செய்திகள்

நொய்டாவில் நவராத்திரி மஹோற்சவம்

அக்டோபர் 11,2018  IST

 நொய்டா : நொய்டாவில் ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா ஆலயத்தில் அக்.,9 ம் தேதி நவராத்தி மஹோற்சவம் துவங்கியது. முதல் முறையாக இவ்வாலயத்தில் நவராத்திரி மஹோற்சவ விழா நடைபெறுவதால் பெருந்திரளான பக்தர்கள் திரண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். ஆலய நிர்வாகம் சார்பில், கோயில் வளாகத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டிருந்தது. விழாவின் 9 நாட்களும் உலக நன்மைக்காக நாள்தோறும் மாலை வேளையில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பஜனை குழுவினரால் பாடப்பட்டு வருகிறது.  


அக்.,14 அன்று விளக்கு பூஜை நடத்தப்பட உள்ளது. கணபதி ஹோமத்துடன் துவங்கும் இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, கன்னியா பூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு, மங்கள ஆரத்தியுடன் நிறைவடைகிறது. விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. நவராத்திரி மஹோற்சவத்துடன் சேர்த்து நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இவ்விழாவில் நொய்டா மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வந்து ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.





- நொய்டாவிலிருந்து வெங்கடேஷ்


Advertisement
மேலும் பிற மாநிலங்கள் செய்திகள்

மேலும்    செய்திகள்    உங்களுக்காக ...

டிசம்பர் 16 ல் டில்லி லோடி ரோடில் சங்கராபுரத்தின் வீடியோ காண்பிரென்ஸ்

டிசம்பர் 16 ல் டில்லி லோடி ரோடில் சங்கராபுரத்தின் வீடியோ காண்பிரென்ஸ்...

டில்லியில் கர்நாடக வாய்ப்பாட்டு

டில்லியில் கர்நாடக வாய்ப்பாட்டு...

டில்லியில் சங்கீத மாலை

டில்லியில் சங்கீத மாலை...

டில்லியில் கர்நாடக இசைக் கச்சேரி

டில்லியில் கர்நாடக இசைக் கச்சேரி...

Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us