தமிழகத்தின் கண்ணாடி

20 Jun 2018
1 hr ago
1 / 40
கடந்த சில தினங்களாக பெய்த மழையால் கோவை உக்கடம் பெரியகுளம் நிரம்பி அங்கு ஏராளமானவர்கள் மீன் பிடிப்பதற்காக பரிசலில் சென்றனர்.
1 hr ago
2 / 40
கோவை இராவுத்தூர் ரோட்டில் பாரத், இந்தியன் ஆயில், எச்.பி பெட்ரோலிய நிறுவனம் சார்பில்  தீ தடுப்பு நடவடிக்கை ஒத்திகை தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.
1 hr ago
3 / 40
புதுச்சேரி போலீஸ் துறையின் ஆவண படம் புரெவிடென்ஸ் மாலில் திரையிடப்பட்டது. கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, டிஐஜி சுனில் குமார் கவுதம் உள்ளிட்டோர் பார்த்தனர்.
1 hr ago
4 / 40
மாவட்ட கிரிக்கெட் சங்க லீக் போட்டியில் விளையாட புதிய அணிகளுக்கான தேர்வு கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரியில் நடந்தது.
1 hr ago
5 / 40
போலி ஏ.டி.எம்., கார்டு மூலம் வங்கி கணக்கிலிருந்து ரூ4 லட்சம் மோசடி செய்ததாக கோவை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பாதிக்கப்பட்டோர் .
1 hr ago
6 / 40
விற்பனைக்காக வந்துள்ள வாத்து குஞ்சுகள்.இடம்:சிவகங்கை அரண்மனை சாலை.
1 hr ago
7 / 40
ஆபத்தை உணராமல் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து செல்லும் கல்லூரி மாணவிகள். இடம்: குரோம்பேட்டை, சென்னை
2 hrs ago
8 / 40
அருப்புக்கோட்டை அருகே சித்தலக்குண்டு பகுதியில் கிணற்றுப்பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள கனகாம்பர பூக்கள்.
2 hrs ago
9 / 40
அப்பல்லோ மருத்துவமனையில் 1500 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி மற்றும் துணை தலைவர் பிரித்தா ரெட்டி உடன் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
2 hrs ago
10 / 40
கோவை பூ மார்க்கெட்டில் குறைந்த அளவில்  பூக்கள் வருவதால் பூ விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
2 hrs ago
11 / 40
ஆபத்தை உணராமல் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து செல்லும் கல்லூரி மாணவிகள்.இடம் : குரோம்பேட்டை
3 hrs ago
12 / 40
சிவகங்கை வாரச்சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள ரோஜா செடிகளை பார்வையிட்ட பெண்கள். 
3 hrs ago
13 / 40
திருச்சி கே.கே.நகர் அருகே, தென்றல் நகரில், 63வது கூட்டுறவு வங்கியை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்து, வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேமிப்பு புத்தகத்தை வழங்கினார்.
3 hrs ago
14 / 40
திருச்சி பகுதியில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் ரசிகர் மன்றத்தினரால், அரசியல் கட்சியினர் போல் தேர்தல் வாக்குறுதியாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
3 hrs ago
15 / 40
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது... இடம் : மதுரவாயல்...
3 hrs ago
16 / 40
பெட்ரோல், டீசல்,கேஸ், விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து, திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4 hrs ago
17 / 40
திருப்பூரில் அமையவுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
4 hrs ago
18 / 40
ஊட்டி தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக மலர்நாற்றுகளுக்காக மண்பைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4 hrs ago
19 / 40
சமீபத்தில் பெய்த மழைக்கு நன்கு வளர்ந்த சோள பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இடம்:திருப்பூர், கூலிபாளையம்
4 hrs ago
20 / 40
ஊட்டி படகு இல்லத்தில், தூர்வாரும் பணிக்காக நீர்மட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
4 hrs ago
21 / 40
நன்னாடு அருகே உள்ள டாஸ்மார்க் கடையை மூடக் கோரி கிராம மக்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்
4 hrs ago
22 / 40
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோவை மணி மேல்நிலைப்பள்ளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 தமிழ்நாடு விமானப்படை தேசிய மாணவர்படை மாணவர்கள்
4 hrs ago
23 / 40
அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
4 hrs ago
24 / 40
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோவை புலியகுளம் அந்தோனியார் பள்ளி மாணவர்கள்.
4 hrs ago
25 / 40
கோவை உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியதை அடுத்து, அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பவேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் விருப்பம்.
5 hrs ago
26 / 40
கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை வேண்டாம் என வலியுறுத்தி வைக்கப்பட்டுள்ள போர்டு.
5 hrs ago
27 / 40
பள்ளியில் தேர்தல்...: கோவை சுகுணா இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த தலைவர் மற்றும் துணைத் தலைவர் போட்டியில் ஓட்டு போட்ட மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் .
5 hrs ago
28 / 40
கோவை நேரு ஸ்டேடியம் கால்பந்து மைதானம் சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
5 hrs ago
29 / 40
கல்லூரி மாணவியர் உற்சாகம்...: கல்லூரி திறக்கப்பட்ட முதல் நாளில் உற்சாகமாக வந்த மாணவியர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சீனியர்ஸ். இடம்- கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி, பாரிமுனை. 
5 hrs ago
30 / 40
கோவை நேரு ஸ்டேடியம் வாலிபால் மைதானத்தில் மாவட்ட அளவிலான 14 வயது உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் எ.எல்.ஜி., மெட்ரிக் பள்ளி - எ.பி.சி., மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின.
5 hrs ago
31 / 40
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வி.ஆர்.ஐ.ரகம்3ஒட்டு கட்டும் பணி நடைபெற்றது.
5 hrs ago
32 / 40
அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் கலெக்டர் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
7 hrs ago
33 / 40
நியாயம் தானா!: விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வைக்கப்பட்ட தகவல் பலகையில் சங்க போராட்டம் குறித்து பேனர் வைத்துள்ளனர்
7 hrs ago
34 / 40
புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு ஜீவா காலனி அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு, பிஜேபி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
7 hrs ago
35 / 40
நிலுவையில் உள்ள பத்து மாதம் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி பாண்டெக்ஸ் தொழிலாளர்கள் தட்டாஞ்சாவடி அலுவலகத்தில் கஞ்சி காய்ச்சி போராட்டம் நடத்தினர்.
7 hrs ago
36 / 40
அகில இந்திய காங்., கட்சி தலைவர் ராகுல் பிறந்த நாளை முன்னிட்டு ராஜ்பவன்தொகுதி வைத்திகுப்பம் கணேஷ் நகரில் முதல்வர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.லட்சுமி நாராயணன் அன்னதானத்தை துவங்கி வைத்தனர்.அருகில் வட்டார காங்.,தலைவர் வேல்முருகன்,முன்னாள் கவுசிலர் குமரன்,காங்.,பிரமுகர் குணா.
8 hrs ago
37 / 40
புதுச்சேரி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடற்கரையில் மாணவர்கள் யோகா ஒத்திகை நடத்தினர்.
9 hrs ago
38 / 40
புதுச்சேரியில் , சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடற்கரையில் மாணவர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
13 hrs ago
39 / 40
பழனி அருகே ஆயக்குடி பகுதியில் காய்த்துள்ள ஈச்சங்காய்.
15 hrs ago
40 / 40
கிண்டி சிறுவர் பூங்கா பாம்பு பண்ணையில், முட்டையிட்டுள்ள தென்கிழக்கு ஆசிய மலைப்பாம்பு.
Advertisement