செய்திகள்

டில்லியில் நிருத்ய ஆராதனாவின் ஆண்டு விழா

ஜூன் 09,2018  IST

 புதுடில்லி : டில்லி சித்தரஞ்சன் பார்க் பிபின் சந்திர பால் உள்ளரங்கில் ந்ருத்ய ஆராதனா குச்சிபுடி நடன பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது .மங்கள விளக்கேற்றி சிறப்பு விருந்தினர்கள் ஆரம்பித்து வைக்க, இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.ராகமாலிகா பூர்வங்கத்துடன் இளம் நடன கலைஞர்கள் அரங்கை வணங்கி கணேசருக்கு ஹம்சத்வனியில் ந்ருத்ய சமர்ப்பணம் செய்தது ரசிக்கும்படி இருந்தது.
குச்சிபுடி நடனதிற்கே உரியதுல்ஜா ராஜேந்திர சப்தம்  அதை தொடர்ந்து ஸ்வரஜதி .ஹம்சத்வனியில் விறுவிறுப்பாக ,சரியான தாள அடவுகளுடன்  அமைந்திருந்தது.கிருஷ்ணா சப்தம் -கிருஷ்ணரின்  லீலா வினோதங்கள் எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு பிடிக்கும். அதுவும் சிறிய நடன மணிகள் ஆடினால் இன்னும் சிறப்பாக ரசிக்கும் படி இருந்தது.மோகனமாய் பலவிதங்களில் அழைத்தது அருமை. கஜேந்திரமோக்ஷம்  , அதில் கஜேந்திர மோக்ஷ வர்ணனை ,விஷ்ணுவின்  அவதார படலத்தின் ,சில பாகங்களை இந்த கஜேந்திர நடனத்தில்  இணைத்து காட்டியது சிறப்பு.மீண்டும் கிருஷ்ணா -இந்த முறை பாமாவின் காதல் .பைரவியில் ஸ்ருங்கார ரசத்தை வெளிபடுத்த பல சந்தர்பங்கள் .நடன கோர்வை ஒவ்வொரு இடத்திலும் பளிச்சென்று இருந்தது.தொடர்ந்து அன்னமையாவின் கிருதி கரகரப்ரியாவில் வேங்கடவனை துதிபாடியது .கிருஷ்ணரை பார்த்து மகிழ்ந்த நம்மை ராமாயண சப்தத்தில் வளம் வர செய்தார்கள்.தேர்ந்த கதை,  கதாபத்திரங்கள், நடனத்தோடு நம்மை இணைத் து சென்றது.நாராயண தீர்த்தரின் கிருஷ்ணா லீலா தரங்கிணியில் குச்சிபுடிக்கே  உரிய தாம்பாள நடனம் எல்லோரையும் கவர்ந்தது.       


நடன மாலைக்கு முக்கிய விருந்தினராக ஸௌரப் பரத்வாஜ் -எம்.எல்.எ, மீனா வெங்கி-பத்திரிகையாளர் ,குரு பசுமதி விட்டல்,வ்ரஞ்சனந்தன் தாஸ் -துணை தலைவர் ,இஸ்கான் ,டில்லி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நடன குரு பாரதி விட்டல் மற்றும் பத்திரிகையாளர் மீனா வெங்கி பங்கேற்ற நடன கலைஞர்களுக்கு நினைவு பரிசும்,சான்றிதழ்களும் கொடுத்து பாராட்டி பேசினார்கள். விருந்தினர்களை மீனு தாகூர் கௌரவித்தார்.
- தினமலர் செய்தியாளர் மீனா வெங்கி


Advertisement
மேலும் புதுடில்லி செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி

நொய்டா ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கார்த்திகேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்

ஐதராபாத்தில் தமிழர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்...

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா

நொய்டாவில் விநாயகர் சதுர்த்தி விழா...

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்

இந்திரா நகரில் ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மும்பை தாராவி கிளை ரத்த தான முகாம்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us