NRIஆல்பம்:

ஆஸ்திரேலியா
1 / 10
ஆஸ்திரேலியா, விக்டோரியா மாகாணம், கர்ரம் டவுண்ஸில் உள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு கோயிலில், தைப்பூசத் திருவிழாவை ஒட்டி, ஸ்ரீ சுப்ரமணியர் ரதோற்சவம் நடைபெற்றது.
2 / 10
ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் ஒனேஹுங்கவில் உள்ள சாந்தி நிவாசில் தைப்பூசம் திருவிழா, முருகனுக்கு அபிஷேகத்துடன் நடைபெற்றது
3 / 10
இசைக்கேற்ப மாறும் வண்ண விளக்குகளால் ஆக்லாந்து துறைமுகப் பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. துறைமுக பாலம், 90 ஆயிரம் எல்ஈடி பல்புகளாலும் 200 பிரமாண்ட விளக்குகளாலும் ஒளியூட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சூரிய சக்தியில் ஒளி தருகின்றன.
4 / 10
ஆஸ்திரேலியா மெல்பேணில் விக்டோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்படுகின்ற தமிழர் விளையாட்டுவிழா இந்த ஆண்டும் மெல்பேர்ண் கிழக்கு பேர்வூட் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்றது
5 / 10
ஆஸ்திரேலியத தலைநகர் கான்பர்ராவில் உள்ள இந்திய தூதரகத்தில், இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் ஏ.எம்.கோண்டேன், தேசியக் கொடியை ஏற்றி, இந்திய ஜனாதிபதியின் உரையை வாசித்தார்
6 / 10
ஆண்டாள் குறித்து முரணான கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து நியூசிலாந்து, ஹாமில்டன் ஸ்ரீ பாலாஜி கோயிலில் நியூஸிலாந்தில் உள்ள அனைத்து இந்து மக்களின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
7 / 10
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரை கடந்த 79 ஆண்டாக இல்லாத அதிகபட்ச வெயில் சுட்டெரிக்கிறது. வெயில் கொடுமையைத் தாங்க முடியாத மக்கள் பெருமளவில் சிட்னி கடற்கரையில் குவிந்தனர். பெண்கள் பெரிய குடையுடன் பிக்னி உடையில் காணப்பட்டனர்.
8 / 10
ஆக்லாந்தில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் ஹாமில்டன் என்ற நகரில் அமைந்துள்ள நியூசிலாந்து பாலாஜி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
9 / 10
ஆக்லாந்து தமிழ் சங்கம் 'மண்ணில் இந்த காதல் என்ற தலைப்பில் பின்னணி பாடகர் மலேஷியா வாசுதேவன் மகன் யுகேந்திரனின் மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தொடக்கத்தில் ரத்னா வெங்கட்டின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
10 / 10
நியூசிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்பே கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு எல்லா பகுதிகளிலும் நடக்கும். அந்த அணிவகுப்பு பார்க்க கண் கொள்ளா காட்சியாகும். எல்லெர்ஸ்லி பகுதியில் நடந்த அணிவகுப்பில் ஒரு காட்சி.
Advertisement