தமிழகத்தின் கண்ணாடி

17 Aug 2018
24 mins ago
1 / 28
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள நான்கு கோபுரங்களிலும் பா.ஜ., சார்பில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
27 mins ago
2 / 28
கேரளாவில் பெய்து வரும் கன மழையால், பாரதப் புழா ஆற்றில் அளவு கடந்த வெள்ளம் பாய்கிறது. இதனால், பட்டாம்பி நகரின் மத்தியில் உள்ள பாலத்தை மூழ்கடித்த இந்த வெள்ளத்தால், பட்டாம்பி- குருவாயூர் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
47 mins ago
3 / 28
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பெராம்பட்டு பகுதியில் இருந்து திட்டுக்காட்டூருக்கு படகின் மூலம் பொதுமக்கள் செல்கின்றனர்.
59 mins ago
4 / 28
கேரளாவில் பெய்து வரும் கன மழையால், பாரதப் புழா ஆற்றில் அளவு கடந்த வெள்ளம் பாய்வதால் பட்டாம்பி அருகே நம்பரம் பகுதியில் வீடுகள் முழுவதுமாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
1 hr ago
5 / 28
சிதம்பரம் அருகே கீழகுண்டலபாடி பகுதியில் வெள்ளப்பாதிப்பால் மக்கள் படிப்படியாக வெளியேறி கொண்டு இருக்கின்றனர். தன் மனைவியை இடுப்பில் சுமந்து வரும் கணவன்.
2 hrs ago
6 / 28
காளைக்கு மரியாதை : சிவகங்கை அருகே இளந்தங்குடிபட்டி ஊர் காக்கும் தர்ம முனீஸ்வரர் கோவில் காளை இறந்ததால் அதை கிராமத்தினர் மரியாதை செலுத்தி ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
2 hrs ago
7 / 28
ஜொலிக்கும் மலை: பழநி முருகன் கோயில் மின் ஒளி வெளிச்சம் வையாபுரி குளத்தின் பின்னணியில் தங்கம் போல ஜொலித்தது.
2 hrs ago
8 / 28
கோவை வ.உ.சி., பார்க் வளாகம், ஆடிஸ் வீதியில் உள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் சக்தி கரகம் எடுத்து வந்த பக்தர்கள் .
4 hrs ago
9 / 28
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மரியாதை செலுத்தினார்.
5 hrs ago
10 / 28
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு சென்னை தி.நகர் பா.ஜ.க., தலைமை அலுவலகத்தில் அஞ்சலி செலுத்திய தொண்டர்கள்.
6 hrs ago
11 / 28
மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் உடல் அவரது இல்லத்தில் இருந்து டில்லி பா.ஜ., அலுவலகத்திற்கு ராணுவ டிரக்கில் எடுத்து செல்லப்படுகிறது.
6 hrs ago
12 / 28
புதுடில்லி பா.ஜ., அலுவலகத்தில் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருக்கும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள்.
6 hrs ago
13 / 28
மறைந்த பாரத பிரதமர் வாஜ்பாய் உடல் அவரது இல்லத்தில் இருந்து டில்லி பா.ஜ., அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் காட்சி.
6 hrs ago
14 / 28
புதுடில்லி பா.ஜ., அலுவலகத்தில் குவிந்த பா.ஜ.,வினர்
6 hrs ago
15 / 28
மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டம் கொடுமுடி இலுப்பத்தோப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்த காட்சி.
7 hrs ago
16 / 28
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து பவானீஸ்வரர் கோயில் சுற்றுச்சுவர் இடிந்தது.
7 hrs ago
17 / 28
பா.ஜ.,வினர் அஞ்சலி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கோவை, காந்திபார்க்கில் பா.ஜ.,வினர் அஞ்சலி செலுத்தினர்.
8 hrs ago
18 / 28
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
8 hrs ago
19 / 28
கேரளாவில் பெய்து வரும் கன மழையால் பாலக்காடு - மலம்புழா செல்லும் முக்கிய சாலை வெள்ளநீர் சூழ்ந்து குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கின.
8 hrs ago
20 / 28
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் காலமானதையடுத்து கோவையில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தும்.இடம்: கோவை காட்டுர் .
8 hrs ago
21 / 28
முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் காலமானதையடுத்து துக்கம் அனுசரிக்கும் விதமாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
8 hrs ago
22 / 28
கோத்தே குப்பர் லீக் கால்பந்து போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது இதில் கார்மெல் கார்டன் பள்ளி அணியும் கிக்கானி பள்ளி அணியும் மோதின.
9 hrs ago
23 / 28
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் திருஉருவ படத்திற்கு பா.ஜ., சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டன. இடம் : கிழக்கு தாம்பரம்
10 hrs ago
24 / 28
திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
10 hrs ago
25 / 28
திருப்பூர், புதுராமகிருஷ்ணாபுரம் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
11 hrs ago
26 / 28
ராமநாதபுரம் பா.ஜ., சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
17 hrs ago
27 / 28
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவை யொட்டி விழுப்புரம் காந்தி சிலை முன் பா. ஜ., சார்பில் அவரது படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
18 hrs ago
28 / 28
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு நடந்த திருக்கல்யாணத்தில் சுவாமியும்,அம்பாளும் கல்யாண கோலத்தில் காட்சியளித்தனர்.
Advertisement