செய்திகள்

யோகினியின் பரத அரங்கேற்றம்

மே 26,2018  IST

டில்லி லோதி ரோடு சின்மயா மிஷன் வளாகத்தில் யோகினி ஸ்ரீராமின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.யோகினி சுனர்த்தகி பரத பள்ளியில் குரு சுப்புலட்சுமி கணேஷிடம் கடந்த 8 வருடங்களாகஆர்வமுடன் பயின்றுவரும் 9 ம்வகுப்பு படிக்கும் மாணவி . சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் பங்கேற்ற அனுபவம் ,மற்றும் பல மேடைகளில் நாட்டிய போட்டிகள், குழு நடனங்களில் ஆடிய அனுபவங்கள் அவரது அரங்கேற்றத்தை ஒரு தேர்ந்த நடன மணியின் நிகழ்ச்சிக்கு ஒப்பாக உயர்த்தியது.
புஷ்பாஞ்சலியில்(பகுதாரி ) அரங்க தேவ தேவியருக்கு வந்தனம் தெரிவித்துக் கொண்டு அலாரிப்புக்கு திருப்புகழ் மாறுதலாக இருந்தது.அடாணாவில், சந்த தாளம் -மிக கணக்குடன் நடன கோர்வைகள் திருப்புகழ் வரிகளுக்கு அழகுக்கு அழகுசேர்த்தது. தஞ்சை நால்வரின் ஜதீஸ்வரம் (*ராகமாலிகா) யோகினியின் உழைப்பை காட்டியது ஒருபுரம்.குருவின் தேர்ந்த நடன அடவுகள்,கோர்வைகள் என்று பார்வையாளரை கவர்ந்தது அதிகம்..



லால்குடியின் நவரச வர்ணத்தில் அன்னை மீனாட்சியை நேரில் பார்த்ததுபோன்ற அனுபவம் வெங்கடேசின் பாட்டில். அதன் வரிகளில் கிடைத்த ஈர்ப்பு ஒருபக்கம். அதற்கேற்ப நவ ரசங்களையும் திருவிளையாடல் நிகழ்வுகளோடு யோகினியின் நடனத்தில் பார்க்க கிடைத்தது பேரானந்தம்.தொடர்ந்து குறிஞ்சியில் கண்ணன் தாலாட்டு,ஹனுமத் பிரபாவம்(ஹனுமான் சாலீசா) அர்த்தநாரீஸ்வர தில்லான என ஒவ்வொன்றும் அருமை.

குரு சுப்புலக்ஷ்மியின் நட்டுவாங்கம்.வெங்கடேஷ் பாட்டு,லால்குடி ஸ்ரீ கணேஷ் மிருதங்கம், வயலின்-ஆர்.கலைஅரசன் ,குழல் இசை -ரஜத் பிரசன்னா என்ற இசை கூட்டணி அரங்கேற்றத்தை அழகுபடுத்தியது.
சிறப்பு விருந்தினர் கமலினி தத்( நாட்டிய குரு )சுதா சஹாய் -(முதல்வர்-ஸ்ரீ ராம் ஸ்கூல் அராவல்லி -குருக்ராம்) முக்கிய விருந்தினர் சுவாமிஜி -அனைவரும் யோகினியின் திறமையை பாராட்டி வாழ்த்தினார்கள்.

நிகழ்வுகளை ஸ்ரேயா வெங்கடேசனும்,உதய் ஸ்ரீராமும் அழகாக தொகுத்து வழங்கினார்கள்.

இறுதியில் யோகினி குரு மற்றும் கலைஞர்களுக்கு மரியாதை செய்து ஆசிபெற்றார்.


 - நமது செய்தியாளர் மீனா வெங்கி

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்

நொய்டாவில் சம்ஸ்தி ருத்ராபிஷேகம்...

நொய்டாவில் ஏகாதசி பஜனை

நொய்டாவில் ஏகாதசி பஜனை...

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்

அகமதாபாத்தில் காஞ்சி மகாபெரியவா ஜெயந்தி உற்சவம்...

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

நொய்டா விநாயகர் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us