தமிழகத்தின் கண்ணாடி

22 Jan 2018
40 mins ago
1 / 20
சகோதரி நிவேதிதை 150 வது ரத யாத்திரை துவக்க விழா கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ரதத்தை மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் துவக்கி வைத்தார் .
2 hrs ago
2 / 20
கோவை கூட்செட் ரோட்டில் ஆபத்தை உணராமல் வாகன ஒட்டிகள் பயணம் செய்கின்றனர்.
2 hrs ago
3 / 20
ரயிலுக்கு மாறும் பயணிகள்...: பஸ் டிக்கெட் கட்டண உயர்வால், ரயிலுக்கு மாறும் பணிகள் கூட்டம். இடம்- சென்னை, சென்ட்ரல். 
2 hrs ago
4 / 20
கோவை உக்கடம் பகுதி லட்சுமி நாசிம்மர் கோவில் அருகேவுள்ள மாட்டு இறைச்சி கடையை அகற்றக் கோரி சக்தி சேனா கட்சியினர் நரசிம்மர் வேடமிட்டு கோவை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
2 hrs ago
5 / 20
கோவை வரதராஜபுரத்தில் தீயணப்புத்துறை புதிய போலீசாருக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள்.
3 hrs ago
6 / 20
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சாவூரில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
3 hrs ago
7 / 20
பூம் பூம் மாட்டை வைத்து காசு வசூல் நடக்கும் இடம்; உடுமலை காந்திநகர் .
3 hrs ago
8 / 20
கனரா வங்கியின் கேண்டி டிஜிட்டல் வங்கி சேவை வேளச்சேரி கிளையின் திறப்பு விழாவில் ப்ரோ என்கிற கனரா வங்கியின் ரோபோட் உடன் பேசிய நடிகர் கமலஹாசன், உடன் கனரா வங்கியின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா , தலைவர் மனோகரன்.
3 hrs ago
9 / 20
பஸ் கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
3 hrs ago
10 / 20
கோவை தடாகம் ரோடு காந்திநகர் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் கெளமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது.
3 hrs ago
11 / 20
கனரா வங்கியின் கேண்டி டிஜிட்டல் வங்கி சேவை வேளச்சேரி கிளையின் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்த நடிகர் கமலஹாசன், உடன் (இடமிருந்து) கனரா வங்கியின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா, தலைவர் மனோகரன், பொது மேலாளர் ஸ்ரீமதி.
3 hrs ago
12 / 20
பி.ஏ.பி., முதலாம் மண்டல பாசனத்திற்கு இரண்டு சுற்று தண்ணீர் வழங்க வலியுறுத்தி, பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.  சமையல் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 
4 hrs ago
13 / 20
பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்பாட்டம்...: பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் சென்னை தங்கசாலையில் நடந்தது.
4 hrs ago
14 / 20
விழிப்புணர்வு பேரணி...: தேசிய முகத்தாடை செயற்கைப் பல் மருத்துவர் தினத்தை முன்னிட்டு சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம் தலைமையில் துறை தலைவர்கள் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.
4 hrs ago
15 / 20
திருப்பூர், முருகம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 
5 hrs ago
16 / 20
திருப்பூர், புது பஸ் ஸ்டாண்டில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் கல்லூரி புத்தக பையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 hrs ago
17 / 20
விழிப்புணர்வு பேரணி...: தேசிய முகத்தாடை செயற்கைப் பல் மருத்துவர் தினத்தை முன்னிட்டு சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவர்கள் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.
6 hrs ago
18 / 20
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இன்று முதல் ரயில் சேவை தொடங்கியதை யொட்டி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இடம்: பொள்ளாச்சி. 
9 hrs ago
19 / 20
திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியில், உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெல் அறுவடை பணிகள் துவங்கியதையடுத்து, வயலில் அறுவடை செய்த நெற்கதிர்களை கட்டுகளாக கட்டி களத்திற்கு தலைச்சுமையாக கொண்டு வரும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.
11 hrs ago
20 / 20
திருச்சி மாவட்டம், அதவத்தூர் அருகே பேசம்பட்டி வியழன் மேடு பகுதியில் இறவை பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளுக்கு இடையே களை எடுக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
Advertisement