செய்திகள் டிசம்பர் 26,2012 IST
![]()
புவனேஸ்வர்: புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் குடும்பங்கள் ஒன்றாக கூடி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினர். இதில் குட்ஷெப்பர்டு மற்றும் ஜீசஸ் சேவ்ஸ் குழந்தைகள் காப்பகத்தைச் சேர்ந்த 100 குழந்தைகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ரத்தினராஜ் வரவேற்க, சங்கப் புரவலர் சுந்தரராஜன், காப்பகத்திலிருந்து வந்திருந்த குழந்தைகளுடன் கேக் வெட்டி விழாவைத் துவக்கி வைத்தார். சங்கத் தலைவர் துரைசாமி சிறப்புரை ஆற்றினார். ஜுடு சேகர் பல்குரலில், குழந்தைகளை மகிழ்வித்தார். சதீஷ், கிறிஸ்துமஸ் தாத்தாவாக வந்து இனிப்பு வழங்கினார். கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன. குழந்தைகள் நடனம் இடம் பெற்றது. குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. விழா ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார். சங்கத் துணைத்தலைவர் அன்சாரி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...
தற்போதைய செய்தி