துபாய் முஸ்ரிப் பூங்காவில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் பொங்கல் விழா வெகு சிறப்புடன் நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் விழாவை தமிழக பாரம்பர்யத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

...

துபாய் பால்ம் ஜுமைரா பகுதியில் அட்லாண்டிஸ் ஓட்டல் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதனை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்

...

துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு உற்சாகமாக நடத்தப்பட்டது. இந்த கொண்டாட்டத்தையொட்டி கேக் வெட்டப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பலர் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

...

காங்கிரஸ் தலைவர் ராகுல் முதல் முறையாக பஹ்ரைன் வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில் புரியும் இந்திய வம்சாவழியினரின் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

...

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் நிருத்ய புவனம் சார்பில் அதன் இயக்குனர் புவனேஸ்வரி ரத்னம் மாணவி ஹரிணி ராமலிங்கம் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.

...

வெளிநாட்டு ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் பஹ்ரைனில் துவங்கப்பட்டது. ஹோட்டல் ஜுப்பேர் கேட் உள்ளரங்கில் இன்று நடந்த விழாவில் மன்றம் குத்துவிளக்கேற்றி துவங்கப்பட்டு அதன் செயற்குழு அறிமுகம் செய்யப்பட்டது.

...

அஜ்மானில் உள்ள ஹேபிடட் பள்ளிக்கூடத்தில் ஓவியக் கண்காட்சி நடந்தது. இந்த ஓவியங்கள் அனைத்தும் சமூக தொண்டை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஓவியங்களை பொதுமக்களும், மாணவ, மாணவியரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

...

ஷார்ஜாவில் மாணவியர் பங்கேற்ற ஓட்டப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அமீரகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

...

அஜ்மானில் சர்வதேச குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அஜ்மான் போலீசார் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

...

ஷார்ஜாவில் தும்பே ஆஸ்பத்திரியின் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த இலவச மருத்துவ முகாமை தும்பே ஆஸ்பத்திரியின் நிறுவன தலைவர் டாக்டர் தும்பே முகைதீன் தொடங்கி வைத்தார்.

...

1 2 3 4 5 6 7 8 9 10
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us