செய்திகள்

நொய்டாவில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம்

ஜூலை 21,2018  IST

 நொய்டா : நொய்டா ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் ஆலயத்தில் ஆடிவெள்ளியை முன்னிட்டு உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இத்தகைய சிறப்பு பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் வெள்ளியன்று முண்டக கன்னியம்மனாகவும், 2வது வெள்ளியன்று காமாட்சியாகவும், 3வது வெள்ளியன்று திருவுடையம்மனாகவும் (இச்சாசக்தி), 4வது வெள்ளியன்று ப்ரதியங்கரா தேவியாகவும் அம்மனை ஆவாகனம் செய்து பூஜை நடத்தப்பட உள்ளது.




பெண்கள் குழுக்களை இணைந்து லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்தனர். தீபாராதனையை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் நொய்டா மட்டுமின்றி, டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டு, அம்மனின் திருவருளைப் பெற்றுச் சென்றனர்.





- தினமலர் செய்தியாளர்கள் வெங்கடேஷ்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

செப்டம்பர் 22, 23 ல் டி.வி.வரதராஜன் நாடகங்கள்

செப்டம்பர் 22, 23 ல் டி.வி.வரதராஜன் நாடகங்கள்...

திருப்புகழ்அன்பர்கள் அமைப்பு அறுபது ஆண்டுகள் நிறைவு விழா

திருப்புகழ்அன்பர்கள் அமைப்பு அறுபது ஆண்டுகள் நிறைவு விழா...

பவானீஸ் பிரசனாலையா வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம்.

பவானீஸ் பிரசனாலையா வழங்கிய பரதநாட்டிய அரங்கேற்றம்....

சரோஜினி நகர் ஸ்ரீ விநாயகர் கோயில் அக், நவ, முக்கிய நிகழ்வுகள்

சரோஜினி நகர் ஸ்ரீ விநாயகர் கோயில் அக், நவ, முக்கிய நிகழ்வுகள்...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us