காங்கோ கின்ஷாசா நகரில் காங்கோ ஹிந்து மண்டல் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்கள் நடைபெற்றது; ஒரு நாள் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு விழா நடத்த அனுமதிக்கப்பட்டது. நம் மக்கள் மற்ற மொழி மக்களுடன் இணைந்து விழா நடத்தப்பட்டது;

மொரிஷியஸ் நாட்டில், கியூபிப், மஹேபோக், ட்ரியோலேட், பிளாக், வகோவா, மற்றும் கத்தரபோன்ஸ் போன்ற இந்திய வம்சா வழியினர், விநாயக சதுர்த்தி விழாவினை ஒரு சமூக விழாவாக அனைவரும் ஒன்று திரண்டு கொண்டாடினர்

ஆப்ரிக்க நாடான நைஜீரியா, லேகோஸ் நகரில் முழுமுதற் கடவுளான மூஷிக வாகனனுக்கு ஹோமம் வளர்த்து விநாயக சதுர்த்தி வழிபாடு துவங்கியது. மூலவர் விக்னேஸ்வருக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆரத்தியும் நடைபெற்றது

மொரிஷியஸ் தலை நகர் போர்ட் லூசில் மதுரை மாரியம்மன் கோவிலின் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர் வழிபாடு, லட்சுமி ஹோமம், பஞ்சகாவ்யா பூசைகளுடன் துவங்கி, மஹா பூர்ணாஹுதியுடன், எல்லா பூசைகளும் முடிவடைந்தன

மொரிஷியஸ் நாட்டில், இந்தியாவின், 72 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி மாணவியரின் இசை, கலை நிகழ்ச்சி வன்முறை கொடுமையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்த பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி நடை பெற்றது..

மொரிஷியஸ் நாட்டில், ரியம்பெல் என்னும் ஊரில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பச்சை காவடி பால் குட திரு விழா மிக சிறப்பாக நடந்தது.

மொரிஷியஸ் நாட்டில் ஷய்பால் என்னும் ஊரில் உள்ள அருள் தரும் காளி பராசக்தி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாத பால் குட விழா, மிக சிறப்பான முறையில் நடந்தேறியது.

மொரிஷியஸில் டெர்ரே ரூக் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மன திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடந்தேறியது

மொரிஷியஸ் நாட்டில் சித்ரா பவுர்ணமியன்று கத்தற போர்ன்ஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள மலை மீது அமைந்திருக்கும் சிவசுப்பிரமணிய திருக்கோயிலில் , முருக பெருமானுக்கு, காவடி விழா எடுத்து தமிழர்கள் கொண்டாடினர்.

நைஜீரியா தமிழ் சங்கம் சார்பில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை லேகோஸ் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கலிட்டு பெண்கள் கும்மி, ஒயிலாட்டம், கோலாட்டம் என நமது மண்ணிற்கே உரித்தான பொக்கிஷங்களை எடுத்துக்காட்டினர்

1 2 3 4 5 6 7 8 9 10

செப்டம்பர் 26 முதல் மொரிஷியசில் வெங்கடேஸ்வரா வைபோத்சவம்

மொரிஷியசில், கியூபிபில் உள்ள ஹர ஹர தேவஸ்தானத்தின் ஸ்ரீ பாலாஜி திருக்கோயிலின் வெங்கடேஸ்வரா வைபோத்சவம், வரும் செப்டம்பர் மாதம் 26 ...

செப்டம்பர் 24,2018

செப்டம்பர் 29 ல் மொரிஷியஸில் கோவிந்தன் திருவிழா

 வரும் செப்டம்பர் மாதம் 29 ம் தேதி அன்று, தலை நகர் போர்ட் லூயிஸ் அருகில் உள்ள வள்ளி தி ப்ரெட்ஸ் என்ற ஊரில் உள்ள மாரியம்மன் ...

செப்டம்பர் 20,2018

1
Advertisement
Advertisement

Follow Us

ஜெ., தனி டாக்டருக்கு மீண்டும் சம்மன்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், ஜெயலலிதாவின் தனி டாக்டர் சிவக்குமாருக்கு 5வது ...

செப்டம்பர் 26,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us