தமிழகத்தின் கண்ணாடி

16 Jul 2018
5 hrs ago
1 / 35
பொள்ளாச்சி அருகே ஆழியாறு சின்னாறு பகுதியில் உள்ள காண்டூர் கால்வாய், ஏர்வால்வு சேதமடைந்ததால், தண்ணீர் அதிகளவு வெளியேறியது.
6 hrs ago
2 / 35
திண்டுக்கல் மலையடி சீனிவாசப்பெருமாள் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது
6 hrs ago
3 / 35
பொள்ளாச்சி அருகே ஆழியாறு சின்னாறு பகுதியில் உள்ள காண்டூர் கால்வாய், ஏர்வால்வு சேதமடைந்ததால், தண்ணீர் அதிகளவு வெளியேறியது.
6 hrs ago
4 / 35
கோவை சரவணம்பட்டி ரோடு போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது
7 hrs ago
5 / 35
சென்னை மெட்ரோ ரயில் துறை சார்பில், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று விளையாடிய குழந்தைகள். இடம்: நந்தனம், சென்னை.
7 hrs ago
6 / 35
வேப்பிலை அணிந்து மாலை: ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் திருவிழாவுக்கு அரிசி கேழ்வரகு வழங்க கோரி கடலுாரில் நடந்த மக்கள் குறைக்கேட்பு கூட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் வேப்பிலை மாலை அணிந்து கஞ்சி கலயத்துடன் மனு கொடுக்க வந்தனர்.
7 hrs ago
7 / 35
இலவச வீடுகள் வழங்க கோரி கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த கண்ணம்பாளையம் பகுதி மக்கள் .
8 hrs ago
8 / 35
அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்தது.
8 hrs ago
9 / 35
ஆண்டிபட்டி மதுரை காமராஜர் பல்கலையின் உறுப்புக் கல்லூரியில் அடிப்படைவசதிகளை மேம்படுத்தக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
9 hrs ago
10 / 35
குடையுடன் வலம்: கோவையில் தொடர் மழை பெய்ததால் காலை முதல் குடையுடன் வலம் வந்த பொது மக்கள். இடம்: காந்திபுரம்.
9 hrs ago
11 / 35
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில் அ.தி.மு.க., எம்.பி.கள். கூட்டம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடந்தது.
9 hrs ago
12 / 35
மலையை சூழ்ந்த கருமேகம்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து மழை பொழியும் அற்புத காட்சி. இடம் .உடுமலை.
10 hrs ago
13 / 35
சான்றிதழ் விநியோகம்: கோவை ராஜாவீதி துணி வணிகர் பள்ளியில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் நடந்தது.
10 hrs ago
14 / 35
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழங்கப்பட்டது. இடம்: மாநில பெண்கள் அரசு மேல்நிலை பள்ளி,எழும்பூர்.
10 hrs ago
15 / 35
பாலம் திறப்பு: திருச்சி ரயில்வே மேம்பாலத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி சென்னையில் இருந்தவாறே கானொளி காட்சி மூலம், பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
11 hrs ago
16 / 35
பச்சை ஓணான்: உலக பாம்புகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி பாம்பு பண்ணையில், பாம்புகள் மற்றும் பிற ஊர்வன பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த அமெரிக்க பச்சை ஓணான்.
11 hrs ago
17 / 35
பழநி முருகன் கோயில் ரோப்கார் 40 நாட்கள் நிறுத்தப்பட்டு ஆண்டு பராமரிப்பு பணி நடக்கிறது.
11 hrs ago
18 / 35
துண்டே துணை: கோவையில் காலை முதல் மழை பெய்து வருவதால் துண்டுடன் மக்கள் நடமாடுகின்றனர். இடம்: அவிநாசி ரோடு.
11 hrs ago
19 / 35
காமராஜ் பிறந்தநாள் விழாவையொட்டி கோவை மதுக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜ் படத்தை முன்னாள் மாணவர் முத்துசாமி திறந்து வைத்தார்.
12 hrs ago
20 / 35
உலக பாம்புகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி பாம்பு பண்ணையில், பாம்புகள் மற்றும் பிற ஊர்வனங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் விஷ தன்மையற்ற பாம்பை ஆர்வமுடன் பார்க்கும் கல்லூரி மாணவிகள்.
12 hrs ago
21 / 35
விருதுநகர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் சரிவர வராததால் இருக்கைகள் காலியாக கிடந்தன.
12 hrs ago
22 / 35
சென்னையில் வருமானவரி சோதனை நடைபெற்ற முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ரவிச்சந்திரன் பெசன்ட்நகர் வீடு.
13 hrs ago
23 / 35
உடுமலை அமராவதி அணை நிறைந்ததால் 9 மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீர் .
13 hrs ago
24 / 35
மீனவர்கள் மறியல்...: சென்னை, காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டோ காஸ் நிரப்பும் நிலையத்தை கண்டித்து மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.
13 hrs ago
25 / 35
ஆக்கிரமிப்பு அகற்றம்...: சென்னை, திருவெற்றியூர் நெடுஞ்சாலை, அஜாக்ஸ் பகுதிகளில்  நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகள், விளம்பர பேனர்களை மாநகராட்சியினர் அகற்றினர்.
13 hrs ago
26 / 35
டி.ஆர்.ஓ., கார் ஜப்தி: நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல் டி.ஆர்.ஓ., கார் ஜப்தி செய்யப்பட்டது
13 hrs ago
27 / 35
கோவை கொடிசியாவில் நடந்து வரும் அக்ரி இன்டெக்ஸ விவசாய கண்காட்சி கடைசி நாளையொட்டி குழுவாக வந்த விவசாயிகள் நினைவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
14 hrs ago
28 / 35
சாரல் மழை : கோவையில் அதிகாலை முதலே சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதில் நினைந்தபடியே உற்சாகமாய் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் .
17 hrs ago
29 / 35
உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்காததால் புதுச்சேரி சட்ட சபைக்குள் அனுமதிக்க கோரி பா.ஜ. நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
17 hrs ago
30 / 35
ஆடிப் பிறப்பை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து, திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்த்திரமரியாதை, இணையானையர் ஜெயராமன் தலைமையில் கொண்டுச் செல்லப்பட்டது.
18 hrs ago
31 / 35
உலக கால்பந்து போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் மோதிய இறுதிப்போட்டியினை புதுச்சேரி கடற்கரை அகண்ட திரையில்கண்டு ரசித்த முதல்வர் நாராயணசாமி
18 hrs ago
32 / 35
உலக கால்பந்து போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் மோதிய இறுதிப்போட்டியினை புதுச்சேரி கடற்கரை அகண்ட திரையில்கண்டு ரசிக்கும் முதல்வர் நாராயணசாமி
19 hrs ago
33 / 35
உலக கால்பந்து போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் இறுதிப்போட்டியினை புதுச்சேரி கடற்கரை அகண்ட திரையில்கண்டு ரசிக்கும் முதல்வர் நாராயணசாமி
21 hrs ago
34 / 35
உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலையில் நடந்தது... அதில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் சிலையை பார்க்கும் சிறுமிகள்...
21 hrs ago
35 / 35
ஜொலிக்கும் மேம்பாலம் ...கோவை போத்தனூர் மேம்பாலம் துவக்கத்திற்காக வண்ண விளக்குகளாள் ஜொலிக்கிறது.
Advertisement