தமிழகத்தின் கண்ணாடி

23 Apr 2018
2 mins ago
1 / 18
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படு்த்தும் வகையில் போலீசாரால் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை எழுதினர். இடம்: துரைபாக்கம்.
26 mins ago
2 / 18
திருவள்ளுரில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரனிகள் நடந்தது.
48 mins ago
3 / 18
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
52 mins ago
4 / 18
உடுமலை நகராட்சிக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் வளாக சுவற்றுக்கு வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
1 hr ago
5 / 18
29 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு தாம்பரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசார நோட்டீஸ் வழங்கப்பட்டன.
1 hr ago
6 / 18
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் வல்லம்பேடு குப்பத்தில் உள்ள மீனவர்கள் கொடுத்த மனு மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என 28 குடும்பங்கள் 110 நபர்களை கருணை கொலை வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.
1 hr ago
7 / 18
தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடி மகிழும் சிறுவர்கள்.
2 hrs ago
8 / 18
சென்னை மாநகராட்சி பெருநகர விரிவாக்க திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை இனணப்புக்குறித்த கருத்துப் பகிர்வுக் கூட்டம். சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சி.எம்.டி.ஏ., தலைமை நிர்வாக அதிகாரி மதிவானன், நகரம் மற்றும் ஊரக திட்ட ஆனணயர் பீலா ராஜேஷ், வீடு மற்றும் நகர்புற வளர்ச்சி துறை முதன்மைச் செயலர் கிருஷ்ணன், சி.எம்.டி.ஏ. முதன்மைச் செயலர் ராஜேஷ் லகானி, துணை ஆணையர் பணிகள் மந்த்ரி கோவிந்தராவ். ஆகியோர் கலந்துகொண்டனர்.
3 hrs ago
9 / 18
சர்வதேச புத்தக தினம் இன்று, திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாவட்ட நூலகத்தில் ஆழ்ந்த படிப்பில் ஈடுபட்ட முதியவர்.
3 hrs ago
10 / 18
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு, இ சேவை மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு செய்யும் வசதியை, திருப்பூர் கலெக்டர் பழனிசாமி துவக்கி வைத்தார்.
4 hrs ago
11 / 18
விழுப்புரம் கலெக்டர் அலுவலக இ சேவை மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்ச்சி பெற்றவர்கள் சான்றுகள் சரிபார்க்கும் சேவையை கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
4 hrs ago
12 / 18
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.அருகில் எஸ்.பி., ஜெயக்குமார்.
4 hrs ago
13 / 18
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.
4 hrs ago
14 / 18
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி உடுமலையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
4 hrs ago
15 / 18
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் போக்குவரத்து போலீசார் மற்றும் வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.
4 hrs ago
16 / 18
சென்னை சிந்தாதிரிப்பேட்டை திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆதிபுரீஸ்வரர்.
10 hrs ago
17 / 18
கோவை நவ இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் கல்லூரியில் கடல் உணவுத் திருவிழா நடந்தது. இதில் நடந்த கண்கவர் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.
14 hrs ago
18 / 18
கோவை நவ இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் கல்லூரியில் கடல் உணவுத் திருவிழா நடந்தது, இதில் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது.
Advertisement