செய்திகள்

டில்லியில் கங்கை முதல் காவேரி வரை

ஜூன் 02,2018  IST

புதுடில்லி : பரந்து விரிந்த இந்த பாரத நாட்டில் எத்தனை  இயற்கை வளம்.எத்தனை  மலைகள்.எத்தனை  நதிகள்.இமயம் தொட்டு குமரிவரை இயற்கை அன்னையின் கைவண்ணம் நம்மை பிரமிக்க வைக்கிறது.பல ராஜ்யங்கள்.பல மொழிகள்.பலவித நடை உடை பழக்க வழக்கங்கள்.வேற்றுமையில் ஒற்றுமை என்று மேடை தோறும் முழங்கினாலும் ஒவ்வொரு மாநிலமும் தனது இயற்கை வளத்தை தன் மாநில மக்களுக்கே சேர வேண்டும் என நினைக்கிறது.அதுவே போராட்டங்களில் ஈடுபட காரணமாகிறது.
இது ஒருபுறம் அரசியல் வட்டாரத்தில் நிகழ்வாய் நடைபெற கலையை ஆதாரமாக கொண்டு அருமையாக கங்கை முதல் காவேரி வரை என்ற தலைப்பில் பாரத நாட்டியங்களை இணைத்து கலை நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் டில்லி இந்தியா ஹாபிடேட் வளாகத்தில் நடைபெற்றது. நதிகள் ஒவ்வொன்றும் கவிஞர்களுக்கு கருப்பொருளாய் பல உயிரோட்டமான வரிகளை இன்றும் பறைசாற்றி கொண்டிருகின்றன.அப்படியான கவிதை வரிகளுக்கு நாட்டிய உலகின் முன்னணி குருமார்கள் பலரும் இணைந்து இதற்கு வடிவம் கொடுத்துள்ளார்கள் .கதக் நடனத்தை குரு கீதாஞ்சலி லால் கங்கா நதிக்கும்-யமுனா நதிக்கு குச்சிபுடி நடனத்தை பத்மபூஷன் ராஜா ராதா ரெட்டியும், நர்மதா நதியை பரதத்தில் பத்மஸ்ரீ கீதா சந்திரனும் , பிரமபுத்ரா நதியை ஒடிசியில் பத்மஸ்ரீ ரஞ்சனா கௌரும்,காவேரி நதியை பரத நாட்டியத்தில் பத்மபூஷன் சரோஜா வைத்யநாதனும் நடன கோர்வைகள் அமைத்திட அவர்கள் மாணவர்கள் அடுத்தடுத்து பார்வையாளர்களை ஒவ் வொரு நதியிலும் பயணிக்க செய்தது அருமையிலும் அருமை.நேரம் நகர்வது தெரியாமல் இந்த கோடை மாலையில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள்  நடனம் மூலம் நதி வழி பாரத தரிசனம் செய்த மகிழ்வை அவர்கள் விமரிசனங்கள் பறைசாற்றின . கங்கா முதல் காவேரி வரை வடிவம் பெற பின்புலமாக பலம் கூட்டியவர் உத்சவ் மியுசிக்கின் சர்சில் பாண்டியன். இசை-பிரவீன் டி ராவ் , வாய்பாட்டு-வாரிஜாஸ்ரீ வேணுகோபாலன்,ஆராய்ச்சி-சரித்திர ஆய்வாளர் டாக்டர்.சித்ரா மாதவன் . 


இந்த நடனம் மூலம் நதிகள் கடலில் இறுதியில் சங்கமிப்பதுபோல்  நாமும் வேற்றுமை விடுத்து பாரத பிரஜை என்ற ஒற்றுமையில் இணைய வேண்டும் .நதிகளை சுத்தமாக வைத்து பேணவேண்டும் என்ற பொறுப்பையும் உணர்த்தியது. நிகழ்வுகளை சாதனா ஸ்ரீவத்சவா தொகுத்து வழங்க,இறுதியில் குருமார்களும், பங்கேற்ற நடன கலைஞர்களும் கௌ ரவிக்கபட்டார்கள்.
- தினமலர் செய்தியாளர்கள் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா...

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us