தமிழகத்தின் கண்ணாடி

20 Apr 2018
37 mins ago
1 / 10
மஹா கும்பாபிஷேகம்...: சென்னை, எண்ணூர், அன்னை சிவகாமிநகர் பீலீகான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவிலில் பல கோடி ரூபாயில் பிரதிஸ்டை செய்யப்பட்ட அங்காள ஈஸ்வரி மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
1 hr ago
2 / 10
கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் தேசிய ஜூனியர் தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை .
1 hr ago
3 / 10
கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் தேசிய ஜூனியர் தடகள போட்டியில் ஆண்களுக்கான 5000 மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற வீரர்கள்
2 hrs ago
4 / 10
மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து சிறு மற்றும் குறு பவுண்டரி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இடம் கோவை விளாங்குறிச்சி
2 hrs ago
5 / 10
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் வெயிலோடு விளையாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது .
2 hrs ago
6 / 10
தினமலர் நாளிதழ் விற்பனை பிரிவு ஏஜன்ட் பார்த்தசாரதி-ஆண்டாளின்  மகன் மாணிக்கம் மணமகள் மோகனப்பிரியாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர். இரா.கிருஷ்ண மூர்த்தி மற்றும் விற்பனை பிரிவு மேலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இடம்: சென்னை திருமங்கலம்.
2 hrs ago
7 / 10
தாம்பரம் நகராட்சி குப்பை கிடங்கு , வேங்கடமங்கலம் குப்பை கிடங்கினை நகராட்சி அதிகாரிகளுடன் தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா ஆய்வு நடத்தினார்
4 hrs ago
8 / 10
கொடியேற்றம்: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது.
6 hrs ago
9 / 10
ரோட்டில் தவழும் பட்டாம் பூச்சிகள்: கோவை நரசிபுரம் பகுதியில் சாரல் மழையில் ஓடி வரும் நதி அருகே மண்ணின் ருசியை சுவைக்கும் பட்டாம்பூச்சிகள்.
9 hrs ago
10 / 10
ஒடை நிறைய நீர் ஓடிக்கொண்டிருந்த காலம் மாறி சிறு பாறைக்குழியில் தேங்கி இருக்கும் நீரில் தன் தாகத்தை தணித்து கொள்ள வேண்டிய நிலை உருவாகி விட்டதே என சொல்லாமல் சொல்கிறதோ இந்த பறவைகள். இடம்: கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை.
Advertisement