செய்திகள் பிப்ரவரி 06,2013 IST
![]()
மணிப்பூர்: மணிப்பூரில் பிப்ரவரி 14ம் தேதி முதல் 23ம் தேதி வரை விஸ்வ சாந்தி மகா யாகம் மற்றும் சர்வ சக்ஷா வேத சம்மேளனம் நடைபெற உள்ளது. இதில் திருப்புகழ், திருவெம்பாவை மற்றும் தேவாரப் பாடல்கள் பாடப்படும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காஞ்சி கமாகோடி பீடம் செய்துள்ளது.
14ம் தேதி முதல் 20ம் தேதி வரை காலை 7 மணி முதல் 11 மணி வரையும் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரையும் மாலை 05:30 மணி முதல் இரவு 7 மணி வரையும் வேத பாராயணம் நடைபெறும். இதில் ரிக் வேத பாராயணம், சுக்ல யஜுர்வேத பாராயணம், கிருஷ்ண யஜுர்வேத பாராயணம், சாமவேத பாராயணம், அதர்வ வேத பாராயணம், ஸ்தோத்ர பாராயணம் இடம் பெறும்.
14ம் தேதி பல்வேறு மொழிகளில் குரு கீர்த்தனைகள்; 15ம் தேதி ஸ்ரீ காமாட்சி நவவாரணம், தேவி கீர்த்தனைகள்; 16ம் தேதி ஸ்ரீ கீதா கோவிந்தம் ஜெயதேவ அஷ்டபதி; 17ம் தேதி ஸ்ரீ ராதா கல்யாண பாகவத சம்ப்ரதாயம்; 18ம் தேதி சிவ அஷ்டபதி; 19ம் தேதி ஸ்ரீ ருக்மிணி கல்யாணம், கபீர், மீரா பஜனைகள்; 20ம் தேதி ஸ்ரீ சீதா கல்யாணம், மராத்தி அபாங் பஜனைகள் நடைபெறும். இந்த பஜனைகள் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும்.
14ம் தேதி மதல் 20ம் தேதி வரை ஷன்மதா தேவதா யாகம் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும்.
22ம தேதி இந்தோ- மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ள மொரே கிராம அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோயிலில் பகல் 2 மணி முதல் 4 மணி வரையும், 23ம் தேதி பகல் 12 மணி முதல் 2 மணி வரையும் தி ருப்புகழ், திருவெம்பாவை மற்றும் தேவார பாடல்களும் இதர தமிழ் பக்தி பாடல்களும் தமிழில் பாடப்படும்.
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
முன்னாள் குடியரசு தலைவர் கலாமுடன் குழந்தைகள் சந்திப்பு ...
தற்போதைய செய்தி