தமிழகத்தின் கண்ணாடி

20 Aug 2018
16 mins ago
1 / 7
ராஜிவ் பிறந்த நாள்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர காங்., சார்பில் ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு, பிரியாணி வழங்கப்பட்டது.
35 mins ago
2 / 7
முதல் போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதகுகள் வழியாக வெளியேறும் காட்சி.
1 hr ago
3 / 7
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் நிவாரண பொருட்களுடன் மீட்பு பணிக்காக செல்லவுள்ள கோவை வெள்ளலூர் ஆர்.ஏ.எப்., 105 அதிவிரைவு படையினர் .
1 hr ago
4 / 7
த.மா.கா நிறுவனர் மூப்பனாரின் 88வது பிறந்த நாள் விவசாய தினமாக கொண்டாடப்பட்டது. கோவை சிங்கநல்லூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருள்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
2 hrs ago
5 / 7
நூல் வெளியீடு : கோவை கிக்கானிக் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், மரபின்மைந்தன் கதைகள் நூல் வெளியீட்டு விழாவில் நூலை மலேசிய முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் வெளியிட ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்கள் நிர்வாக அறங்காவலர் மலர்விழி பெற்றுக் கொண்டார். அருகில் இடமிருந்து எழுந்தாளர் மரபின்மைந்தன் முத்தையா, கவிஞர் சுகிசிவம், கே.பி.ஆர். குழுமங்கள் தலைவர் ராமசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், பி.எம்.சி., டெக் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரி செயலாளர் குமார் உள்ளிட்டோர் .
6 hrs ago
6 / 7
மனிதர்கள் தொந்தரவு இல்லாமல் நிம்மதியுடன் கூட்டம் கூட்டமாக வசித்து வரும் அழிந்து வரும் பறவையினமான தூக்கனாங்குருவிகள். இடம்: கோவை ஜாகீர் நாயக்கன்பாளையம்.
10 hrs ago
7 / 7
கோயில் சொத்து கோயிலுக்கு என்ற கோஷத்துடன், இந்து முன்னணி சார்பில்,திருப்பூரில் இருந்து பழனி வரை நடந்த வாகனஊர்வலத்தில் கலந்துகொண்ட பெண்கள்.