தமிழகத்தின் கண்ணாடி

19 Aug 2018
29 mins ago
1 / 23
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் , அம்மன் ஒயிலாட்ட குழுவினர், வள்ளி கும்மி அரங்கேற்றம், திலகர் நகர் திடலில் நடந்தது. அதில் பங்கேற்ற சிறுமிகள்.
1 hr ago
2 / 23
ஆவணி மூலத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் உலவாக்கோட்டை அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
1 hr ago
3 / 23
திண்டுக்கல்லில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடந்த கொடியேற்று விழாவில் நடிகை ஸ்ரீ ப்ரியா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
2 hrs ago
4 / 23
ஆபத்து: திண்டுக்கல் மலைக்கோட்டையில் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் காதலர்கள்..
2 hrs ago
5 / 23
கடல் ஆமைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பள்ளி மாணவர்கள் சோப்பில் ஆமை உருவம் உருவாக்கினார். இடம்:பெசன்ட் நகர்,சென்னை.
3 hrs ago
6 / 23
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி. இடம் : சேப்பாக்கம்.
3 hrs ago
7 / 23
விவசாயம் துவங்கியது: கோவை கருமத்தம்பட்டி பகுதியில் விவசாயத்திற்கு பயிர்களை நடவு செய்யும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
4 hrs ago
8 / 23
கடல் ஆமைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள், சோப்பில் ஆமை சிற்பங்களை உருவாக்கினார். இடம்:பெசன்ட் நகர்,சென்னை.
4 hrs ago
9 / 23
4000 சப்பாத்திகள்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, திருப்பூர் ராமையா காலனி குடியிருப்போர் சங்கம் சார்பில், 4000 சப்பாத்திகள் தயார் செய்யப்பட்டு, கேரளாவிற்கு அனுப்பப்பட்டது.
6 hrs ago
10 / 23
கோவை நேரு ஸ்டேடியத்தில் சென்னை எப்.சி., அணிக்கான வீரர்கள் தேர்வில் கால்பந்து விளையாடும் வீரர்கள் .
6 hrs ago
11 / 23
மதுரை-ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்காததால் பயணிகள் சரக்கு பெட்டியில் அமர்ந்து செல்லும் அவலம்.
7 hrs ago
12 / 23
நாகை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை அரிப்பு உடையும் அபாய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அரிப்பை மண் மூட்டைகள் போட்டு அடைக்கும் கிராமமக்கள் மற்றும் பொதுபணிதுறையினர்.
7 hrs ago
13 / 23
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு குறிச்சி மண்டல பா.ஜ.,வினர் சார்பில் நடந்த அமைதி அஞ்சலி ஊர்வலத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்களும் திரளாக பங்கேற்றனர். இடம்: கோவை போத்தனூர், ஜி.டி., டேங்க் .
9 hrs ago
14 / 23
விலை குறைந்ததால் அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்களை வயலில் கொட்டி வைக்கும் விவசாயி.இடம் .உடுமலை ஏரிப்பாளையம்
9 hrs ago
15 / 23
உடுமலை அய்யம்பாளையம்புத்தூர் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள முள்ளங்கி அறுவடை செய்யும் பணி நடக்கிறது.
9 hrs ago
16 / 23
உடுமலை வி.ஜி.ராவ் நகர் மழை நீர் ஓடை ஜே.சி.பி.மூலம் தூர்வாரும் பணி நடக்கிறது.
10 hrs ago
17 / 23
ஈரோடு மாவட்டம் பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ளநீரில் நடந்து சென்று ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். உடன் தமிழக அமைச்சர்கள்.
11 hrs ago
18 / 23
திருச்சியில் இடிந்து விழுந்த கொள்ளிடம் இரும்பு பாலத்தை காண குவிந்த மக்கள்.
11 hrs ago
19 / 23
திருச்சி நெம்பர்-1 டோல்கேட் கொள்ளிட இரும்பு பாலம் உடைந்து தொங்கிய வண்ணம் இருந்தது. நள்ளிரவில், பாலத்தின் 18, 19, வது ஆகிய இரு தூண்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
14 hrs ago
20 / 23
கோவை சூலூர் ஒன்றியம் அருகே உள்ள தடுப்பணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.
15 hrs ago
21 / 23
யாரும் குளத்தில் இறங்காதீங்க...கோவையில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு பலகை.
18 hrs ago
22 / 23
பசுமையை ரசிக்கும் குரங்கு: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மழைநீர் சேமிப்பு குட்டையில் தேங்கிய தண்ணீரில் பச்சை பசேல் என்று படர்ந்துள்ள பாசியை, தண்ணீரில் இறங்கி ரசிக்கும் குரங்கு.
20 hrs ago
23 / 23
கோவையில் பெய்த கனமழையால் சூலூர் ஒன்றியம் செந்தேவிபாளையத்திலுள்ள தடுப்பணையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
Advertisement