|
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றது
|
More Picture |
ஆகஸ்ட் 24,2008,23:09 IST
|
|
|
|
|
பீஜிங் : பீஜிங்கில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா விழா நிகழ்ச்சிகள் பேட்ஸ் நெஸ்ட் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சி துவக்கமாக வண்ண ஒளி வெள்ளத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகச நிகழ்ச்சிகளும் அரங்கேறின. தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற நாடுகள் கொடி அணிவகுப்பு நடத்தின. இறுதியில் ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு ஒலிம்பிக் போட்டிகள் முடித்து வைக்கப்பட்டன. பின்னர் ஒலிம்பிக் கொடியை பீஜிங் நகர மேயர் லண்டன் நகர மேயர் போரிஸ் ஜான்சனிடம் ஒப்படைத்தார். நிறைவு விழா நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர். |
|
|
|
|
|
|
ஹேண்ட் பால் போட்டியில் தங்கத்தை பிரான்ஸ் அணி வென்றது
|
|
ஆகஸ்ட் 24,2008,16:39 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹேண்ட் பால் பைனல் இன்று நடந்தது. பிரான்ஸ், ஐஸ்லாந்து அணிகள் மோதின. தொடக்கம் முதலாகவே ஆதிக்கம் செலுத்தி வந்த பிரான்ஸ் அணியினர், ஐஸ்லாந்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் பெற்றனர். வெள்ளிப்பதக்கம் ஐஸ்லாந்துக்கு கிடைத்தது. ஸ்பெயின் அணியினர் வெண்கல பதக்கம் பெற்றனர். |
|
|
|
|
வாட்டர் போலோ: அமெரிக்காவை தோற்கடித்து ஹங்கேரி தங்கத்தை கைப்பற்றியது.
|
|
ஆகஸ்ட் 24,2008,15:26 IST
|
|
|
|
|
பீஜிங்: ஆண்களுக்கான வாட்டர் போலோ போட்டியில் இன்று நடந்த பைனலில் அமெரிக்காவும், ஹங்கேரி அணிகளும் மோதின. இதில் அமெரிக்காவை 14-10 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி வென்று தங்கத்தை கைப்பற்றியது. தோற்ற அமெரிக்காவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. வெண்கலப் பதக்கத்திற்காக நடந்த போட்டியில் செர்பியாவும், மோன்ட்னெக்ரோவும் ஆடியது. இதில் செர்பிய அணி வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. |
|
|
|
|
சூப்பர் ஹெவி வெயிட் பிரிவு குத்துச்சண்டை: இத்தாலி தங்கம் வென்றது
|
|
ஆகஸ்ட் 24,2008,14:30 IST
|
|
|
|
|
பீஜிங்: குத்துச்சண்டையில் கடைசி பைனலாக சூப்பர் ஹெவி வெயிட் பிரிவு அமைந்தது. இந்தப் போட்டியில் சீனா மற்றும் இத்தாலி நாடுகளின் வீரர்கள் எதிர்கொண்டனர். சீன ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் ஆடிய ஜிலேய் ஜாங், மோசமாக ஆடினார். அதிக புள்ளிகள் முன்னிலை பெற்ற இத்தாலியின் ராபர்ட்டோ காமரெல்லி கடைசி சுற்றில் அதிரடியாக விட்ட குத்துக்களால் நிலைகுலைந்த சீன வீரர் தோல்வியை ஒப்புக்கொண்டார். இத்தாலி வீரர் ராபர்ட்டோ காமரெல்லி தங்கத்தை வெல்ல, சீனாவின் ஜிலேய் ஜாங்கிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. |
|
|
|
|
ஆண்கள் பேஸ்கட்பால் பிரிவில் அமெரிக்க அணிக்கு தங்கம்
|
|
ஆகஸ்ட் 24,2008,14:03 IST
|
|
|
|
|
பீஜிங்: ஆண்கள் பேஸ்கட்பால் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் அமெரிக்காவும், ஸ்பெயினும் மோதியது. இதில் தொடக்கத்தில் இரு அணியினரும் மாறி, மாறி புள்ளிகளை எடுத்தனர். முதல் மற்றும் இரண்டாவது பகுதியில் சிறிய அளவில் முன்னிலை வகித்தது அமெரிக்கா. ஆனால் அடுத்து 3வது பகுதியில் 9 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னேறியது. பரபரப்பான நான்காவது பகுதியிலும் தொடர்ந்து முன்னிலையை தக்க வைத்துக்கொண்ட அமெரிக்க அணியினர் கடைசி நிமிடத்தில் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 11-8-10-7என்ற கணக்கில் போட்டியில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றனர். கடைசி வரைக்கும் போராடிய ஸ்பெயின் அணியினருக்கு வெள்ளிப்பதக்கம் தான் கிடைத்தது. |
|
|
|
|
69கி.கி., குத்துச்சண்டையில் கஜகஸ்தானுக்கு தங்கம்
|
|
ஆகஸ்ட் 24,2008,13:40 IST
|
|
|
|
|
பீஜிங்:குத்துச்சண்டையில் 69கி.கி., வெல்ட்டர் பிரிவில் பைனலில் கியூபா மற்றும் கஜகஸ்தான் வீரர்கள் சந்தித்தனர். முதல் சுற்றில் கியூபாவின் கார்லஸ் பான்டியாக்ஸ் சூரஜ் முன்னிலை பெற்றார். ஆனால் இரண்டு முறை ஆசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற கஜகஸ்தானின் பாக்ட் சர்செக்பாயவ் அடுத்த சுற்றில் அதிக புள்ளிகளை பெற்று அபார முன்னிலை அடைந்தார். தொடர்ந்து 3வது மற்றும் 4வது சுற்றிலும் முன்னிலையை தக்க வைத்துக்கொண்ட கஜகஸ்தான் வீரர் அசத்தலாக, கியூபா வீரரை வீழ்த்தி தங்கத்தை பறித்துச் சென்றார். கியூபாவின் கார்லசுக்கு வெள்ளி கிடைத்தது. |
|
|
|
|
|
|
ஹேண்ட் பால் போட்டியில் வெண்கலத்தை ஸ்பெயின் தட்டிச் சென்றது
|
|
ஆகஸ்ட் 24,2008,12:39 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹேண்ட் பால் பைனல் நடந்தது. இதில் குரோஷியா, ஸ்பெயின் அணிகள் மோதின. வெண்கலப்பதக்கத்திற்காக நடந்த இந்தப்போட்டியில் ஸ்பெயின் வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி குரோஷியாவை வீழ்த்தி வெண்கல பதக்கம் பெற்றனர். |
|
|
|
|
குத்துச்சண்டை லைட் வெயிட் பிரிவில் ரஷ்யாவுக்கு தங்கம்
|
|
ஆகஸ்ட் 24,2008,12:30 IST
|
|
|
|
|
பீஜிங்: குத்துச்சண்டையில் லைட் வெயிட், 60கி.கி., பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் ரஷ்ய மற்றும் பிரான்ஸ் வீரர்கள் எதிர் கொண்டனர். முதல் சுற்றில் ரஷ்யாவின் அலெக்ஸி டிஷ்சென்கோ முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றிலும் புள்ளிகளை அதிகரித்துக் கொண்ட ரஷ்ய வீரர், தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரான்சின் தாவூடாவும் பலத்த போட்டியை வெளிப்படுத்த இரு வீரர்களுக்கும் புள்ளிகள் பெறுவது கடினமானது. நான்கு சுற்று முடிவில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் ரஷ்ய வீரர் வென்று தங்கத்தை பெற்றார். பிரான்ஸ் வீரருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. |
|
|
|
|
குத்துச்சண்டையில் மங்கோலிய வீரர் தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 24,2008,11:58 IST
|
|
|
|
|
பீஜிங்:குத்துச்சண்டையில் இன்று நடந்த 54கி.கி., பான்டம் வெயிட் பிரிவில் கியூபா, மங்கோலிய வீரர்கள் மோதினர். ஆரம்பம் முதலாகவே நல்ல முன்னிலையில் இருந்த மங்கோலியாவின் உகன் படர் எங்பட் வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றினார். கியூபா வீரர் யாங்கீல் லியான் அலர்கோன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். |
|
|
|
|
வாலிபால் தங்கம் வென்றது அமெரிக்கா
|
|
ஆகஸ்ட் 24,2008,11:45 IST
|
|
|
|
|
பீஜிங்: ஒலிம்பிக் ஆண்கள் வாலிபால் பிரிவில் பைனல் இன்று நடந்தது. அமெரிக்கா, பிரேசில் அணிகள் எதிர்கொண்டன. இந்த போட்டியில் முதல் செட்டை பிரேசில் கைப்பற்றியது. அடுத்தடுத்த செட்களில் தனது அதிரடியை வெளிப்படுத்திய அமெரிக்கா தொடர்ந்து இரு செட்களை வென்றது. நான்காவது செட்டில் பலத்த போட்டி இருந்த போதிலும், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெரிக்கா செட்டை கைப்பற்றியது. இறுதியில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது. பிரேசில் அணியினர் வெள்ளியுடன் வெளியேறினர். |
|
|
|
|
ஆண்களுக்கான குத்துச்சண்டையில் சீனாவுக்கு தங்கம்
|
|
ஆகஸ்ட் 24,2008,11:23 IST
|
|
|
|
|
பீஜிங் : ஆண்களுக்கான குத்துசண்டை, லைட் ப்ளை பிரிவில் சீன வீரர் ஜவ்சிம்மிங் தங்கம் வென்றார். வெள்ளி பதக்கத்தை மங்கோலிய வீரர் ப்யூர்டோர்ஜ் செரடாம்பா தட்டி சென்றார். |
|
|
|
|
|
|
ஆண்கள் பேஸ்கட் பால்: அர்ஜென்டினா வெண்கலத்தை கைப்பற்றியது
|
|
ஆகஸ்ட் 24,2008,11:14 IST
|
|
|
|
|
பீஜிங்:ஆண்களுக்கான பேஸ்கட் பால் பிரிவில் வெண்கலத்திற்கான போட்டியில் அர்ஜென்டினா, லிதுனியா அணிகள் மோதியது. மிகுந்த இழுபறிக்கு இடையே நடந்த இந்த போட்டியில் 87-75 என்ற புள்ளிக்கணக்கில் அர்ஜென்டினா அணியினர் வென்று வெண்கலத்தை கைப்பற்றினர். |
|
|
|
|
பெண்கள் ரிதமிக் ஜிம்னாஸ்டிக்கில் ரஷ்யாவுக்கு தங்கம்
|
|
ஆகஸ்ட் 24,2008,10:02 IST
|
|
|
|
|
பீஜிங்: இன்று அணிகளுக்கு இடையிலான ரிதமிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகளின் பைனல் நடந்தன. இப்போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற ரஷ்ய அணியினர் தங்கம் வென்றனர். அடுத்த இடத்தில் வந்த சீன பெண்கள் அணிக்கு வெள்ளி கிடைத்தது. வெண்கலம் மூன்றாவதாக வந்த பெலாரஸ் அணிக்கு கிடைத்தது. |
|
|
|
|
ஆண்கள் வாலிபாலில் ரஷ்யா வெண்கலம் வென்றது
|
|
ஆகஸ்ட் 24,2008,08:56 IST
|
|
|
|
|
பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் ஆண்களுக்கான வாலிபால் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடந்தது. இதில் ரஷ்யா, இத்தாலி அணிகள் மோதின. முதலில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷ்ய அணியினர் 3-0 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை கைப்பற்றினர். |
|
|
|
|
ஆண்கள் மாரத்தன்: புதிய ஒலிம்பிக் சாதனை
|
|
ஆகஸ்ட் 24,2008,08:15 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் கென்ய வீரர் சாமுவேல் காமு வான்சிரு புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கம் வென்றார். போட்டி தூரத்தை 2மணி 6.32நிமிடத்தில் கடந்து சாதித்துள்ளார். இதற்கு முன்பு 2மணி 7.16 நிமிடத்தில் கடந்ததே சாதனையாக இருந்தது. இரண்டாவதாக வந்த மொராக்கோவின் ஜாக்வாடு சாரிப் வெள்ளிப்பதக்கம் வென்றார். எத்தியோப்பியாவின் டி செகவ் கிபிடீக்கு வெண்கலம் கிடைத்தது. |
|
|
|
|
ஆண்கள் டைவிங்(10மீ., பிளாட்பார்ம்): அமெரிக்க வீரர் தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 23,2008,20:52 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 10மீ., பிளாட்பார்ம் டைவிங்கில் அமெரிக்காவின் மாத்திவ் மிட்சம் தங்கம் வென்றார். சீனாவின் லக்சின் சோயூ வெள்ளி பதக்கமும், ரஷ்யாவின் கால்பரின் வெண்கலப் பதக்கமும் வென்றனர். |
|
|
|
|
|
|
ஆண்கள் குத்துச்சண்டை(ஹெவி 91கி.,): ரஷ்ய வீரர் தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 23,2008,20:52 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹெவி 91கி., எடைபிரிவு குத்துச்சண்டை போட்டியில் ரஷ்யாவின் ரகிம் சக்கிவ் தங்கம் வென்றார். இத்தாலியின் சிலிமென்டே ரஸ்சோ வெள்ளி பதக்கம் பெற்றார். அரையிறுதியில் தோல்வி அடைந்த கியூபாவின் அகோஸ்டா மற்றும் அமெரிக்காவின் வில்டர் வெண்கலப் பதக்கம் வென்றனர். |
|
|
|
|
பெண்கள் கூடைப்பந்து: ரஷ்யா வெண்கலம் வென்றது
|
|
ஆகஸ்ட் 23,2008,20:52 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் ரஷ்யா, சீனாவை 94-81 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது. |
|
|
|
|
ஆண்கள் பேஸ்பால்: கொரியா தங்கம் வென்றது
|
|
ஆகஸ்ட் 23,2008,20:52 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான பேஸ்பால் பைனலில் கொரியா, கியூபாவை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. கியூபா வெள்ளி பதக்கம் பெற்றது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அமெரிக்கா, ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் வென்றது. |
|
|
|
|
பெண்கள் உயரம் தாண்டுதல்: பெல்ஜியம் வீராங்கனை தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 23,2008,20:51 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பெல்ஜியத்தின் தியா கெலிபவுட் தங்கம் வென்றார். இவரை தொடர்ந்து குரோஷியாவின் பிலங்கா விலாசிக் வெள்ளி பதக்கமும், ரஷ்யாவின் அனா சிசரோவா வெண்கலப் பதக்கமும் வென்றனர். |
|
|
|
|
பெண்கள் வாலிபால்: பிரேசில் தங்கம் வென்றது
|
|
ஆகஸ்ட் 23,2008,20:51 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வாலிபால் பைனலில் பிரேசில், அமெரிக்காவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. அமெரிக்கா வெள்ளி பதக்கம் பெற்றது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனா, கியூபாவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது. |
|
|
|
|
|
|
ஆண்கள் ஹாக்கி: ஜெர்மனி தங்கம் வென்றது
|
|
ஆகஸ்ட் 23,2008,20:51 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. ஸ்பெயின் வெள்ளி பதக்கம் பெற்றது. வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்தை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது. |
|
|
|
|
ஆண்கள் டேக்வோண்டோ(80கி.,): கொரிய வீரர் தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 23,2008,19:50 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான டேக்வோண்டோ 80கி., எடைபிரிவில் கொரியாவின் டாங்மின் சா தங்கம் வென்றார். கிரீசின் நிக்கோலைடிஸ் வெள்ளி பதக்கமும், கியூபாவின் மடோஸ் மற்றும் நைஜீரியாவின் சுக்வுமெரிஜி வெண்கலம் வென்றனர். |
|
|
|
|
பெண்கள் டேக்வோண்டோ(67கி.,): மெக்சிகோ வீராங்கனை தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 23,2008,19:49 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான டேக்வோண்டோ 67கி., எடைபிரிவில் மெக்சிகோவின் எஸ்பினோசா தங்கம் வென்றார். இவரை தொடர்ந்து நார்வேயின் சோல்ஹிம் வெள்ளி பதக்கமும், பிரேசிலின் பிளவிக்னா மற்றும் இங்கிலாந்தின் ஸ்டீவன்சன் வெண்கலப் பதக்கம் வென்றனர். |
|
|
|
|
பெண்கள் ஜிம்னாஸ்டிக் (ரிதமிக் தனிநபர் ஆல்-ரவுண்டர்): ரஷ்ய வீராங்கனை தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 23,2008,19:49 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் ரிதமிக் தனிநபர் ஆல்-ரவுண்டர் பிரிவில் ரஷ்யாவின் கனயிவா தங்கம் வென்றார். இவரை தொடர்ந்து பெலாரசின் இனா சுகோவா வெள்ளி பதக்கமும், <உக்ரைனின் அனா பெசசோனோவா வெண்கலப் பதக்கமும் வென்றனர். |
|
|
|
|
ஆண்கள் 4*400மீ., தொடர் ஓட்டம்: அமெரிக்க வீரர்கள் தங்கம் வென்றனர்
|
|
ஆகஸ்ட் 23,2008,19:48 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 4*400மீ., தொடர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர்கள் தங்கம் வென்று அசத்தினர். இவர்களை தொடர்ந்து பகாமஸ் வீரர்கள் வெள்ளி பதக்கமும், ரஷ்ய வீரர்கள் வெண்கலப் பதக்கமும் வென்றனர். |
|
|
|
|
|
|
ஆண்கள் குத்துச்சண்டை(மிடில் 75கி.,): இங்கிலாந்து வீரர் தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 23,2008,19:48 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான மிடில் 75கி., எடைபிரிவு குத்துச்சண்டையில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் திகலே தங்கம் வென்றார். கியூபாவின் எமிலியோ கோரியே பேயக்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார். அரையிறுதியில் தோல்வி அடைந்த அயர்லாந்தின் ஜான் சுதர்லாந்து மற்றும் இந்தியாவின் விஜேந்தர் குமார் வெண்கலம் வென்றார்கள். |
|
|
|
|
ஆண்கள் குத்துச்சண்டை(லைட் வெல்டர் 64கி.,): டொமினிக்கன் குடியரசு வீரர் தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 23,2008,19:48 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான லைட் வெல்டர் 64கி., எடைபிரிவு குத்துச்சண்டை போட்டியில் டொமினிக்கன் குடியரசு வீரர் பெலிக்ஸ் தியாஸ் தங்கம் வென்றார். தாய்லாந்தின் மானுஸ் பூஞ்சும்னாங் வெள்ளி பதக்கம் வென்றார். அரையிறுதியில் தோல்வி அடைந்த கியூபாவின் இக்லிசியாஸ் மற்றும் பிரான்சின் வாஸ்டின் வெண்கலம் வென்றார்கள். |
|
|
|
|
பெண்கள் 4*400மீ., தொடர் ஓட்டம்: அமெரிக்க வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
|
|
ஆகஸ்ட் 23,2008,19:46 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4*400மீ., தொடர் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனைகள் தங்கம் வென்று ஜொலித்தனர். இவர்களை தொடர்ந்து ரஷ்ய வீராங்கனைகள் வெள்ளி பதக்கமும், ஜமைக்கா வீராங்கனைகள் வெண்கலப் பதக்கமும் வென்றனர். |
|
|
|
|
ஆண்கள் 5000மீ., ஓட்டம்: எத்தியோபியாவின் பிகெலே தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 23,2008,19:46 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 5000மீ., ஓட்டத்தில் எத்தியோபியாவின் கெனினிசா பிகெலே ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார். கென்யாவின் எலியூட் கிப்சொகி வெள்ளி பதக்கமும், மற்றொரு கென்ய வீரர் எட்வின் செரூயாட் சோய் வெண்கலப் பதக்கமும் வென்றனர். |
|
|
|
|
ஆண்கள் ஈட்டி எறிதல்: நார்வே வீரர் தங்கம் வென்றார்
|
|
ஆகஸ்ட் 23,2008,19:45 IST
|
|
|
|
|
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நார்வேயின் ஆன்டிரிஸ் தோர்கில்ட்சன் ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார். லட்வியாவின் அய்னார்ஸ் கோவல்ஸ் வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் தேரோ பிட்கமகி வெண்கலப் பதக்கமும் வென்றனர். |
|
|
|
|
|
|
ஆண்கள் ஹாக்கி: வெண்கலம் வென்றது ஆஸ்திர | |