தமிழகத்தின் கண்ணாடி

18 Mar 2018
23 mins ago
1 / 15
உடுமலை குருவப்பநாயக்கனூரில் நடந்த ரேக்ளா போட்டியில் சீறி பாய்ந்த காளைகள்.
24 mins ago
2 / 15
பழநி அருகே கோடைப்பத்து பகுதியில் இரண்டாம் போக நடவிற்காக வயல்களில் தண்ணீர் விடப்பட்டது.
1 hr ago
3 / 15
குதிரை வண்டி எல்கை பந்தயத்தில் சீறி பாய்ந்து வந்த குதிரைகள். இடம்: கோவை கணுவாய்.
1 hr ago
4 / 15
சென்னை செங்குன்றத்தில் இருந்து சேலத்திற்க்கு ரேஷன் பருப்பு மூட்டைகளை ஏற்றி சென்று லாரி தாம்பரம் அருகே இரும்புலீயூர் பாலத்தில் கவிழ்ந்து மூட்டைகள் அனைத்தும் சாலையில் சிதறிக்கிடந்தன.
2 hrs ago
5 / 15
தெலுங்கு வருட பிறப்பான உகாதியை முன்னிட்டு தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.
4 hrs ago
6 / 15
சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதாம் ஹூசைன் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கோவை ரத்தினபுரியிலுள்ள வீட்டில் சோதனை செய்தனர்.
4 hrs ago
7 / 15
தேனி பல்லவராயன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகள்
6 hrs ago
8 / 15
உலக பெண்கள் தினத்தை முன்னிட்டும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாக்கத்தன் நடை பயிற்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்கள்.
6 hrs ago
9 / 15
உலக பெண்கள் தினத்தை முன்னிட்டும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நடை பயிற்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்கள்.
7 hrs ago
10 / 15
கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் நடந்த விளையாட்டு விழாவில் சாகசம் செய்த மாணவிகள் .
10 hrs ago
11 / 15
சென்னை ஆவடி அருகே பாண்டேஸ்வரத்தில் கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் வேலை செய்த 147 வட மாநிலத்தவர்களை அதிகாரிகள் மீட்டு சொந்த ஊர்களுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து னுப்பி வைத்தனர்.
11 hrs ago
12 / 15
மழை பெய்ததை தொடர்ந்து பழநி அருகே சிந்தலவாடம்பட்டி பகுதியில் சோளம் விதைக்க டிராக்டரில் உழும் பணி நடந்தது.
12 hrs ago
13 / 15
வீணாகும் குடிநீர்: சிவகங்கை அரசு மருதுபாண்டியர் குடியிருப்பு அருகே குடிநீர் குழாய் உடைந்து வெளியாகும் தண்ணீரை சேகரிக்கும் பெண்கள்.
13 hrs ago
14 / 15
சிவகங்கை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கோவில் பூசாரி ஏராளமான தீச்சட்டி எடுத்து வந்தனர்.
14 hrs ago
15 / 15
சிவகங்கையில் பெய்த சிறிய மழைக்கே ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
Advertisement