தமிழகத்தின் கண்ணாடி

23 Feb 2018
1 hr ago
1 / 18
ரசிப்பு: பிரான்ஸ் நாட்டில் இருந்து சுற்றுலா வந்த வெளிநாட்டினர், திருச்சி தென்னூர் நடுநிலைப் பள்ளியில், கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து அதனை தங்களது கேமராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
2 hrs ago
2 / 18
சிறப்பு தபால் தலை: ஜித்தோ அமைப்பு சார்பில் மூன்று நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சென்னையில் துவங்கியது. இதில் சிறப்பு தபால் தலையை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். அருகில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர்.
3 hrs ago
3 / 18
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியை கலெக்டர் ராசா மணி, துவக்கி வைத்தார்.
3 hrs ago
4 / 18
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராசா மணி தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
3 hrs ago
5 / 18
பழநி இடும்பன்மலை பின் பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் புகை கிளம்பியது.
4 hrs ago
6 / 18
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவர் நடத்தும் ஆரோக்கிய கண்காட்சியில் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு உபகரணங்களை ஆர்வமுடன் பார்வையிடும் மாணவிகள் இடம்.அரும்பாக்கம்.
4 hrs ago
7 / 18
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மாணவர் நடத்தும் ஆரோக்கிய கண்காட்சியை முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்தார் பின் மாணவர்கள் செய்த யோகாசன நிகழ்ச்சியை பார்வையிட்டார். இடம்.அரும்பாக்கம்.
5 hrs ago
8 / 18
மானிய விலையில் ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ள நிலையில், அதற்கான ஸ்கூட்டர்கள் சேப்பாக்கதிற்கு கொண்டுவரப்பட்டு பயனாளிகளின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டது.
7 hrs ago
9 / 18
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையம் சார்பில் பிர்லா கோளரங்கம் அறிவியல் கண்காட்சி அம்பத்தூரில் நடந்தது.. படைப்புகளை பார்வையிடும் மாணவர்கள். இடம்: சரஸ்வதி வித்யாலயா, அம்பத்தூர்.
8 hrs ago
10 / 18
ஆர்ப்பாட்டம்: கோவை மத்திய தொலைத் தொடர்பு அலுவலகத்தில் மூன்றாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரி அனைத்து சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
9 hrs ago
11 / 18
ஆழியார் அணையிருந்து கேரளாவிற்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை பல்வேறு அமைப்பினர் தடுக்கின்றனர். 
10 hrs ago
12 / 18
டில்லியில் விவசாய கடன் தள்ளுபடி செய்ய கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து, திருச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர் கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்த விவசாய சங்கத்தினர்.
11 hrs ago
13 / 18
ஆழியார் அணையிருந்து கேரளாவிற்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை பல்வேறு அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்
12 hrs ago
14 / 18
கோவை கொடிசியாவில் கண் சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் வாக் பாஃர் ஹெல்த் என்ற வாக்கத்தான் நடந்தது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி பங்கேற்றார்.
13 hrs ago
15 / 18
கச்சத்தீவில் நடக்கும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து படகில் சென்றவர்கள்
14 hrs ago
16 / 18
கச்சத்தீவில் நடக்கும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து படகில் சென்றவர்கள்
15 hrs ago
17 / 18
சயின்சும், சாகசமும்...: சென்னை, காமராஜர் சாலை லேடி வெல்லிங்டன் மைதானத்தில் அந்தி சாயும் மாலைப்பொழுதில் நடந்த சயின்சும், சாகச நிகழ்ச்சியும் காண்போரை கவரும் விதமாக இருந்தது.
19 hrs ago
18 / 18
மதுரை தமிழ் இசை சங்கத்தில் நடந்த இசை விழாவில் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா பாடினர்.
Advertisement