ஷார்ஜா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. வாசகர் வட்ட தலைவர் திருச்சி சாதிக் அலி தலைமை வகித்தார். நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முஹமதலி வெளியிட சாதிக் அலி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜாவித் கலந்து கொண்டனர்.

துபாய் ஈமான் கல்சுரல் செண்டருக்கு சிறப்பு சேவைக்கான விருதினை துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் ஹுதா அல் புஸ்தகி, சம்மா அல் அக்பாபி ஆகியோர், ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கானிடம் வழங்கினர். பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின், மக்கள் தொடர்பு முதுவை ஹிதாயத், ஆடிட்டர் நாகூர் ரவூப் உடன் இருந்தனர்

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் 151-ம் மாதாந்திர சிறப்புக் கூட்டமானது 'தீபாவளித் திருநாள்' மற்றும் குழந்தைகள் நாள் கொண்டாட்டங்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்விற்கு மன்றத்தின் காப்பாளர் கவிஞர் உ.கு.சிவகுமார் அவைத்தலைமையேற்க, ஆரூர் வாசு ராமநாதன் முன்னிலை வகித்தார்.

துபாயில் உள்ள புனித தாமஸ் ஆர்த்தோடக்ஸ் கதீட்ரல் தேவாலயத்தில் அறுவடைத் திருவிழா மற்றும் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அருட்தந்தை நினன் பிளிப், அமீரகப் பிரமுகர் அப்துல்லா அல் சுவைதி, தும்பே குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் தும்பே முகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

ராசல்கைமாவில் என்.எம்.சி. ஹெல்த்கேர் நிறுவனத்தின் சார்பில் நீரிழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடையோட்டம் நடந்தது. இதில் எமிரேட்ஸ் ஸ்டீவ்டோரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

துபாய் இந்திய துணை தூதரகத்தில் நவராத்திரி எனப்படும் வண்ணங்களின் விழா இந்திய துணை தூதர் விபுல் தலைமையில் வகித்தார். இதனையொட்டி இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் 143வது பிறந்த தினம் இந்திய தூதரக வளாகத்தில் ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. பஹ்ரைனுக்கான இந்திய தூதர் ஆலோக் குமார் சின்ஹா கலந்துகொண்டு ஒற்றுமை தின உரை நிகழ்த்தினார்.

மஸ்கட் இந்திய தூதரகத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளானது தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் முனு மஹவர், தூதரக ஊழியர்கள் பங்கேற்றனர்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கல்விக் குழு ஏற்பாடு செய்த தமிழ் மொழி பயிற்சி வகுப்புகள் சால்மியாவில் உளள அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் - மொழிகள் பயிற்சி மையத்தில் ஆரம்பமானது.

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் அல் நக்தா டேலண்ட் ஜோன் கல்வி நிறுவனத்தில் ரத்ததான முகாம் நடந்தது. துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து இந்த முகாம் சிறப்பாக நடந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10

19.11.2018ல் துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா

துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா இன்ஷா அல்லாஹ் வரும் 19.11.2018 திங்கட்கிழமை மாலை 7.30 மணியளவில் இஷா ...

நவம்பர் 18,2018

1
Advertisement
Advertisement

Follow Us

விடுபடாமல் கணக்கெடுப்பு பணி நடக்கும்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:மின் சீரமைப்பு களப்பணியில் மின்வாரிய ...

நவம்பர் 21,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us