தமிழகத்தின் கண்ணாடி

18 Oct 2018
17 mins ago
1 / 35
மகாசமாதி திருநாள்: சத்குரு சாயிநாதரின் 100ஆம் ஆண்டு மகாசமாதி திருநாளையடுத்து வடசென்னை, புதுவண்ணாரப்பேட்டை சீரடி ஶ்ரீசாயிநாதர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தியுடன் பக்தர்கள்.
1 hr ago
2 / 35
விசாரணை: போலி ஆதார் கார்டு தயாரித்த பீகார் வாலிபர் ராம் சீஸ் வர்மா மற்றும் உதவி செய்த அவிநாசியை சேர்ந்த சவரிமுத்தை, திருப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ஆதார் நிறுவன துணை இயக்குனர் அசோக்லெனின் விசாரணை நடத்தி விட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறினார்.
3 hrs ago
3 / 35
விவசாயத்தின் செழிப்பு இந்த மஞ்சள் நிற பூக்களை கண்டாலே தெரியும். இடம்: கோவை வடவள்ளி - இடையர்பாளையம் ரோடு .
6 hrs ago
4 / 35
கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள்.
6 hrs ago
5 / 35
புதுச்சேரி ஆயுத பூஜை விழாவையொட்டி, போலீஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் போலிஸ் துப்பாக்கிக்கு பூஜை செய்யப்பட்டது.
6 hrs ago
6 / 35
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து உள்ளது.
6 hrs ago
7 / 35
ஊட்டி அருகே தொட்டபெட்டா சந்திப்பில், போலீசார் புறகாவல் நிலையம் அமைத்து உள்ளனர்.
6 hrs ago
8 / 35
சிவகங்கை தெப்பக்குளம் நிறைந்து வருவதால் அதில் குளிக்கும் சிறுவர்களை போலீசார் வெளியேற்றினர்.
6 hrs ago
9 / 35
புதுச்சேரி திருக்கனூர் மழைக்காலம் துவங்கி யும் இதுவரையில் தூர்வாரப்பாடாத விக்கிரவாண்டி நீர்வரத்து வாய்க்கல்
6 hrs ago
10 / 35
கோவை வெள்ளகிணறு  டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் இந்தியன் நேஷனல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த கால்பந்து போட்டியில் மோதிய ஸ்ட்ரைக்கர் எப்.சி., மற்றும் பார்ஷா அணியினர்.
6 hrs ago
11 / 35
பனை மரங்கள் அழிந்துவரும் நிலையில், உடுமலை செங்குளம் கரையில் எஞ்சியிருக்கும் மரங்கள் தண்ணீரில் பிரதிபலிக்கின்றன.
6 hrs ago
12 / 35
புதுச்சேரி அருகே வயலில் இயந்திரம் முலம் நெல் நடவு செய்யம் பணி நடந்து வருகிறது.
6 hrs ago
13 / 35
சிவகங்கை தெப்பக்குளத்திற்கு அதிகமாக தண்ணீர் வருவதால் விரைவாக நிறைந்து வருகிறது.
6 hrs ago
14 / 35
பாசனத்திற்க்காக தண்ணீர் செல்லும் உடுமலை பி.ஏ.பி. கால்வாயின் கரைகள் சேதமடைந்துள்ளது.1
6 hrs ago
15 / 35
ஆயுத பூஜையை முன்னிட்டு விழுப்புரம் ரங்கநாதன் ரோட்டில் உள்ள சித்த விநாயகர் கோவிலில் ஓவியர் சரஸ்வதியை வித்தியாசமாக இசை கருவிகளை கொண்டு வரைந்த ஓவியம்
6 hrs ago
16 / 35
கோவை வடவள்ளியில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மோதிய மேட்டுபாளையம் மற்றும் ரெயின்போ அணியினர்.
7 hrs ago
17 / 35
ஆயுத பூஜை விழாவில் தாங்கள் பணிபுரியும் இயந்திரத்திற்கு பூஜை செய்து வழிபடும் குடுபத்தினர். இடம்: தடாகம் ரோடு, கோவில்மேடு, கோவை.
7 hrs ago
18 / 35
விருதாச்சலம் ரயில் நிலையத்தில் ஆயுத பூஜையையொட்டி ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விபத்து நடக்காமல் இருக்க கிடா வெட்டி பூஜை செய்தனர்.
7 hrs ago
19 / 35
ஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் தீர்த்தவாரிக்காக கோவிலில் இருந்து பாலாம்பிகை சமேத கார்ணிகாவனேஸ்வரர் புறப்பட்ட காட்சி.
7 hrs ago
20 / 35
கடலூர், விருதாச்சலம் ரயில் நிலையத்தில் ட்ராலியில் குழந்தைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
8 hrs ago
21 / 35
ஆயுத பூஜையை முன்னிட்டு, திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆட்டோக்களுக்கு பூஜை நடந்தது.
8 hrs ago
22 / 35
திருவள்ளுர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்மன் மகிஷாசுர மர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் திரிபுரசுந்தரி.
8 hrs ago
23 / 35
சபரி மலை தொடர்பாக கேரளாவில் நடக்கும் பந்த்தால் கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடியது.
8 hrs ago
24 / 35
ஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் புனித நீராடிய பெண் பக்தர்கள் காவிரி அன்னையை வழிப்பட்டனர்.
8 hrs ago
25 / 35
திருவள்ளுர் கன்யா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமத்தில் ஐந்து ருபாய் காசுகளால் செய்யப்பட்ட அலங்காரத்தில் அருள்பாலிக்கும் கன்யா பரமேஸ்வரி
8 hrs ago
26 / 35
ஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் புனித நீராடிய பக்தர்கள்.
8 hrs ago
27 / 35
ஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் தீர்த்தவாரிகாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பாலாம்பிகை சமேத கார்ணிகாவனேஸ்வரர்.
8 hrs ago
28 / 35
ஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில், அஸ்திரேதவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
8 hrs ago
29 / 35
ஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில், அஸ்திரேதவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
9 hrs ago
30 / 35
ஆயுத பூஜையையொட்டி ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்திற்கு சிகப்பு பொட்டு வைத்து பூஜை செய்தனர். இடம் விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு.
9 hrs ago
31 / 35
ஆயத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தினங்களை ஒட்டி, கோவை ஒப்பணக்கார வீதி ஸ்ரீ அத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி தேவியுடன் அருள்பாலித்த அத்தி விநாயகர்.
9 hrs ago
32 / 35
பளிச்...: விருதாச்சலம் ரயில் நிலையம் குப்பை தூசி இன்றி பளிச்சென்று காட்சி அளிக்கிறது1
10 hrs ago
33 / 35
விருதாச்சலம் மணிமுத்தா நதி பாலக்கரை ஆற்றுப் பாலத்தின் மீது ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.
10 hrs ago
34 / 35
விருதாச்சலம் மணிமுத்தா நதி பாலக்கரை ஆற்றுப் பாலத்தின் மீது ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.
15 hrs ago
35 / 35
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்.