தமிழகத்தின் கண்ணாடி

21 Apr 2018
1 hr ago
1 / 28
திருப்பூர் புஸ்பா பஸ்ஸ்டாப்பில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் அளவு குறைவாக உள்ளது என புகார் தெரிவித்த முத்துகுமார் என்ற வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்,
2 hrs ago
2 / 28
தனுஷ்கோடி பகுதியில் கடல் அலை அதிகமாகி ரோடு வரை தண்ணீர் வந்துள்ளது
3 hrs ago
3 / 28
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடக்கும் கடல் உணவு திருவிழாவில் இடம் பெற்றுள்ள உணவு வகைகள்
4 hrs ago
4 / 28
மதுரை சுப்ப லட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி மற்றும் ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் 21,வது பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு சி.எம்.ஏ. சி.ஜி எம்.ஷேர்டு சர்வீஸ் சென்டர் நிர்வாக இயக்குனர் கண்ணன் கணேஷ் பட்டம் வழங்கினார். இடமிருந்து கல்லூரி மேலாண்மையர் ஆர்.ராம்குமார், செயலர் டாக்டர் எல்.ராமசுப்பு, தலைவர்  டாக்டர் ஆர்.லட்சுமிபதி, முதல்வர் சரவணன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மீரா.
5 hrs ago
5 / 28
கவர்னர் நியமித்த கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி ஆடியோ புகார் குறித்து மதுரை காமராஜர் பல்கலையில் விசாரணையை நடத்தி விட்டு வெளியே வந்தார்.
6 hrs ago
6 / 28
தேர் திருவிழா: ஊட்டியில்,இஸ்கான் அமைப்பு சார்பாக நடந்த , ஸ்ரீ ஜெகநாதர் தேர் திருவிழாவில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
6 hrs ago
7 / 28
களை எடு: பழநி அருகே தேவத்தூர் பகுதியில் வெண்டை செடிகளில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
7 hrs ago
8 / 28
கோடைகாலத்தை முன்னிட்டு சிறுவர்களை கவரும் வகையில், ஆவின் நிறுவனத்தில் தயாராகும் புதியரக ஐஸ்கிரீம் வகைகள். இடம்: அம்பத்தூர் எஸ்டேட்.
7 hrs ago
9 / 28
விருதுநகர் அருகே பெரிய புளியம்பட்டியில் கோடையினால் குளம் வறண்டு கிடக்கும் காட்சி.
7 hrs ago
10 / 28
சாதனை முயற்சி: பென்சில் பெட்டிகளை அடுக்கி மிகப்பெரிய ஓவியம் வரையப்படும் நிகழ்வான உலக சாதனை முயற்சி, கோவை வைசியாள் வீதி, வாசவி கலையரங்கில் நடந்தது. இதில் ஓவியம் உருவாக்கிய மாணவன் ப்ரித்திவ்
7 hrs ago
11 / 28
சிவகங்கை அருகே குளக்கட்டப்பட்டி ஆச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த வட மாடு மஞ்சுவிரட்டில் மாடு பிடி வீரை புரட்டி எடுத்த காளை.
7 hrs ago
12 / 28
திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைபடுத்த சிறப்பு முகாம் நடந்தது
7 hrs ago
13 / 28
சென்னை கந்தகோட்டம் ஶ்ரீ முத்துகுமாரசுவாமி கோவிலில், உலக நன்மைக்காக நடந்த சுப்பிரமணிய மஹா ஹோமத்தில் நவகலச மஹா அபிஷேகம் நடந்தது. இடம் : பூங்கா நகர், சென்னை.
8 hrs ago
14 / 28
ஊட்டி தாவரவியல் பூங்கா அருகேவுள்ள, நடைபாதை வியாபாரிகள் கடைகள் அகற்றப்பட்டதால் கலெக்டர் அலுவலகம் சென்று முறையிட்டனர்.
8 hrs ago
15 / 28
சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியர். இடம்: சென்னை அண்ணாநகர்.
9 hrs ago
16 / 28
கோவை, குட்டிகவுண்டன்பதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் குடிக்க நீரின்றி குழாய் வால்வில் கசியும் நீரை பிடிக்க காத்திருக்கின்றனர்.
10 hrs ago
17 / 28
சாத்துக்குடி: கோடை வெயிலில் இருந்து மக்களை குளிர்விக்கும் விதமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் விற்பனைக்காக குவிந்துள்ள சாத்துக்குடி பழங்கள்.
10 hrs ago
18 / 28
உச்சி வெயிலில் வீரர்கள்: மதுரை ரேஸ்கோர்சில் நடக்கும் மாநில அளவிலான ஹாக்கி லீக் போட்டியை துவக்கி வைக்க  வரும் அமைச்சர் உதயகுமாருக்காக வெயிலில் காத்திருந்த வீரர்கள் . நேரம் :  பிற்பகல்: 1 மணி 
11 hrs ago
19 / 28
கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் தேசிய ஜூனியர் தடகள போட்டியில் ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் பங்கேற்ற வீரர்.
12 hrs ago
20 / 28
பழநி சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நராயணப்பெருமாள்.
13 hrs ago
21 / 28
9வது பில்ட் மேட் மலர் வெளியீட்டு விழா கோவை ரெசிடென்சி ஹோட்டலில் நடந்தது, இதில் தலைவர் அருண்பிரசாத், செயலர் ரங்கநாதன், பொருளாளர் கேசவன், கேஇஎப் தலைவர் பைசில் கொட்டிக்கொலோன், அத்வைத் லக்ஷ்மி இண்டட்ரீஸ் நிர்வாக இயக்குநர் ரவி சாம் ஆகியோர் வெளியிட்டனர்.
14 hrs ago
22 / 28
குட்டி குளியல்: கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஒரு குட்டி குளியல் ஆடும் சிவகாமி யானை.இடம்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில்.
15 hrs ago
23 / 28
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ராமனுஜரின் 1001 வது திருநட்சத்திரத்தை முன்னிட்டு, ராமனுஜரின் திரு உருவச்சிலை சித்திரை வீதிகளில் வீதியுலா நடந்தது.
15 hrs ago
24 / 28
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ராமனுஜரின் 1001 வது திருநட்சத்திரத்தை முன்னிட்டு, ராமனுஜரின் திரு உருவச்சிலை சித்திரை வீதிகளில் வீதியுலா நடந்தது.
15 hrs ago
25 / 28
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ராமனுஜரின் 1001 வது திருநட்சத்திரத்தை முன்னிட்டு, ராமனுஜரின் திரு உருவச்சிலை சித்திரை வீதிகளில் வீதியுலா நடந்தது.
16 hrs ago
26 / 28
கோவையில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இடம்: ஈச்சனாரி.
20 hrs ago
27 / 28
கோவை வடவள்ளி தாம்பராஸ் ஹாலில் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு உபநிஷத் பாராயணம்  நிகழ்ச்சி நடந்தது.
20 hrs ago
28 / 28
அருப்புக்கோட்டை ஆயிரம்கண் மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் இரவு தேரோட்டம் நடந்தது