தமிழகத்தின் கண்ணாடி

11 Dec 2018
38 mins ago
1 / 12
திருநெல்வேலி, எல்ஐசி தலைமை அலுவலகம் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் கிளையில் வங்கி பாஸ் புத்தகம் பதியும் இயந்திரம் பழுதடைந்து பல நாட்களாகியும் கவனிக்க அதிகாரிகள் இல்லை.
1 hr ago
2 / 12
பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் துணை சபாநாயகர் சிவக்கொ ழுந்து, முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன்.
2 hrs ago
3 / 12
சென்னை  ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் புற நோயளிகளுக்கான 8 மாடி கட்டட பணிகள் ஜரூராக நடைபெறுகிறது.
4 hrs ago
4 / 12
மதுரை சேதுபதி பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்த நாள் விழாவில் பெண்கள் மாலை அணிவித்தனர்.
4 hrs ago
5 / 12
மதுரை சேதுபதி பள்ளியில் நடந்த பாரதியார் பிறந்த நாள் விழாவில் டாக்டர். சங்குமணி மாணவர்களுக்கு கவிதை புத்தங்களை வழங்கினார். அருகில் அமுதசுரபி பாலகிருஷ்ணன்.
4 hrs ago
6 / 12
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, குடில்களில் இடம்பெறும் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இடம்: புதுச்சேரி ஜென்ம ராக்கினி மாதா கோயில் அருகில் .
7 hrs ago
7 / 12
திருப்பூர், யுனிவர்சல் தியேட்டர் ரோடு ஷீரடி சாய் பீடம் ஆண்டுவிழாவில் சுகிசிவம் சொற்பொழிவு நடந்தது. இதில், பங்கேற்ற பொது மக்கள்.
9 hrs ago
8 / 12
கோவை தாஜ் விவான்டா ஓட்டலில் வீட்டே இண்டர்நேஷனல் அக்கவுண்டிங் சர்வீசஸ் சார்பில் நடந்த கருத்தரங்கில் பார்வையற்றோர்க்கான எழுத்து முறையில் வாழ்வின் விளக்கம் என்ற புத்தகத்தினை (இடமிருந்து) தாஜ் விவான்டா பொது மேலாளர் குமார், வீட்டே இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் டேனியல்விக்டர், பார்வையற்றோர் தேசிய கூட்டமைப்பின் துணை தலைவர் குசும்லதா மாலிக், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், சென்னை மகளிர் ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் வெளியிட்டனர்.
10 hrs ago
9 / 12
கரூர் வைஸ்யா வங்கி , தாம்பரம் மண்டல அலுவலகத்தின் சார்பில் பாரத ரிசர்வ் வங்கியின் ( ஆர் .பி .ஐ) துணை நிறுவனமாகிய பேங்கிங் கோட்ஸ் அண்டு ஸ்டாண்டர்ட்ஸ் போர்டு ஆப் இந்தியா மூலம் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பி .சி.எஸ் .பி.ஐ.,யின் மூத்த துணைத்தலைவர் கிருஷ்ணன் பேசினார் உடன் கரூர் வைஸ்யா வங்கியின் தாம்பரம் மண்டலத்தின் மேலாளர் கிருஷ்ணன் , மண்டல அலுவலக முதன்மை மேலாளர் மகாதேவன் உள்ளனர் .இடம் : கிழக்கு தாம்பரம் .
11 hrs ago
10 / 12
நடவுப்பணி துவக்கம் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வெங்காயம் நடவு செய்ய பாத்தி கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
12 hrs ago
11 / 12
சாம்பியன் பட்டம் : ஈஷா கிராமோத்சவம் சார்பில் நடந்த மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கோவை கற்பகம் பல்கலை அணியினர்.
14 hrs ago
12 / 12
மீன் வாங்குவதில் ஆர்வம் : காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு ஜப்பான் நாட்டினர் வருகை தந்து அவர்களின் விருப்ப உணவான சூரை கானாங்கெளுத்தி, பாறை உள்ளிட்ட மீன் வகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.