தமிழகத்தின் கண்ணாடி

24 Mar 2018
6 mins ago
1 / 35
ஈரோட்டில் நடக்கும் திமுக மண்டல மாநாட்டின் துவக்க விழாவில் தொண்டர்கள் சுமந்து வந்த தீப்பந்தத்தை கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பெற்று கொள்கிறார்.
28 mins ago
2 / 35
காமராஜர் நினைவு இல்லத்தை பராமரிக்கும் லட்சணத்தை பாருங்கள். இடம்: தி.நகர் திரு மலைப் பிள்ளை சாலை.
1 hr ago
3 / 35
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ சார்பில் திருப்பூரில் பேரணி நடந்தது.
1 hr ago
4 / 35
சுட்டெரிக்கும் சூரியன் வெப்பம் தாங்கமுடியாததால் தலையில் துப்பட்டாவுடன் செல்லும் கல்லூரி மாணவிகள். இடம்.விருதுநகர் பைபாஸ்ரோடு
1 hr ago
5 / 35
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனச்சரக பகுதியில், கடும் வறட்சியால், வறண்டு போன தொட்டியில், டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் .
2 hrs ago
6 / 35
விருதுநகரில் கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் பேரணி நடத்தியதில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள்.
2 hrs ago
7 / 35
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திருச்சி தலைமை போஸ்ட் அலுவலகம் முன் இரண்டு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்தனர்.
3 hrs ago
8 / 35
பங்குனி திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
3 hrs ago
9 / 35
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திருச்சி தலைமை போஸ்ட் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற மக்கள் அதிகார அமைப்பினர்.
4 hrs ago
10 / 35
புதிய பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோவை பாலசுந்தரம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலத்தில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்.
4 hrs ago
11 / 35
வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க போக்குவரத்து போலீசார் இதமான தொப்பி அணிந்துள்ளனர். இடம்; திருவள்ளுர் காமராஜர் சிலை .
4 hrs ago
12 / 35
மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் கற்றல் திறன் குறைபாடுள்ள குழந்தைகள் உருவாக்கிய பொருட்களின் கண்காட்சி மகாலிங்கபுரத்தில் நடந்தது.
5 hrs ago
13 / 35
சென்னை போக்குவரத்து போலீசாருக்கு தன்னார்வ அமைப்பின் சார்பில் புகை மாசு கவசத்தை போக்குவரத்து இணை கமிஷனர் சுதாகர் வழங்கினார். இடம்: வேப்பேரி.
5 hrs ago
14 / 35
திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கண் பரிசோதனை செய்கிறார் டாக்டர்.
5 hrs ago
15 / 35
ஈரோட்டில் பெருந்துறை அருகே, சரளை பகுதியில், திமுக மண்டல மாநாடு துவங்கியது. மேடையில் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், கனிமொழி.
5 hrs ago
16 / 35
காற்று மழையால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது. சாய்ந்த மரங்களை சோகத்துடன் பார்த்த விவசாயி. இடம்: திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள பெரிய புத்தூர் பகுதி.
6 hrs ago
17 / 35
பூணூல் அறுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
6 hrs ago
18 / 35
பட்டமளிப்பு விழா: மேடவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் திருப்புகழ் ஐ.ஏ.எஸ் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் : கல்லூரியின் துணை முதல்வர் மரியம் பயஸ், முதன்மை முதல்வர் கருணாநிதி, தலைவர் லோகநாதன், இயக்குனர் பிரபாகரன் மற்றும் முதல்வர் உமாதேவி.
6 hrs ago
19 / 35
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அதிகார நத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள்.
7 hrs ago
20 / 35
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
7 hrs ago
21 / 35
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அவிநாசி ராகவேந்தர வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் தண்ணீர் சேமிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
7 hrs ago
22 / 35
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள பெரிய புத்தூர் பகுதியில் காற்று மற்றும் மழையால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது.
7 hrs ago
23 / 35
சென்னை கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவை வீடியோ எடுக்கும் சிவ பக்தர்
8 hrs ago
24 / 35
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இரவில் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்ட கடை .
8 hrs ago
25 / 35
கரூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள்.
8 hrs ago
26 / 35
கண்மாய், குளங்கள் வறண்டதால் ஆடு,மாடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் போனது. ஆனால் காவிரி குடிநீர் குழாயில் இருந்து வடிந்து தேங்கியுள்ள நீரை குடித்து தாகத்தை தீர்க்கும் ஆடுகள்.இடம்: சிவகங்கை அருகே கீரனூர்.
8 hrs ago
27 / 35
சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவில் மேள தாளம் வாசிக்கும் சிவ பக்தர்கள்.
8 hrs ago
28 / 35
கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் காசநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
9 hrs ago
29 / 35
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
9 hrs ago
30 / 35
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நடக்கும் பங்குனி திருவிழாவை தனது சொந்தங்களுக்கு மொபைல் போன் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் பக்தர்.
9 hrs ago
31 / 35
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அதிகார நந்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள்.
9 hrs ago
32 / 35
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அதிகார நந்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள்.
12 hrs ago
33 / 35
ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள, கேலரி ஒன் டூவில், துவங்கிய வாட்டர் கலர் ஒவிய கண்காட்சியை ரசித்து பார்வையிட்ட ஆர்வலர்கள்.
14 hrs ago
34 / 35
பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சென்னை கபாலீஸ்வரர் கோவிலில், சந்திரவட்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள். இடம் : மயிலாப்பூர்.
14 hrs ago
35 / 35
ஐ. பி.எல் போட்டிகளில் சாதிக்க பயிற்சியில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி மற்றும் ரெய்னா. இடம்:சேப்பாக்கம், சென்னை.
Advertisement