தமிழகத்தின் கண்ணாடி

24 Sep 2018
8 mins ago
1 / 19
கோவையில் பெய்த பலத்த மழையினால் மருதமலை ரோட்டில் பழமையான மரம் ரோட்டில் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
9 mins ago
2 / 19
திணறிய வாகனங்கள்: கோவையில் பெய்த பலத்த மழையினால் லாலி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு திணறி சென்ற வாகனங்கள் .
2 hrs ago
3 / 19
ரம்மியமான வாக்கிங் : ஆதவன் விடைபெறும் நேரத்தில், ரம்மியமான சூழலில் செல்லப் பிராணியுடன் கடற்கரையில் வாக்கிங் செல்லும் இளைஞர். இடம்:சீனிவாசபுரம், சென்னை.
2 hrs ago
4 / 19
இலவச மருத்துவமுகாம்: பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ., எம்.எல்.ஏ., செல்வகணபதி ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ முகாமை சாமிநாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பார்வையிட்டார்.
3 hrs ago
5 / 19
lநீதிபதி ஆய்வு:: திண்டுக்கல் சித்திவிநாயகர் கோயிலில்  முதன்மை மாவட்ட நீதிபதி முரளிசங்கர், ஆய்வு செய்தார். அருகில் நீதிபதி நம்பி.
4 hrs ago
6 / 19
மருத்துவகுழுவினர் ஆய்வு : பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில், நீலகிரி மாவட்ட மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
4 hrs ago
7 / 19
ருத்ராட்ச விநாயகர்: சென்னை ஆழ்வார்பேட்டைசங்கரா ஹாலில் துவங்கிய ஆன்மிக கண்காட்சியில் உள்ள ருத்ராட்ச விநாயகர் பார்வையாளர்களை கவர்ந்தது.
5 hrs ago
8 / 19
முன்னெச்சரிக்கை கூட்டம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம் நடந்தது.
6 hrs ago
9 / 19
திண்டுக்கல்லில் தற்காலிக போக்குவரத்து ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி ஊர்வலமாக சென்றனர்.
7 hrs ago
10 / 19
உடுமலையை அடுத்த காந்தலூர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் மாணவர் இதழ் பட்டத்தை ரோட்டரி சங்கத்தினர் வழங்கினர்.
7 hrs ago
11 / 19
மதுரை துவரி மான் பகுதியில் கால்நடைகளுக்கான அகத்தி கீரையை கட்டுகளாக பிரித்து விற்பனைகக்கு அனுப்ப தயாராகிறது.
7 hrs ago
12 / 19
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் படுத்து போராட்டம் செய்த கணேஷ்பாபு.
7 hrs ago
13 / 19
திருப்பூர் ஏ கிராண்ட் மகாலில், பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. அதில் திரளானவர்கள் பங்கேற்றவர்கள்.
9 hrs ago
14 / 19
காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி, திருச்சி அருகே சோமரசம்பேட்டை பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் மும்முரமாகி உள்ளது. வயலில் நடவு செய்வதற்காக,,நெல் நாற்றுக்கள், பறித்து எடுக்கும் தொழிலாளர்கள்.
10 hrs ago
15 / 19
புதிய டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
11 hrs ago
16 / 19
கோஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனையை ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்து புதிய டிசைன் சேலைகளை பார்வையிட்டார்.
12 hrs ago
17 / 19
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தோட்டாமங்கலத்தில் காவிரி குடிநீர் கேட்டு ஆதார் கார்டுளை ஒப்படைக்க வந்த கிராமத்து மக்கள்.
13 hrs ago
18 / 19
கோ ஆப் டெக்ஸ் தீபாவளி முதல் விற்பனையை விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் துவக்கி வைத்து பார்வையிட்டார். அருகில் முதல் நிலை மண்டல மேலாளர் கோபால்.
18 hrs ago
19 / 19
தாவும் மீன்களை தவழ்ந்து செல்லும் தண்ணீரில் பிடிக்க காத்து நிற்கிறார் இந்த இளைஞர். இடம்: கோவை அடுத்த வாளையார் அணை.