தமிழகத்தின் கண்ணாடி

15 Nov 2018
1 hr ago
1 / 16
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்துறை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்தார். அருகில் அமைச்சர் ஷாஜகான்.
1 hr ago
2 / 16
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள்.
1 hr ago
3 / 16
கஜா புயல் எதிரொலியால் கடற்கரைக்குள் நுழையவிடாமல் பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். கடலூர் தேவனாம்பட்டினம், சில்வர்பீச்.
2 hrs ago
4 / 16
செல்பி செவிலியர்கள்: சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விழாவுக்கு வந்த அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கருடன் செவிலியர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
3 hrs ago
5 / 16
சீறிப்பாய்ந்த கடல் அலை: கஜா புயலையடுத்து சீறிப்பாய்ந்து உயர்ந்து வந்த கடல் அலை. இடம்- காசிமேடு. 
3 hrs ago
6 / 16
கஜா புயல் காரணமாக மெரினா கடற்கரையில் புழுதி காற்று வீசியது. மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
4 hrs ago
7 / 16
போக்குவரத்து நெரிசலால் அவதி: சென்னை, கொடுங்கையூர் சின்னான்டிமடத்தில் நாள்தோறும் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.. போக்குவரத்து போலீசார் வராததால் நெரிசலை சரிசெய்ய ஆட்டோ டிரைவர்கள் களத்தில் இறங்கினர்.
5 hrs ago
8 / 16
டெங்கு விழிப்புணர்வு : கொசுவால் பரவும் டெங்கு உள்ளிட்ட காய்சலைத் தடுக்கும் விதமாக மாநகராட்சியினர் சார்பில் பேண்டு வாத்தியங்கள் முழங்கியபடி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இடம்- கொடுங்கையூர், முத்தமிழ்நகர்.
6 hrs ago
9 / 16
கோவை உக்கடம் மேம்பாலம் பணிக்காக செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் இடையூறாக இருந்த வீடுகள் இடிக்கப்பட்டது.
9 hrs ago
10 / 16
காலையில் பனி சூழ்ந்து காணப்படும் தண்டவாளத்தில் விளக்கு ஒளிரவிட்டு வரும் ரயில் .இடம் .உடுமலை
10 hrs ago
11 / 16
புயல் காரணமாக மங்கிய ஒளியில் கடமையை முடித்து செல்லும் சூரியனின் செந்நிறம் காண்பவர்களின் கண்களை கவர்ந்தது. இடம்:எழும்பூர்.
11 hrs ago
12 / 16
ஊட்டி மாவட்ட மைய நூலகத்தில், நூலக வார விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவியர் கலந்துக்கொண்டார்கள்.
11 hrs ago
13 / 16
மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டி மஞ்சள் சாகுபடி அமோகமாக நடக்கிறது.
13 hrs ago
14 / 16
விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழாவில் வனச்சரக அலுவலர் சிவபெருமான் பேசினார்.
15 hrs ago
15 / 16
கோவை அவினாசி ரோட்டிலுள்ள சி.ஐ.டி., கல்லூரியில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கீர்த்தி மான் பள்ளி அணியும் ஸ்டேன்ஷ் பள்ளியும் மோதின.
17 hrs ago
16 / 16
திருவள்ளுர் ஆயில் மில் பகுதியில் மழை நீர் செல்லும் கால்வாயில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை பொது பணிதுறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் எச்சரிக்கை பேனர்கள் வைக்கபட்டுள்ளது.