தமிழகத்தின் கண்ணாடி

26 May 2018
39 mins ago
1 / 13
சென்னை எழும்பூர் ரயில்நிலையம் டூவீலர் பார்க்கிங்கில் மேற்கூரை இல்லாமல் வெயிலில் நிற்கும் வாகனங்கள்.
1 hr ago
2 / 13
விழுப்புரம் அரசு பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் தனியார் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
1 hr ago
3 / 13
வீடுர் அணையை தூர்வார கோரி தி.மு.க., எம்.எல்.ஏ,. மாசிலாமணி விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார்.
2 hrs ago
4 / 13
உங்களால் முடியும் : தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய உங்களால் முடியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்... இடம் :பெரம்பூர், சென்னை.
3 hrs ago
5 / 13
குழந்தைகளுக்கு பறை இசை நிகழ்ச்சி பயிற்சி திருப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் அளிக்கப்பட்டது.
3 hrs ago
6 / 13
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில்கழுவன் திருவிழாவில் கழுவன் வேடமிட்டவரை விரட்டி மகிழும் இளைஞர்கள்.
4 hrs ago
7 / 13
புதுச்சேரி சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொகுதி மக்கள் பயன் பெறும் வகையில் ஜிப்மர் மருத்துவ மனையில் தனது ஆதரவாளர்களுடன் ரத்த தானம் செய்தார்.
4 hrs ago
8 / 13
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மையத்தில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது.
5 hrs ago
9 / 13
பரிசு வழங்கல்: கடலுார் கூத்தப்பாக்கத்தில் நக்ஷத்ரா ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவிகளுக்கு, மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் பரிசு வழங்கினார். அருகில், மாவட்ட இசைப் பள்ளி வெங்கடேசன், கிருஷ்ணராஜூ, தீபா. 
7 hrs ago
10 / 13
ஊட்டியில், தினந்தோறும் கனமழை பெய்து வருகிறது. ஆட்டின் தலை நனையாமல் இருக்க, சில நல்ல உள்ளங்கள் பிளாஸ்டிக்கை கொம்பில் மாட்டிவிட்டுள்ளனர்.
8 hrs ago
11 / 13
சில தினங்களாக பெய்துவரும் மழையால் சிவகங்கை அருகே தமறாக்கி கண்மாய் நிரம்பி வருகிறது அதில் ஆனந்த குளியல் ஆடும் சிறுவர்கள்.
10 hrs ago
12 / 13
ஊட்டி தாவரவியல் பூங்காவில், கனமழைக்கு வடிகால் கால்வாய்கள் துார்வராதலால் நீர் குளம் போல் தேங்குகிறது.
14 hrs ago
13 / 13
ஊட்டி லாரன்ஸ் பள்ளி 160வது நிறுவனர் தின விழாவில், குதிரை சாகச போட்டியில் அசத்திய மாணவ, மாணவியர்கள்.
Advertisement