செய்திகள்

டில்லி தமிழ்சங்க இளைய பாரதத்தில் இருவர்

ஜூன் 02,2018  IST

 புதுடில்லி : டில்லி தமிழ் சங்கம் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக  சங்கீதம்,நாட்டியம் ,வாத்திய துறையில் வளர்ந்து வருபவர்களை கண்டறிந்து மேடை அளித்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்திய இளைய பாரத நிகழ்ச்சியில் குரு டாக்டர் நிர்மலா பாஸ்கரின் மாணவர்கள் கிரண் சுப்ரமணியனும்.சுபமதி முத்துவேலும் தமிழிசை தந்தார்கள். 
முதலில் மேடை ஏறிய சுபமதி மூலாதாரனை 'ஓம் பிரணவ விமலா கணபதியில் ' துதித்துக் கொண்டு,அன்னையை போற்றும்விதமாக'அம்பிகே கௌரி காமாக்ஷி 'என்று நாட்டை குறிஞ்சியில் ரம்யமாய் வணங்கிக்கொண்டு வேலேந்தியவனை விறுவிறுப்பாய் பாடி , மேடையை தன்வசத் திற்கு கொண்டுவந்தார்.பாபநாசம் சிவனின் 'உன்னை அல்லால் வேறு கதியில்லை அம்மா 'தெரிந்த பாட்டு அதிகம் கேட்ட பாட்டு என்றாலும் அன்று சுபமதியின் கல்யாணி சுகமாய் இருந்தது.அடுத்து மாடு கன்றுகள் மேய்க்கும் மாய கண்ணா ..என்று அபயகரத்தோனை ,ஆதிமூலமே கடைக்கண்  பார்த்து அருள பாடினேன் உன் அருள் நினைந்து உன்னை நாடினேன் என்று மலயமாருதத்தில் ஓடி வந்தேன் உந்தன் திருவடியை நம்பி எல்லோரையும் கவர்ந்தது. அம்புஜம் கிருஷ்ணாவின் ஓம் நமோ நாராயணா(கர்ண   ரஞ்சனி),அடுத்து கண்டநாள் முதலாய்  (மதுவந்தி) மீண்டும் முருகனிடம் நம்மை அழைத்துசென்று.சுவாதித்திருநாளின் தில்லானா(திலங் ) நிறைவு செய்தார்.நல்ல குரல் வளம்.குருவின் வழிகாட்டுதலில் பிரகாசனமான எதிர்காலம் நிச்சயம் சுபமதிக்கு  காத்திருக்கிறது         அடுத்து மேடை ஏறிய கிரண் சுப்பிரமணியம் தலை நகரில் பல மேடைகளில் பாடிவரும் கலைஞர்.ஸ்ரீ ரஞ்சனியில் பாபநாசம் வரிகளில் மூவுலகிற்கும் ஆதாரமானவனை ,வாழ்வின் ஜீவாதாரனை ,லம்போதரனை 'கஜவதனாவில்' ஆராதித்து ,ஜக ஜனனீ சுக பாணி கல்யாணி யில் அந்த மதுராம்பிகையை துதித்துப்போற்றி பாபநாசம் வரிகளில் மாதவனே ,மருகனே, முருகனே,மலைமகள் மகனே,மறையோர் போற்றும் மலர் பாதம் வணங்கி 'மாதயை நிதி -நீ தயை புரி 'என்று வசந்தமாய் பாடிக்கொண்டு ,நம்மை முருகனிடம் அழைத்து சென்றார்.வாலியின் அற்புத வரிகள் வலசியில் இழைந்து இழைந்து குமரனை குன்றில் மேல் காட்டி,பொன் மயில் ஏறிய சண்முகநாதனை கூவி அழைத்துக்கொண்டு ,மீண்டும் அந்த கந்தவேளிடமே இட்டு சென்றார்.பூமியில் புகழ் பெரும் ஹஸ்தினாபுரம் தனிலே அபயகரம் அளிக்கும் ஆறுமுகத்தோனே ,முருகனே எமக்கருளும் தருணம் இது என்று 'உத்தர சுவாமிமலை நாதானேவில்'உருக் கமாய் பாடினார்.நம்மை உள்ளம் உருகவைத்த கிருஷ்ணனின் அற்புத வரிகள்.கேட்க கேட்க இனிமை தரும் 'மகர குண்டலம் ஆடுது 'பாட்டில் நீலபட்டாடையுடன் அழகாய் நிற்கும் வடிவழகனை,மாதவனை ரசிக்கவைத்தது அருமை.இறுதியாக அம்பாளை ஊஞ்சலில் அமர வைத்து முன்னும் பின்னும் ஆட்டி'ஆடுகிறாள் ஆடுகிறார் ஊஞ்சல் ஆடுகிறாள் ' என்றும் நம் காதுகளில் ஒலித்துகொண்டிருக்கும் .


கலைஞர்களை தமிழ் சங்க தலைவர் இந்துபாலா மற்றும் செயலர் முகுந்தன் பாராட்டி பேசினார்கள்.குரு நிர்மலா பாஸ்கர் மற்றும் கலைஞர்களை தமிழ் சங்கத்தின் சார்பில்.  கௌரவிக்கபட்டனர்.நிகழ்வுகளை தமிழ் சங்க இணை செயலர் ரமாமணி சுந்தர் தொகுத்து வழங்கினார். அன்றைய தமிழ் இசை நிகழ்ச்சிக்கு வயலினில் வி.எஸ்.கே.அண்ணாதுரையும், மிருதங்கத்தில் கும்பகோணம் பத்மநாபனும் .கஞ்ஜீராவில் ஆதி நாராயணனும் உடன் வாசித்து சிறப்பித்தார்கள்.
- தினமலர் செய்தியாளர் மீனா வெங்கி 


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா...

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us