செய்திகள் நவம்பர் 23,2012 IST
![]()
குர்கான்: அரியானா மாநிலம், குர்கானில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்தி கணேஷ் ஆலயத்தில், கந்தர் சஷ்டி விழாவும், சாஸ்தா ப்ரீத்தியும் நடைபெற்றது. கலச பூஜையுடன் துவங்கி நடைபெற்ற கந்தர் சஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்ற லக்ஷார்ச்சனை, மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ சுப்பிரமணிய ஹோமம், மஹா அபிஷேகம் நடைபெற்றன. பாலதண்டாயுதபாணிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீ தர்ம சாஸ்தாவுக்கு மகா அபிஷேகமும் சாஸ்தா ப்ரீத்தியும் நடைபெற்றன. புது தில்லி பால கோகுலம் பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடினர். தொடர்ந்து மகா அன்னதானம் செய்யப்பட்டது.
- குர்கானிலிருந்து எஸ்.சுப்ரமணியன்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...
தற்போதைய செய்தி