தமிழகத்தின் கண்ணாடி

21 Jul 2018
5 mins ago
1 / 19
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடந்த வாசிக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர்.
1 hr ago
2 / 19
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தினமலர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பா.ஜ. மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் .
2 hrs ago
3 / 19
நேர்த்திக்கடன் : சிவகங்கை இந்திரா நகர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஒரு பெண் பல தீ சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
2 hrs ago
4 / 19
திண்டுக்கல்லில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட கராத்தே போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்
2 hrs ago
5 / 19
பல் மருத்துவம்: புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ரோட்டரி சங்கம் சார்பில் எ.யு.எம். மருத்துவமனை, இந்திரா காந்தி பல் மருத்துவமனை இணைந்து திருநங்கைகளுக்கான பல் மருத்துவ முகாம் நடந்தது.
2 hrs ago
6 / 19
நினைவு தினம்: நடிகர் சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
3 hrs ago
7 / 19
கடலூர் துறைமுகத்தில் மத்தி மீன் விற்பனை அமோகமாக நடந்தது.
3 hrs ago
8 / 19
தேன்கூடு: பழநி வரதமாநதி அணை ஷட்டர் அருகே கூடு கட்டியுள்ள மலைத்தேனீக்கள்.
3 hrs ago
9 / 19
ஊட்டி நகராட்சி மார்கெட்டிலிருந்து , வெளி மாவட்ட மார்க்கெட்டிற்கு மினி லாரிகளில் காய்கறிகள் அனுப்பப்படுகிறது.
4 hrs ago
10 / 19
எக்ஸைட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில், புதிதாக வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு திட்டம் பற்றி  திருச்சியில் பயிற்சிக் கூட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களுக்கு பயிற்சியாளர் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
5 hrs ago
11 / 19
தமிழகத்தில் லாரி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவையில் பல இடங்களில் வழக்கம் லாரிகள்இயங்கின . இடம்: தியாகி குமரன் மார்க்கெட் .
6 hrs ago
12 / 19
மரம் விழுந்தது: ஊட்டி தாவரவியல் பூங்கா வளாக, ஊழியர் குடியிருப்பு அருகே கொட்டகை மீது மரம் விழுந்து மாடு இறந்தது. மாட்டை அகற்றும் தீயணைப்பு மற்றும் நகராட்சி ஊழியர்கள்.
7 hrs ago
13 / 19
திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சிறுநீரக பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு புத்தகத்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.
7 hrs ago
14 / 19
சென்னை திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் சமீபத்தில் தூர்வாரப்பட்டு தண்ணீர் சேமித்து வைத்தருந்தனர். தற்போது குளம் வற்றியநிலையில் காணப்படுகிறது
7 hrs ago
15 / 19
சென்னை குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் நடைபாதை உடைந்த நிலையில் உள்ளது உயர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
9 hrs ago
16 / 19
கோவை சோமையம்பாளையம் பி.எஸ்.எஸ்.பி., மில்லேனியம் பள்ளி சார்பில் நடந்த உடல் ஆரோக்கியம் குறித்த மாரத்தானில் பங்கேற்ற மாணவர்கள். 
11 hrs ago
17 / 19
மீன்கள் கூட்டம் : : புதுச்சேரி ஊசுடு ஏரியில் பல வருடங்களாக மீன்களை பிடிக்காத நிலையில் மீன்கள் பெருக்கம் அதிகமாகி கரைகளில் தஞ்சம் அடைந்துள்ளன.
13 hrs ago
18 / 19
கருவாகி மொட்டாகி மலராகிப் பின் சருகாய் வீணே உதிர்ந்து விடாதே,.என் போல மலராகி விதையாவாய் என்கிறதோ இந்த டேலியா மலர் ? இடம்: கோவை அடுத்த கருமத்தம்பட்டி .
17 hrs ago
19 / 19
திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள சாய் லட்சுமி ஆன்மீக நல மையத்தில் உலக நலன் வேண்டி குத்து விளக்கு பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள்.
Advertisement