தமிழகத்தின் கண்ணாடி

23 Sep 2018
4 hrs ago
1 / 40
கலைநிகழ்ச்சி : திருப்பூர் காயத்ரி மஹாலில் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது.
4 hrs ago
2 / 40
துவக்கவிழா : புதுச்சேரி தலைமை செயலகத்தில் ஆயூஷ்மான் பாரத் தேசிய காப்பீட்டு திட்ட துவக்க விழாவில் கவர்னர் கிரண்பேடி பயனாளிகளுக்கு அடையாள அட்டைவழங்கினார். அருகில் தலைமை செயலர் அஸ்வனிகுமார், நிதித்துறை செயலர் கந்தவேலு.
5 hrs ago
3 / 40
கால்பந்து போட்டி : திண்டுக்கல்லில்  நடந்த கால்பந்து போட்டியில் கே.எப்.சி. காமராஜபுரம் அணியும் எஸ்.டி.எஸ்.ஏ. மேட்டுப்பட்டி அணியும் மோதின.
5 hrs ago
4 / 40
கோவை ராம்நகரில் உள்ள ஐயப்பா பூஜா சங்கத்தில், நடந்த கோகுலாஷ்டமி மற்றும் நவராத்திரி இசை விழாாவில்,   ராமகிருஷ்ணன் மூர்த்தி இசை நிகழ்ச்சி நடந்தது.
6 hrs ago
5 / 40
தாழ்வாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலால் தாறுமாறாக சென்று விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள். இடம்: எல்.பி., சாலை அடையார்.சென்னை.
7 hrs ago
6 / 40
கோவை வ.உ.சி., மைதானத்தில் ஏழு அதிசயங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஈபிள் டவர்.
9 hrs ago
7 / 40
பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சூரணோத்ஸவம் சேவையில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
9 hrs ago
8 / 40
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.பொறியியல் மற்றும் தொழில் நூட்ப கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அரசு வேளாண் பல்கலை துணை வேந்தர் ராமசாமி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
9 hrs ago
9 / 40
திண்டுக்கல் - கரூர் ரோட்டில் உள்ள அரச மரத்தில் கூட்டு குடும்பமாக வாழும் வவ்வால்கள்.
9 hrs ago
10 / 40
திருப்பூர் 15 வேலம்பாளையம் மனவளக்கலை மன்ற ஐம்பெருவிழா, எஸ்.கே.எம்., மகாலில் நடந்தது. அதில் பாரதிபாஸ்கர் பேசினார்.
9 hrs ago
11 / 40
கோவை சிங்க நல்லூர் காமராஜர் ரோட்டிலுள்ள இந்திய பருத்தி கழகத்தில் ஆண்டு பொது குழு கூட்டம் நடந்தது.
9 hrs ago
12 / 40
திருப்பூர் 15 வேலம்பாளையம் மனவளக்கலை மன்ற ஐம்பெருவிழா, எஸ்.கே.எம்., மகாலில் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.
9 hrs ago
13 / 40
கோவை காளப்பட்டியிலுள்ள லிவோ ஸ்போர்ட்ஸில் டென்னிஸ் போட்டி நடந்தது.
9 hrs ago
14 / 40
மதுரை ரேஸ்கோர்ஸில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது.
9 hrs ago
15 / 40
கோவை சவுரிபாளையத்தில் சீனியர் பிரிவுக்கான கேரம் போட்டி நடந்து வருகிறது. இதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள்
9 hrs ago
16 / 40
வாக்காளர் பெயர் சேர்ப்பு திருத்த சிறப்பு முகாம் நடந்தது. திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் மனு கொடுத்த பொதுமக்கள்.
9 hrs ago
17 / 40
மண்பாண்ட தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு, திருப்பூர் கராட்டாங்காடு மாகாளியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.
9 hrs ago
18 / 40
திருப்பூர் மணியகாரம்பாளையம் காமாட்சியம்மன்நகர் 2வது வீதியில் உள்ள ஓம்சக்தி மன்றத்தில், ஆடிபுர கஞ்ச கலய ஊர்வலம் நடந்தது.
9 hrs ago
19 / 40
மதுரை கோகிலா சித்த மருத்துவமனை, மடீட்சியா  நடத்திய ஆயுஷ் மருத்துவ கருத்தரங்கில்  மத்திய சித்த மருத்துவ கவுன்சில் உறுப்பினர் ஸ்ரீராம் பேசினார். இடமிருந்து, மடீட்சியா செயலாளர் முருகானந்தம்,  டாக்டர் ஜெய வெங்கடேஷ், தலைவர் முருகன், தொழில் முனைவோர் வளர்ச்சி மைய துணை இயக்குனர் அழகர்சாமி.
9 hrs ago
20 / 40
பாரதி நெல்லையப்பர் மன்றம் சார்பில், சென்னை மூவரசம்பேட்டையில் இயல் இசை கலை விழா நடந்தது. இதில் பாரதி ஆய்வு மற்றும் சேவைக்கான நெல்லையப்பர் விருதினை இலக்கியச்செல்வர் வெங்கட்ராமனுக்கு தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். உடன் நடராஜன்.
9 hrs ago
21 / 40
திண்டுக்கல்லில் நடந்த மாவட்ட சிலம்ப போட்டியில் பங்கேற்ற மாணவிகள் .
9 hrs ago
22 / 40
வெயிலுக்கு முகத்தை மூடி சரக்கு வாகனத்தில் பயணம் செய்யும் பெண்கள். இடம் .உடுமலை
9 hrs ago
23 / 40
கோவை மருதமலை அடிவாரத்திலுள்ள பொதிகை மண்டபத்தில் நடந்த அகில பாரத அய்யப்ப சேவா சங்க முப்பெரும் விழாவில் தேசிய தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை பேசினார். அருகில் கோவை மாவட்ட தலைவர் வெங்கடேஷ், தமிழ் மாநில அமைப்பு தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் .
9 hrs ago
24 / 40
திண்டுக்கல்லில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மன்சூர் யங்ஸ்டர்ஸ் அணியும் காட்சன் அணியும் மோதின.
9 hrs ago
25 / 40
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்
10 hrs ago
26 / 40
விழுப்புரம் அடுத்த கப்பூர் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை திருச்சி மண்டல டாஸ்மாக் உதவி கலெக்டர் ராஜுவ் தலைமையில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
10 hrs ago
27 / 40
கோவை கொடிசியாவில் கார், பைக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள வாகனங்கள் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
10 hrs ago
28 / 40
சுட்டெரிக்கும் வெயிலை தணிக்க ஒன்று கூடிய கரு மேக கூட்டங்கள். மழை தருமா என்பதே எதிர்பார்ப்பு ... இடம்: கோவை மருதமலை.
10 hrs ago
29 / 40
மதுரையில் நடந்த தேசிய அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்றவர்கள்.
10 hrs ago
30 / 40
கோவை கொடிசியாவில் நடந்த போட்டோ,வீடியோ கண்காட்சியில் கேமரா தொழில்நுட்பம் செயல்முறை விளக்கமாக இருந்ததால் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
10 hrs ago
31 / 40
கடலூர், பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தை முன்னிட்டு யானை வாகனத்தில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
10 hrs ago
32 / 40
கோவை கொடிசியாவில் நடந்த போட்டோ,வீடியோ கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த பேஷன் ஷோ.
10 hrs ago
33 / 40
மெட்ரோ ரயில் பணிகள் ஜரூர்...: சென்னை, திருவொற்றியூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. தூண்கள் நிலை நிறுத்தப்பட்டு அடுத்த கட்டப்பணிக்கு தயாராக உள்ளது. இடம்- அஜாக்ஸ்.
10 hrs ago
34 / 40
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகா மை கலெக்டர் சுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
11 hrs ago
35 / 40
கோவை மாநகரில் உள்ள 25 போலீஸ் ஸ்டேஷன்களில் புதிதாக அமைக்கப்படவுள்ள நூலகத்தின் அறிமுகவிழா கோவை உப்பிலிபாளையம், போலீஸ் சமுதாயக் கூடத்தில் நடந்தது. இதில் வைக்கப்பட்டிருந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிட்ட போலீசார் .
12 hrs ago
36 / 40
கோவை, திருமலையாம்பாளையம் நேரு கல்லூரியில் நடந்த அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான 10வது மண்டல கால்பந்து இறுதி போட்டியில் வெற்றி பெற்ற நேரு கல்லூரி அணியினர்.
12 hrs ago
37 / 40
விருதாச்சலம் - உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் விவசாயிகள் வேர்கடலை கம்பு போன்றவற்றை ரோட்டில் உலர்த்துகின்றனர். சாலையின் நடுவில் கற்களை வைத்துள்ளனர். இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையில் உள்ளது.
12 hrs ago
38 / 40
பாரதி நெல்லையப்பர் மன்றம் சார்பில், சென்னை மூவரசம்பேட்டையில் இயல் இசை கலை விழா நடந்தது. இதில் பாரதி நெல்லையப்பர் மன்ற நிறுவனர் எதிரொலி விசுவநாதன் எழுதிய வரலாறு படைத்த மூவர் என்ற நூலை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட, நீதிபதி வள்ளிநாயகம் பெற்றுக்கொண்டார். உடன் பாரதி நெல்லையப்பர் மன்றதின் செயலர் இளசை கிருஷ்ணன், நடராஜன் உள்ளிட்டோர்.
12 hrs ago
39 / 40
திருச்சியில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தின் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் சஞ்சிவ் ஜிந்தால் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
12 hrs ago
40 / 40
திருச்சியில் சர்வதேச விமான நிலையத்தில், புதிய டெர்மினல் அமைப்பதற்கான மினி யேச்சர் (மாதிரி) கட்டமைப்பு.