தமிழகத்தின் கண்ணாடி

13 Nov 2018
1 hr ago
1 / 40
கடலூரில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் பகுதியில் உள்ள விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டது.
2 hrs ago
2 / 40
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முருகன் கோவிலில் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடந்தது. அதில் முருகனை எதிர்த்து போர் புரியவந்த சூரபத்மன்.
2 hrs ago
3 / 40
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் கூடியிருந்த பக்தர்கள் வெள்ளம்.
4 hrs ago
4 / 40
விழுப்புரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்ற 12 ஷேர் ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
4 hrs ago
5 / 40
புதுச்சேரி பஞ்சாலை சங்கத்தினர் நிலுவை சம்பளம் வழங்க கோரி ரோடியர் மில் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4 hrs ago
6 / 40
புயல் எச்சரிக்கையொட்டி மீட்பு பணிக்காக கடலூர் தீயணைப்பு நிலையத்தில் தயார் நிலையில் உள்ள தீயணைப்பு வீரர்கள்
4 hrs ago
7 / 40
புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது
4 hrs ago
8 / 40
காலை 8.30 மணி வரை பனிமூட்டம் அதிகமாக இருந்தது.இடம்: சிவகங்கை-இளையாங்குடி சாலை கூத்தாண்டம் அருகே.
4 hrs ago
9 / 40
சிவகங்கை-தொண்டி சாலை பள்ளிவாசல் எதிரே சாலையில் வாகனங்களை நிறுத்தி வெல்டிங் வைப்பதால் வாகன ஓட்டிகளின் கண்ணை பாதிக்கின்றது.
4 hrs ago
10 / 40
திண்டுக்கல் -வத்தலக்குண்டு ரோடு அருகே உள்ள குளத்தில் இரை தேடி வந்த பறவைகள்.
4 hrs ago
11 / 40
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிவகங்கை விஸ்வநாதர் கோயிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
4 hrs ago
12 / 40
மதுரை ரேஸ்கோர்ஸில் நடந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கான சிறப்பு முகாமில் ஜூடோ பயிற்சி அளிக்கப்பட்டது.
4 hrs ago
13 / 40
கந்த சஷ்டியை முன்னிட்டு பழநி திருஆவினன்குடி கோயிலில் வாழைத்தண்டு, பழங்கள் கூட்டு தயார் செய்து வழிப்பட்ட பக்தர்கள் .
4 hrs ago
14 / 40
திண்டுக்கல்லில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
4 hrs ago
15 / 40
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டியில் விளக்குகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்.
4 hrs ago
16 / 40
கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயில் கிரிவீதியில் சூரன் வதம் நடந்தது.
4 hrs ago
17 / 40
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமியம்மன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் கோலாட்டம் ஆடி வந்த பக்தர்கள்.
4 hrs ago
18 / 40
ஊட்டி அருகே அகலாரில் உள்ள, குருகுல பள்ளி மாணவ,மாணவிகள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு , வள்ளலார் வேடமணிந்து பாடல்கள் பாடினார்கள்.
4 hrs ago
19 / 40
கோவை சுக்கிரவார் பேட்டை பால தண்டாயுதபாணி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நடந்த சூரசம்ஹார விழா.
4 hrs ago
20 / 40
போதிய மழை இல்லாததால் உத்திரமேருர் ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் கால்நடைகள் ஏரியில் முளைத்திருக்கும் புற்களை மேய்கின்றன.
4 hrs ago
21 / 40
நிலவேம்பு குடிநீர்...: கொசுவால் பரவும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைக் கட்டுப்படுத்த திருவொற்றியூர், அண்ணாமலை நகர்பகுதிகளில் நிலவேம்பு குடிநீரை வழங்கிய அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர்.
4 hrs ago
22 / 40
, : சென்னையில் ஆங்காங்கே பெரிய கட்டடங்களில் விளம்பரம் செய்வதற்கு இரும்பினால் செய்யப்பட்ட கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து தொங்கி கொண்டிருக்கிறது. கஜா புயலின் வேகத்தில் இரும்பு கம்பிகள் சாய்ந்து பலரது தலையை பதம் பார்ப்பதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் உடனே அகற்ற முன்வருவார்களா ? இடம் : தி .நகர் பஸ் நிலையம் .
4 hrs ago
23 / 40
சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட வேளச்சேரியில் , மதுரை சரவணா பல்நோக்கு மருத்துவமனை சார்பில் நடந்த காய்ச்சல் நோய்தடுப்பு சிறப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்து உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினார் .
4 hrs ago
24 / 40
கொசுவால் பரவும் டெங்கு உள்ளிட்ட காய்சலைக் கட்டுப்படுத்த திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிலவேம்புக்குடிநீர். 
4 hrs ago
25 / 40
பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிக்கான இயந்திரங்களை அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கினார்கள்.
4 hrs ago
26 / 40
சென்னை ராயப்பேட்டை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் ஓய்வூதியர்கள், உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்பிக்க குவிந்தனர்.
4 hrs ago
27 / 40
பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிக்காக, மாநகராட்சிக்கு புதிதாக வழங்கப்பட்ட இயந்திரங்கள். இடம்: சேப்பாக்கம்,சென்னை.
4 hrs ago
28 / 40
திருப்பரங்குன்றத்தில் நடந்த சூரசம்ஹாரத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி.
5 hrs ago
29 / 40
கந்தசஷ்டி விழாவையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
5 hrs ago
30 / 40
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
5 hrs ago
31 / 40
சென்னை பெசன்ட் நகரில் அறுபடை வீடு முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடந்தது
5 hrs ago
32 / 40
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் மாநகராட்சி மாடு அறுவை கூடம் அருகே கன்றுகளை அடைத்து வைக்கப்பட்டிருந்த கூடாரம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
5 hrs ago
33 / 40
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயிலில் நடந்த சூரசம்ஹார விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
5 hrs ago
34 / 40
கடலூர் தென்பெண்ணையாற்றில் குப்பை கொட்டுவதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் வாகனங்கள் உள்ளே செல்லாமல் இருக்க பள்ளம் வெட்டி தடுப்பு ஏற்படுத்தினர்.
5 hrs ago
35 / 40
புதுச்சேரி அருகே பெரிய முதலியார் சாவடியில், கஜாபுயல் முன்னெச்சரிக்கை பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள உபகரணங்களை விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் எஸ் பி விஜயகுமார் பார்வையிட்டனர்.
5 hrs ago
36 / 40
கஜா புயல் முன்னெச்சரிக்கை பணிக்காக அரக்கோணத்தில் இருந்து புதுச்சேரி வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்,
5 hrs ago
37 / 40
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான பெரிய முதியார்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் மாலையில் கடலை மற்றும் டீ வழங்கபட்டது.
5 hrs ago
38 / 40
குமரன்குன்றத்தில் நடந்த சூரசம்ஹார விழாவில் தாரகாசூரனை ஜெயந்தி நாதர் வதம் செய்தார். இடம்: குரோம்பேட்டை குமரன் குன்றம், சென்னை.
5 hrs ago
39 / 40
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் நடந்தது. அருகில் எஸ்.பி.,சரவணன்.
6 hrs ago
40 / 40
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.