NRIஆல்பம்:

ஐரோப்பா
1 / 10
ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில், தமிழ் புத்தாண்டான சித்திரை 1 அன்று கொலோன் நகர் வாழ் தமிழர்களால் 'ரைன் தமிழ்க் குழுமம்' என்ற புதிய தமிழ் அமைப்பு தொடங்கப்பட்டது.
2 / 10
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழாவில் குழந்தைகளின் கோலாட்டம்
3 / 10
சுவிற்சர்லாந்து வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் வந்துள்ள மியன்மார் சிறப்பு அரசியல் வெளிவிவகார குழு, பேர்ன் நகரில், தமிழ்வழிபாட்டுத் திருக்கோவில் ஞானலிங்கேச்சுரத்திற்கு வருகை அளித்தது.
4 / 10
பிரான்சில் பங்குனி உத்திரம் அருள் மிகு கைவல்ய கற்பாகவிநாயகர் ஆலயத்தில் பாரிஸுக்கு அருகில் உள்ள கிரிங்கி நகரில் சனாதன தர்ம பக்த பரிபாலான சங்கததாரால் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
5 / 10
ஸ்டாக்ஹோம் தமிழ் சங்க தலைவர்: இலட்சுமிநாராயணன் சதானந்தன்; செயலாளர்: நித்யா யுவராஜ்; பொருளாளர்: ஹரிபிரசாத் ஹரி; உறுப்பினர்கள் அபிநவ் வெங்கட்ராமன், ப.க. பாலகுமார், வைரமயில் சங்கரநாராயணன் சுரேஷ், முத்துராமலிங்கம், மீனாட்சி கல்யாணசுந்தரம்
6 / 10
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் குரோய்டன் தமிழ் கழகமின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான வில்லுப்பாட்டில் தமிழர்களின் பொங்கல் கொண்டாட்டத்தை விளக்கினர்.
7 / 10
பிரான்சில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் பொங்கல் திருநாள் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ப்ரங்கோ- இந்திய கலை மற்றும் கலாச்சார பண்பாட்டு சங்கத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
8 / 10
இங்கிலாந்து, மான்செஸ்டர் மாநகரில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் ஒயிலாட்டம், கோலாட்டம், கிராமிய இசை, பரதம், பறையிசை, பட்டிமன்றம் என பல கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
9 / 10
சுவிற்சர்லாந்தின் பேர்ன்நகரில் சைவநெறிக்கூடம் - அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் ஏற்பாட்டில் ஐரோப்பாத்திடல் முன்றலில் தமிழர் மரப்புப்படி கோலமிட்டு, விறகு வைத்து மண் அடுப்பில் பெரும் பொங்கல்விழா நடாத்தப்பட்டது.
10 / 10
சுவிட்சர்லாந்து, பேர்ன் நகரில் ஞானலிங்கேச்சுரத்தில், திருவெம்பாவை, முழுமதி வழிபாட்டுடன் புத்தாண்டும் திருவாதிரை வழிபாடும் நடைபெற்றது. தமிழில் வழிபாடு நடைபெற்றது. யாவரும் தம் கைகளால் இறைவனுக்கு நேரடியாக வழிபாட்டினை ஆற்றினர்.
Advertisement