது. குரு ஜெயலக்ஷ்மி ஈஸ்வரின் மாணவியான சுஷ்மிதா பலவருடங்களாக பரதம் பயின்று அரங்கேற்றம் செய்த இளம் கலைஞர். அன்றைய மாலையில் இந்திர கௌத்துவத்துடன் ஆரம்பித்தார்.கோடை மாலையில் பொருத்தமான இந்திர கௌத்துவத்தில் அபிநயங்கள் அருமை.அவரின் வாகனமான ஐராவதம் மேடையில் வலம்வந்தது புதுமையான அபிநய அனுபவம். புஷ்பாஞ்சலியை வலசியில் விறு விறுப்பாக ஆடிக்கொண்டு,முக்கிய வர்ணத்தை ஆனந்த பைரவியில் ஆடினார். அவையோரை தன வசத்தில் இருத்திக்கொண்டு துள்ளல் ஆட்டத்தில் மேடையில் அவர் நடத்தியது ராஜாங்கம்.அதிகம் கேட்டும் , பார்த்தும் மகிழ்ந்த 'தெருவில் வாரானோ ' அலுப்பு தட்டாமல் ரசிக்கும்படி இருந்தது. முத்துத்தாண்டவரின் ரசனைமிக்க தொய்வில்லாத பதத்தை தொடர்ந்து கணபதியை ஆனந்த நர்த்தன கணபதியாய் நடமாடவைத்து ,இறுதியாக வசந்தாவில் தில்லானவுடன் ஒரு தேர்ந்த நடன மணியாய் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.


நட்டுவாங்கம் குரு ஜெயலக்ஷ்மி ஈஸ்வர்,பாட்டு-சதனம் ராஜா கோபால்,( கம்பீரமான குரல் வளம்) மிருதங்கம் ஜெயந்தாஸ் ,வீணை -ஷ்யாமளா பாஸ்கர்,வயலின் -உமா அருண் என்ற சங்கீத பின்புலம் நிகழ்ச்சிக்கு பெரும் பலமாக அமைந்தது.அன்றைய சிறப்பு விருந்தினராக சி.சி.ஆர்.டி உதவி இயக்குனர் -ரிஷி வஷிட் வந்திருந்து கலைஞர்களை வாழ்த்தி கௌரவித்தார்கள்.தமிழ் சங்கத்தின் இணை செயலர் ரமாமணி சுந்தர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்கள்.

-நமது செய்தியாளர் மீனா வெங்கி 

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா...

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us