துபாயில் உள்ள புனித தாமஸ் ஆர்த்தோடக்ஸ் கதீட்ரல் தேவாலயத்தில் அறுவடைத் திருவிழா மற்றும் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அருட்தந்தை நினன் பிளிப், அமீரகப் பிரமுகர் அப்துல்லா அல் சுவைதி, தும்பே குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் தும்பே முகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

ராசல்கைமாவில் என்.எம்.சி. ஹெல்த்கேர் நிறுவனத்தின் சார்பில் நீரிழிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடையோட்டம் நடந்தது. இதில் எமிரேட்ஸ் ஸ்டீவ்டோரிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

துபாய் இந்திய துணை தூதரகத்தில் நவராத்திரி எனப்படும் வண்ணங்களின் விழா இந்திய துணை தூதர் விபுல் தலைமையில் வகித்தார். இதனையொட்டி இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் 143வது பிறந்த தினம் இந்திய தூதரக வளாகத்தில் ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. பஹ்ரைனுக்கான இந்திய தூதர் ஆலோக் குமார் சின்ஹா கலந்துகொண்டு ஒற்றுமை தின உரை நிகழ்த்தினார்.

மஸ்கட் இந்திய தூதரகத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளானது தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் முனு மஹவர், தூதரக ஊழியர்கள் பங்கேற்றனர்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கல்விக் குழு ஏற்பாடு செய்த தமிழ் மொழி பயிற்சி வகுப்புகள் சால்மியாவில் உளள அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் - மொழிகள் பயிற்சி மையத்தில் ஆரம்பமானது.

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் அல் நக்தா டேலண்ட் ஜோன் கல்வி நிறுவனத்தில் ரத்ததான முகாம் நடந்தது. துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து இந்த முகாம் சிறப்பாக நடந்தது.

குவைத் தமிழோசை கவிஞர் மன்றத்தின் 150-ம் மாதாந்திர சிறப்பு கலை-இலக்கியக் கூட்டம் 'ஊக்கத்தமிழ் மாணிக்க விழா!'-வாக மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப் பெற்றது.

ரெட்டி நலப்பேரவை- குவைத் மற்றும் மெட்ரோ மெடிக்கல் மருத்துவமனை இணைந்து நடத்திய 'மாபெரும் இலவச மருத்துவ முகாமை' இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் சக்லானி தொடங்கி வைத்தார்

அஜ்மான் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 12-வது மருத்துவ மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 65 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ...

ஆகஸ்ட் 13,2018

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

 தலைவர்: முனைவர். பெ. கார்த்திகேயன்பொது செயலாளர்: திரு. க. செந்தில் குமார்பொருளாளர்: திரு. மு. முகமது அபுசாலிசெயற்குழு ...

ஆகஸ்ட் 01,2018

பாரதி தமிழ் சங்கம், பஹ்ரைன்

  தலைவர் : திருச்சி சரவணன்செயலாளர் : G. பெரிய சாமிபதவிக்காலம்: 2018-2010முகவரி: தபால் பெட்டி எண்: 3264, மனாமா, பஹ்ரைன்மின்னஞ்சல்: ...

ஆகஸ்ட் 01,2018

ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு - பஹ்ரைன்

தலைவர் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் தலைவர் : அப்துல் கையூம்ஒருங்கிணைப்பாளர் : கவிஞர் நாகூர் அப்துல் ...

ஆகஸ்ட் 01,2018

1
Advertisement
Advertisement

Follow Us

புயல் பாதிப்பு எண்கள் அறிவிப்பு

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக 73057 15721 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கடலூர் மாவட்ட நிர்வாகமும், vஅவசர கால உதவிக்கு 1077 ...

நவம்பர் 16,2018  IST

Comments

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us