தமிழகத்தின் கண்ணாடி

24 Feb 2018
17 mins ago
1 / 15
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., 70, வது பிறந்தநாளை யொட்டி அம்மா ஸ்கூட்டர் மானிய விலை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார் உடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்பன்னீர்செல்வம் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்,லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர்.இடம்.சென்னை, கலைவாணர் அரங்கம்.
1 hr ago
2 / 15
தமிழக அரசின் மகளிருக்கான இலவச மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கி வைக்க வந்த பிரதமர் மோடியை வரவேற்க வந்த நடன கலைஞர்கள். இடம்: சேப்பாக்கம், சென்னை.
1 hr ago
3 / 15
தமிழக அரசின் மகளிருக்கான இலவச மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கி வைக்க வந்த பிரதமர் மோடி. இடம்: சேப்பாக்கம், சென்னை.
2 hrs ago
4 / 15
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இடம் : சேப்பாக்கம், சென்னை.
3 hrs ago
5 / 15
கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் ஆசியாவின் முதலாவது மொபைல் ஸ்ட்ரோக் யூனிட் வாகனத்தை கே.எம்.சி.எச் தலைவர் நல்ல பழனிச்சாமி, துணை தலைவர் தவமணி, மாநகராட்சி கமிஷ்னர் விஜயகார்த்திகேயன்,காவல் ஆணையர் பெரியய்யா, காவல் துறை தலைவர் மேற்கு பாரி, கலெக்டர் ஹரிஹரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
3 hrs ago
6 / 15
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே விற்பனைக்கு வந்த முழாம் பழம். இடம்:திருப்பூர், காலேஜ் ரோடு.
3 hrs ago
7 / 15
கோவை அவினாசி ரோட்டிலுள்ள ஜென்னீஸ் ஹோட்டலில் ஓவிய கண்காட்சி நடந்து வருகிறது.
4 hrs ago
8 / 15
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் உருவ சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் திறந்து வைத்தனர். இடம்:ராயப்பேட்டை.
5 hrs ago
9 / 15
மாவட்ட மாநாட்டை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்ற சத்துணவு ஊழியர்கள்.
5 hrs ago
10 / 15
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இடம்: சேப்பாக்கம்.
7 hrs ago
11 / 15
கோவை எஸ்.பி., அலுவலகத்தில் காவல்துறை லோகோவை எஸ்.பி., மூர்த்தி திறந்து வைத்து பார்வையிட்டார்.
8 hrs ago
12 / 15
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
8 hrs ago
13 / 15
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளில் செல்பி எடுத்து மகிழும் தொண்டன். இடம்: அவினாசி ரோடு, கோவை.
12 hrs ago
14 / 15
ஆதவனின் அழகை காண்பது என்றும் திகட்டாத ஆனந்தமே..! இடம் : கோவை இருகூர்
14 hrs ago
15 / 15
விருது: இந்திய-ஆஸ்திரேலியா ஆசோசியேஷன் சார்பில் இந்திய,ஆஸ்திரேலியா மக்களுக்காக சேவை புரிந்தவருக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியாவின் தூதரக அதிகாரி சூசன் கிரேஸ் விருதினை ஹெலன் மானிக்கு வழங்கினார்.அருகில் இந்திய-ஆஸ்திரேலியா ஆசோசியேஷன் தலைவர் சூசன் மார்த்தாண்டம் மற்றும் துணை தலைவர் யூஜின் பிண்டோ. இடம்:அண்ணா சாலை.
Advertisement