சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ நாராயணா மிஷன் மூத்தோர், இயலாதோர் இல்லத்தில் டாக்டர் அப்துல் கலாம் விஷன் சொசைட்டி கொண்டாடிய தீபாவளி விழாவில், பள்ளிச் சிறுமியின் வயலின் இசைக்க, இல்லத்தில் வாழும் முதியவரொருவர் திரைப்படப் பாடலைப் பாடினார்.

தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீ மிதித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் இவ்விழாவில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்ளுவது வழக்கம்.

சிங்கப்பூர் அருள்மிகு வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒன்பது நாட்கள் யாதுமாகி நின்ற அன்னை காளிகாம்பாள் பத்தாம் நாள் குதிரை வாகனத்தில் சர்வ அலங்கார பூஷணியாக ஜொலித்த கண்கொள்ளாக் காட்சி

சிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை வசந்த மண்டபத்தில் உலகளந்த பெருமாளின் அலங்காரத் திருக் கோலம் – தாயாரின் ஊஞ்சல் சேவை – ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளின் தாமரை மலர்க் கோலம் கண்கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்தது.

சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ஸ்ரீ காமாட்சி அம்மன் உட்பட பல அலங்காரங்களில் அம்பாள் காட்சியளித்தார். ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிங்கப்பூர் ஆலயங்களில் குரு பெயர்ச்சியை ஒட்டி ஹோமங்களும் யாகங்களும் வழக்கமான பாரம்பரிய முறையில் நடைபெற்றன. சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி பரிஹார மகா யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையன்று புதிய கிரீடத்துடனும் திருவாபரணத்துடனும் சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார்

சிங்கப்பூர் ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் புரட்டாசி மாதத்தையொட்டி ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஸ்ரீ சீதா ராமர் தெய்விகத் திருமண வைபவத்தை அம்மன்குடி வி.சீனிவாச பட்டாச்சாரியார் கோலாகலமாக நடத்தி வைத்தார்

1 2 3 4 5 6 7 8 9 10
Advertisement

அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்

    அன்னலட்சுமி, சைவ உணவகம், சிங்கப்பூர்ANNALAKSHMIமுகவரிAddressCentral Square, #01-0420 Havelock RoadSingapore ...

அக்டோபர் 30,2017  IST

Comments

தமிழ் முரசு- சிங்கப்பூர்

தமிழ் முரசு- சிங்கப்பூர்இணையதள முகவரி: http://www.tamilmurasu.com.sg/தொடர்புக்கு: http://www.sph.com.sg/contact-us/for-media/media-contacts/Tamil ...

செப்டம்பர் 27,2017  IST

Comments

Advertisement

Follow Us

Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us