தமிழகத்தின் கண்ணாடி

20 Apr 2018
4 hrs ago
1 / 40
கோவையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இடம்: ஈச்சனாரி.
6 hrs ago
2 / 40
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூயில் பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்த அழைத்தது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னை களை விசாரிக்க ஆணையாளர் சந்தானம் விசாரணைக்கு வந்தார்
8 hrs ago
3 / 40
அணிவகுப்பு: கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் தேசிய அளவிலான தடகள போட்டியில் தமிழ்நாடு அணியின் அணிவகுப்பு
9 hrs ago
4 / 40
மும்முரம் : பழநி வையாபுரி குளம் அருகே 2 ஆம் போக நாற்று நடவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
10 hrs ago
5 / 40
கடல் போல் ஏரி : பூண்டி ஏரியில் இருந்து கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து இருப்பதால் ஏரி கடல் போல் காணப்படுகிறது.
10 hrs ago
6 / 40
திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் பெஸ்டம்பர் அமைப்பை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், மன்னார்புரம் பார்வையற்றோர் மறுவாழ்வு மையத்தில் உள்ளவர்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கினர்.
13 hrs ago
7 / 40
கோவை பாரதியார் பல்கலையில் உயர் கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் பேசினார். அருகில் இடமிருந்து பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, ஜெயக்குமார், பல்கலை பதிவாளர் (பொறுப்பு) வனிதா உள்ளிட்டோர் .
13 hrs ago
8 / 40
சென்னையில் அடிக்கும் வெயிலுக்கு பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக மோர் கொடுக்கும் ஆர்வலர்கள்.இடம்.டி.டி.கே.சாலை, ஆழ்வார் பேட்டை.
13 hrs ago
9 / 40
உருமாறியது கோவை - பொள்ளாச்சி ரோடு புத்தம் புதிதாக . இடம்: ஒத்தகால் மண்டபம்.
13 hrs ago
10 / 40
கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் தேசிய ஜூனியர் தடகள போட்டியில் பெண்களுக்கான 3000 மீ ஓட்டபந்தையத்தில் வெற்றி பெற்ற வீராங்கனை பூமிக்கு தலைவணங்கிய காட்சி.
13 hrs ago
11 / 40
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததையொட்டி பிரிய போகும் நண்பர்கள், செல்பி எடுத்துக்கொண்டனர். இடம்: கோவை, குணியமுத்தூர் அரசு பள்ளி.
13 hrs ago
12 / 40
கோவை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 hrs ago
13 / 40
கோவை வி.எல்.பி.ஜனகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா மாணவர் சேர்கைக்கான தேர்வு போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் .
13 hrs ago
14 / 40
பத்தாம் வகுப்பு கடைசி தேர்வு எழுதி முடித்து வெளியே வந்ததும், சந்தோசத்தில் காகிதங்களை வீசி மகிழும் மாணவிகள். இடம்: கோவை, குணியமுத்தூர் அரசு பள்ளி.
13 hrs ago
15 / 40
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி முடித்த உற்சாகத்தில் மாணவர்கள். இடம் கோவை டவுன்ஹால்
13 hrs ago
16 / 40
பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் இருசக்கர வாகனத்தில் மூவராக பறக்கும் மாணவர்கள். இடம்: கோவை, குணியமுத்தூர்.
13 hrs ago
17 / 40
கடல் சீற்றம்...: கடந்த இரு தினங்களாக சீற்றத்துடன் காணப்படும் கடல். சென்னை, எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் சீறிப்பாயும் அலை. 
13 hrs ago
18 / 40
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய மாநில அரசை கண்டித்து கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
13 hrs ago
19 / 40
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், இ-ஸ்டாம்ப் விற்பனை மையத்தை முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி வழியாக, திறந்து வைத்தார். உடன் (இடமிருந்து) தமிழக அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன்.
13 hrs ago
20 / 40
கோவை, மதுக்கரையில் இருந்து குரும்பபாளையம் செல்லும் குறுகலான ரோட்டை அகல படுத்தும் பணி நடந்து வருகிறது.
13 hrs ago
21 / 40
10ம் வகுப்பு போதுத் தேர்வை முடித்த மகிழ்ச்சியில் தேர்வு அறையில் இருந்து வெளியே வரும் மாணவிகள்.இடம்:மாநில பெண்கள் பள்ளி,எழும்பூர்.
13 hrs ago
22 / 40
சென்னையில் அடிக்கும் வெயிலுக்கு பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக மோர் கொடுக்கும் சேவை ஆர்வலர்கள். இடம்.டி.டி.கே.சாலை, ஆழ்வார் பேட்டை.
14 hrs ago
23 / 40
ஊட்டி ரயில்வே நிலையத்தில், மலைரயில் மூலம் குன்னூருக்கு செல்ல வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்.
14 hrs ago
24 / 40
ஊட்டி குதிரை பந்திய மைதானத்தில், பார்க்கிங் தளம் அமைக்க கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் எஸ்.பி., முரளி ரம்பா ஆய்வு செய்தனர்.
14 hrs ago
25 / 40
சென்னையில் கோ-ஆப்டெக்ஸ் சார்பில் கோடைகால பருத்தி கைத்தறி விற்பனை கண்காட்சி துவங்கியது இதை ஆர்வமுடன் பார்க்கும் பொது மக்கள்.இடம்.சி.பி.ஆர்ட் சென்டர்,ஆழ்வார் பேட்டை.
14 hrs ago
26 / 40
பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததால் மகிழ்ச்சியை கொண்டாடிய மாணவர்கள் .இடம். உடுமலை.
14 hrs ago
27 / 40
பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட மகிழ்ச்சியில் ஊஞ்சல் ஆடி விளையாடிய குழந்தைகள். இடம் : திருப்பூர் அருகே சின்னகாளிபாளையம்.
14 hrs ago
28 / 40
ஐய்யா ஜாலி பரீட்சை முடிந்தது... பத்தாம்  வகுப்பு தேர்வு இன்றோடு முடிந்தது இதனை கொண்டாடும் மாணவிகள். இடம்: திருப்பூர், ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி.
14 hrs ago
29 / 40
ஐய்யா ஜாலி பரீட்சை முடிந்தது... பத்தாம்  வகுப்பு தேர்வு இன்றோடு முடிந்தது இதனை கலர் பொடி தூவி கொண்டாடும் மாணவிகள். இடம்: திருப்பூர், ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி.
14 hrs ago
30 / 40
சின்னவெங்காயம் அறுவடைக்கு பின்பு பட்டறையில் கொட்டுவதற்காக பணியல் ஈடுபடும் பெண்கள். இடம்:திருப்பூர், சின்னாக்காளிபாளையம்
14 hrs ago
31 / 40
கோவை வேளாண் பல்கலையில் நடந்த  கல்லுரிகளுக்கான 400 மீ., தொடர் ஓட்ட பந்தைய போட்டியில் பங்கேற்ற மாணவிகள் .
14 hrs ago
32 / 40
பாரதிய யுவ சக்தி அறக்கட்டளையின் 25வது ஆண்டு விழா சென்னை, அண்ணாபல்கலையில் நடந்தது. அதில் சிறந்த தொழில் முனைவோர்களுக்கான பரிசினை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். இடம்:கிண்டி
14 hrs ago
33 / 40
சென்னையில் அடிக்கும் வெயிலுக்கு பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக மோர் கொடுக்கும் ஆர்வலர்கள்.
16 hrs ago
34 / 40
மஹா கும்பாபிஷேகம்...: சென்னை, எண்ணூர், அன்னை சிவகாமிநகர் பீலீகான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவிலில் பல கோடி ரூபாயில் பிரதிஸ்டை செய்யப்பட்ட அங்காள ஈஸ்வரி மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளுக்கு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
17 hrs ago
35 / 40
கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் தேசிய ஜூனியர் தடகள போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை .
17 hrs ago
36 / 40
கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் தேசிய ஜூனியர் தடகள போட்டியில் ஆண்களுக்கான 5000 மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற வீரர்கள்
17 hrs ago
37 / 40
மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து சிறு மற்றும் குறு பவுண்டரி நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இடம் கோவை விளாங்குறிச்சி
17 hrs ago
38 / 40
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் வெயிலோடு விளையாடு என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது .
17 hrs ago
39 / 40
தினமலர் நாளிதழ் விற்பனை பிரிவு ஏஜன்ட் பார்த்தசாரதி-ஆண்டாளின்  மகன் மாணிக்கம் மணமகள் மோகனப்பிரியாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர். இரா.கிருஷ்ண மூர்த்தி மற்றும் விற்பனை பிரிவு மேலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இடம்: சென்னை திருமங்கலம்.
18 hrs ago
40 / 40
தாம்பரம் நகராட்சி குப்பை கிடங்கு , வேங்கடமங்கலம் குப்பை கிடங்கினை நகராட்சி அதிகாரிகளுடன் தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா ஆய்வு நடத்தினார்
Advertisement