நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்:

04-ஜன-2018
1 / 10
முகாமுக்கு போறேன்!: யானைகள் புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் துவங்குவதை முன்னிட்டு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலுள்ள கல்யாணி யானையை குருக்கள் பூஜை செய்து அனுப்பினர்.
2 / 10
ஆபத்தை உணராமல்: தொண்டி ஜெட்டி பாலத்தில் ஆபத்தை உணராமல் விளையாடும் சிறுவர்கள்.
3 / 10
மாப்பிள்ளை சம்பா: சிவகங்கை அருகே மாப்பிள்ளை சம்பா நெற்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
4 / 10
மீன் பிடி திருவிழா: இளையான் குடி பழங்குளம் கண்மாயில் கிராம மக்கள் ஆர்வத்துடன் மீன் பிடித்தனர்.
5 / 10
சாவி அறுப்பு: திருப்பத்தூர் அருகே மணக்குடியில் சாவி அறுக்கப்பட்ட வயல்.
6 / 10
இயற்கை அழகு!: கோத்தகிரி அருகே கோடநாடு காட்சிமுனையில், இயற்கை காட்சிகளை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்.
7 / 10
நடவுப்பணி: ஆண்டிப்பட்டி அருகே குன்னூரில் நெல் வயல்களில் நடவுப்பணி துவங்கியது.
8 / 10
ரம்மியக்காட்சி: நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் சண்முகாநதி அணை.
9 / 10
தமிழர் பண்பாடு!: நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பருத்தி புடவைகளை அணிந்து வந்த கல்லூரி மாணவியர். இடம்: வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி, அண்ணா நகர்.
10 / 10
கொட்டும் பனியினிலே..!: பழநியில் பெய்யும் கடும் பனிப்பொழிவு காரணமாக பைபாஸ் ரோடு வயல்வெளிகளில் காலையில் சூழ்ந்துள்ள பனி மூட்டம்.