செய்திகள்

ரசிகப்ரியா சார்பில் 11 ம் வருட சுவாதி ஸ்ம்ருதி

மே 26,2018  IST

டில்லி .ரசிகப்ரியா சார்பில் 11 ம் வருட சுவாதி ஸ்ம்ருதி டில்லி தமிழ் சங்க வளாகத்தில் வள்ளுவர் அரங்கில் கொண்டாடப்பட்டது. டில்லி பிரஷாந்த் பையின் மாணவர்கள் ஸ்ரீ ராக், ஸ்ரீ ஹரியின் கர்நாடக இசை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் நீதியரசர் ராமமூர்த்தி, ஆர் முகுந்தன் (டில்லி தமிழ் சங்க செயலர்) சுவாதி திருநாளின் படத்திற்கு புஷ்ப அஞ்சலி செலுத்தினர். ரசிகப்ரியாவின் நிறுவனர் மணிகண்டனும், ஜெயப்ரகாஷ் பட்டும் கௌரவித்தனர்.ரசிகப்ரியாவின் இசை இதழ் 'சங்கீத்திகா' சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டது.
சுவாதித்திருநாள் சங்கீத போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், நினைவு பரிசும் சிறப்பு விருந்தினரால் வழங்கப்பட்டது. பின்னர் நீதியரசர் ராமமூர்த்தியும், தமிழ் சங்க செயலர் முகுந்தனும் ரசிகப்ரியாவின் இசை பணியை பாராட்டி பேசினர் . தொடர்ந்து திருவாரூர் எஸ்.கிரீஸின் சிறப்பு இசை நிழச்சி நடைபெற்றது.


தன வளமான குரலில் 'சுமசாயாக' என காபி வர்ணத்துடன் கம்பீரமாய் ஆரம்பித்து, 'பரிபாகியை ' சாவேரியில் ரசிக்க வைத்து, த்யாகராஜரின் 'மாகேலரா விசாரமு'வில் சாகேத ராமனை, நம்மை ஆட்டுவிப்பவனை ரவி சந்த்ரிகாவில் அழகுபடுத்தி, அரங்கில் அழைத்து வந்து கற்பனா ஸ்வரங்களால் ஜனரஞ்சகமாய் ரசனையுடன் பாடி , மீதும் த்யாகராஜரின் தத்துவ மருக (கருடத்வனி) விறுவிறுப்பாக பாடிக்கொண்டு , சாருகேசி ராக ஆலாபனையில் சஞ்சரிக்க வைத்து அதற்கு ஸ்ரீதரின் வயலினும் இணை சேர இசை இன்பம் பெருகியது உண்மை. நாரத முனியால் போற்றப்பட்ட -ஒளிரும் ஆபரணங்களை அணிந்த -சரசிஜத லோச்சனா-கருப்பை செய்ய வாரும் -குசலம் தாரும்-சுவதனனே-சம்சார சாகரத்தை கடக்க அருள் புரிவாய் என வேண்டுதல்களை அவன் தலில் வைத்து-நாரதமுனி நிரவலில் அவனை பலவாறாக போற்றி புகழ்ந்து-பத்மநாபனின் லயத்தில் அவனை அமர்களமாய் ஆராதித்து -க்ருபயா பாலா ஸௌரே-வெகு நாட்களுக்கு ரீங்கரித்துகொண்டிருக்கும் .அடுத்து 'சாரனமான மாடலெ ந்தோவில் சாலு சாலுவில் ரம்யமாய் பத்மநாபனிடம் இழைந்து இழைந்து அவன் அன்பை திருப்தியாய் சொல்லி கொண்டு ,அதே வேகத்தில் அந்த மன நிறைவில் 'குறை ஒன்றும் இல்லை என்ற ராஜாஜியின் வரிகளில் நமையும் ஈர்த்து இனிய இசைமாலையை தொடுத்து தில்லானாவுடன் ரசிகப்ரியாவின் சுவாதி ஸ்ம்ருதி விழாவிற்கு அழகிற்கு அழகு சேர்த்தார் திருவாரூர் கிரீஸ். இசை மாலைக்கு மணம் சேர்த்த வயலின் ஸ்ரீதருக்கும்.மிருதங்கம் கும்பகோணம் பற்ற்மநாபனுக்கும் தம்புராவில் துணை நின்ற ஆதர்ஷுக்கும் பாராட்டுக்கள்.

நிகழ்வுகளை மீனா வெங்கி தொகுத்து வழங்கினார். நன்றியுரை ரசிகப்ரியாவின் செயலர் ராமநாதன் கூறினார்.


 - நமது செய்தியாளர் மீனா வெங்கி

Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா...

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us