தமிழகத்தின் கண்ணாடி

19 Oct 2018
41 mins ago
1 / 40
வீரவணக்கம் நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் போலீசார் ஊர்வலத்தை எஸ்.பி. சக்திவேல்  துவக்கி வைத்தார்.
1 hr ago
2 / 40
நவராத்திரியை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கணபதி தேசிய நடுநிலைப் பள்ளியில் பாரம்பரிய, பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
1 hr ago
3 / 40
ஆயுத பூஜையை முன்னிட்டு உடுமலை தீயணைப்பு நிலையத்தில் உள்ள வாகனத்திற்கு பூஜை செய்யப்பட்டு தடியங்காய் மூலம் திருஷ்டி சுற்றப்பட்டது.
2 hrs ago
4 / 40
புதுச்சேரி சாரதாம்பாள் கோயிலில் விஜயதசமி முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்து
2 hrs ago
5 / 40
திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள, முதியவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
2 hrs ago
6 / 40
பழநி முருகன் கோயில் நவராத்திரி விஜயதசமி விழாவில், மலையில் இருந்து கீழே வந்த பராசக்தி வேலை, பாதவிநாயகர் கோயில் அருகே வரவேற்ற பக்தர்கள்.
3 hrs ago
7 / 40
ஸ்ரீ சமர்த்த ஸத்குரு ஸ்ரீ சாயிநாதர் மகானின் 100 ம் ஆண்டு மஹா சமாதி விழா கோவை மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை சார்பில், சிறப்பு பூஜை நடந்தது.
3 hrs ago
8 / 40
பிளாஸ்டிக் இல்லா நகரை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை மணலி, மாத்தூர் எவர்வின் பள்ளியில் நடந்தது. இதில் 85 பள்ளி வாகனங்களை விழிப்புணர்வு எழுத்துக்களாக வடிவமைத்து அசத்தினர்.
3 hrs ago
9 / 40
தினமலர் மாணவர் பதிப்பு , எவர்வின் குழும பள்ளிகள் இணைந்து வழங்கிய அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி கிழக்கு தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் நடந்த்து. இதில் கலந்து கொண்டவர்களுக்கு தினமலர் சார்பாக ஸ்கூல் பேக் வழங்கப்பட்டன.
3 hrs ago
10 / 40
சென்னை, தண்டையார் பேட்டை, நேதாஜி நகரில் சாகுல் என்பவரது வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 500 கிலோ மதிப்புக்கொண்ட செம்மரக்கட்டைகளை போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
3 hrs ago
11 / 40
சென்னை புறநகரான வேளச்சேரி பகுதியில் பெய்த மழையால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கிய மழை நீர்
3 hrs ago
12 / 40
சுரங்கபாதையோ, பாலமோ கட்டிக்கொடுங்கன்னு கேட்டு தவமாய் தவமிருந்தும் பலனில்லாமல் சரக்கு கூட்ஸ் ரயில் வந்தால் பலமணிநேரம் காத்திருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் அவலம் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கே...! இடம்- தண்டையார் பேட்டை, இந்தியன் ஆயில் நிறுவனம் அருகே.
3 hrs ago
13 / 40
விஜயதசமியை முன்னிட்டு திண்டுக்கல் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சியில்  குழந்தைகளை நெல்மணிகளில் எழுத வைத்தனர்.
3 hrs ago
14 / 40
உடுமலை டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகளில் பிடிபட்ட இரு சக்கர வாகனங்கள் குப்பை மாதிரி கிடந்தன. ஆயுத பூஜையையொட்டி வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு கிரைம் நம்பர் எழுதும் பணி நடந்தது.
3 hrs ago
15 / 40
தசரா விழாவை முன்னிட்டு நடந்த ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் மதுரை, சிவகங்கை அணிகள் மோதின.இடம்: சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானம்.
3 hrs ago
16 / 40
ஸ்போர்ட்ஸ் பெனடிக் கால்பந்து கழகம் சார்பில் தேனியில் நடந்த தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், மதுரை - திண்டுக்கல் அணிகள் மோதின.
3 hrs ago
17 / 40
நூறாவது மகாசமாதி தினத்தை முன்னிட்டு உடுமலை ஆன்ந்த சாய்பாபா கோவிலில் சிறப்பு அலங்காந்தில் பாபா அருள்பாலித்தார்.
3 hrs ago
18 / 40
விஜயதசமியை முன்னிட்டு தேனியில் அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற லைப் கல்வி அறக்கட்டளை நிறுவனம் சார்பில் சிறப்பு யாகம் நடந்தது.
3 hrs ago
19 / 40
கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் விஷ்ணு சமாஜ் சார்பில் நவராத்திரியை ஒட்டி துர்கா சிலையை கடலில் கரைக்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
3 hrs ago
20 / 40
உடுமலை நகராட்சி சார்பில் வீடுகளில் கொசுக்கள் இல்லை என ஆய்வு செய்யப்பட்டு அதிகாரிகள் வீட்டு சுவரில் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர்.
3 hrs ago
21 / 40
உடுமலை தளி ரோட்டில் கார்களை நிறுத்தி விட்டு சென்று விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
3 hrs ago
22 / 40
ராமநாதபுரம் அருகே நயிணார்கோயில் பகுதியில் விவசாயப்பணிகள் தொடங்கியுள்ளதால் நெற்பயிருக்கு உரமிடும் விவசாயி.
3 hrs ago
23 / 40
விஜயதசமியை முன்னிட்டு துவக்கப்பள்ளிகளில் திறந்து மாணவர்கள் சேர்க்கை நடத்திட பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ள நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மூடப்பட்டு இருந்தது.
3 hrs ago
24 / 40
அதிக மழையால் நெற்பயிர்கள் அழுகிவருகின்றன இடம்:ராமநாதபுரம் அருகே நெடுங்குறிச்சி.
3 hrs ago
25 / 40
நவராத்திரியை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கணபதி தேசிய நடுநிலைப் பள்ளியில் புராண கதைகளின் கொலு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
4 hrs ago
26 / 40
பழநி - கொடைக்கானல் ரோட்டில் திரியும் குரங்குகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
4 hrs ago
27 / 40
பழநி கோயில் வின்ச் ஸ்டேசன் அருகே வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமிப்பு செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
4 hrs ago
28 / 40
விஜயதசமியை முன்னிட்டு கோவை, மதுக்கரை லக்ஷ்மி நாராயணன் கோவிலில் வித்தியாரம்பம் நடந்தது. இதில் குழந்தைகளின் நாவில், மோதிரத்தால் எழுதினர்.
4 hrs ago
29 / 40
விஜயதசமியை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மாஹாலட்சுமி கோவிலில் வித்தியாரம்பம் நடந்தது.
4 hrs ago
30 / 40
விஜயதசமியை முன்னிட்டு கோவை, ஈச்சனாரி மாஹாலட்சுமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தேவியர்.
4 hrs ago
31 / 40
விஜயதசமியை முன்னிட்டு புதிதாக பள்ளியில் சேர்ந்து நெல்லில் எழுத்துக்களை எழுதி பாடத்தை துவங்கும் இந்த குழந்தை. இடம்- ராயபுரம், ஶ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளி. 
4 hrs ago
32 / 40
விஜயதசமியை முன்னிட்டு விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஹயக்கிரிவர் சன்னதியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் முதல் எழுத்தை எழுத வைத்தனர்.
5 hrs ago
33 / 40
சிவகங்கை தெப்பக்குளத்தில் மூழ்கிய சிறுவனை, தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
5 hrs ago
34 / 40
கோவை வடவள்ளியில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சார்பில் நடந்த கால்பந்து போட்டியில் மோதிய போனிக்ஸ் மற்றும் சைனிங் ஸ்டார் அணியினர்.
5 hrs ago
35 / 40
அரசு உதவி பெறும் பேபி தொடக்கப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு, குழந்தைகளுக்கு அட்மிஷன் நடைபெற்றது இதில் குழந்தைகளுக்கு ஆசிரியைகள் 'அ' என்ற முதல் எழுத்து தொடங்கி வைத்தனர். இடம்: சென்னை மேற்கு தாம்பரம்.
5 hrs ago
36 / 40
நெல்லையில் சரஸ்வதி கோயில் மற்றும் நெல்லையப்பர் கோயிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர்கள் பங்கேற்றனர்.
5 hrs ago
37 / 40
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் உள்ள ரயில்வடிவ அங்கன்வாடி மையத்திலும் வித்யாரம்பம் நடந்தது.
5 hrs ago
38 / 40
சபரிமலைக்கு  சென்ற  இரண்டு இளம் பெண்கள்  பக்தர்களின்  எதிர்ப்பால் போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர்.
5 hrs ago
39 / 40
கோவை வடவள்ளியில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மோதிய எச்.சி.ஏ., மற்றும் பென்டாஸ்டிக் அணியினர்.
6 hrs ago
40 / 40
விஜயதசமியை முன்னிட்டு விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஹயக்கிரிவர் சன்னதியில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் முதல் எழுத்தை எழுதி பழகினர்.