தமிழகத்தின் கண்ணாடி

21 Nov 2018
14 mins ago
1 / 31
மழை பெய்துள்ளதையடுத்து பழநி அயக்குடி பெரியவாய்க்கால் பகுதியில் மாடுபூட்டி வயலில் உழும் பணி நடந்தது.
14 mins ago
2 / 31
ஊட்டி அருகே பேரர் பகுதியில், தேயிலை செடிகள் பனிக்கு கருகாமல் இருக்க ஓலைகள் கொண்டு முடப்பட்டுள்ளது.
15 mins ago
3 / 31
கரையில் ஏற்றப்பட்ட படகுகள்...: காற்றழுத்த தாழ்வுநிலையையடுத்து கடலின் சீற்றம் அதிகமானதால் திருவொற்றியூர், கே.வி.கே. குப்பம் கரையில் ஏற்றி நிறுத்தப்பட்ட படகுகள். 
16 mins ago
4 / 31
தேங்கியது மழைநீர்...: காற்றழுத்த தாழ்வு நிலையையடுத்து பெய்துவரும் மழையால் தேங்கிய மழைநீர். இடம்- சூரியநாராயணன் சாலை, புதுவண்ணாரப்பேட்டை.
16 mins ago
5 / 31
விருத்தாசலம் அருகில் உள்ள செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி இருப்பதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்களது வண்டியை சுத்தம் செய்து வருகின்றனர்.
17 mins ago
6 / 31
விருத்தாசலம் அருகில் உள்ள செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கி இருப்பதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்களது வண்டியை சர்வீஸ் செய்து வருகின்றனர்.
17 mins ago
7 / 31
கஜா புயல் தாக்கியதால் பழநி நகராட்சி கோடை கால நீர்த்தேக்கத்தில் சாய்ந்த மரங்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது.
18 mins ago
8 / 31
ஊட்டி தொட்டபெட்டா அருகேவுள்ள, தேயிலை பூங்காவிற்கு போதிய விளம்பரம் இல்லாதலால்,சுற்றலா பயணிகளின்றி வெறிச்சோடியுள்ளது.
18 mins ago
9 / 31
உடுமலை திருமூர்த்தி அணையில் உள்ள அபாய எச்சரிக்கை போர்டு கீழே கிடக்கிறது.
19 mins ago
10 / 31
தொடர் மழையால் விவசாயிகள் நடவு செய்த நெற்பயிர்கள் பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கின்றன. இடம்: விழுப்புரம் அடுத்த பிடாகம்
20 mins ago
11 / 31
தண்ணீர் நிறைந்து செல்லும் பாம்பிகுளம் பிரதான கால்வாய் .இடம். உடுமலை.
20 mins ago
12 / 31
உடுமலை திருமூர்த்திஅணையிலிருந்து குடிநீர்க்கு தண்ணீர் செல்லும் கால்வாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
20 mins ago
13 / 31
விருதாச்சலம் அடுத்துள்ள பரவலூர் பொதுப்பணித்துறை ஏரியிலிருந்து 2000 ஏக்கர் விளை நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பாசன வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது.
21 mins ago
14 / 31
சென்னையில் பெய்த மழையினால் சாலையில் தேங்கிய மழை நீரில் சீறி செல்லும் வாகனம்.இடம்:காமராஜர் சாலை.
22 mins ago
15 / 31
விழுப்புரம் பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் கலால் போலீசார் பறிமுதல் செய்த சாராய கேன்களை ஊற்றி அழித்தனர்.
23 mins ago
16 / 31
சென்னையில் மிதமான மழை பெய்தது. இடம்:பூங்கா ரயில் நிலையம்.
35 mins ago
17 / 31
சென்னையில் மழையுடன் பலத்த காற்று வீசியது . இடம்:காமராஜர் சாலை.
38 mins ago
18 / 31
சென்னையில் மிதமான மழை பெய்தது. இடம்:சென்ட்ரல்.
38 mins ago
19 / 31
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்க, கோவையிலுள்ள பள்ளி மாணவர்கள் சார்பில் திரட்டப்பட்ட நிவாரண பொருட்கள் துணிவணிகர் பள்ளியிலிருந்து கொண்டு செல்லப்பட்டது.
2 hrs ago
20 / 31
சென்னையில் பெய்த சிறு மழைக்கே மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர். இடம்.பூந்தமல்லி நெடுஞ்சாலை.
2 hrs ago
21 / 31
சென்னையில்  பெய்த மழையினால் சாலையில் தேங்கிய நீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள். இடம்.பட்டுல்லாஸ் சாலை, சென்னை
2 hrs ago
22 / 31
சிதம்பரத்திலிருந்து கண்ணகுடி செல்லும் சாலையில் சம்பா பயிர்களை சாகுபடி செய்யும் பணியில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள் .
2 hrs ago
23 / 31
விழுப்புரம் பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் கலால் போலீசார் பறிமுதல் செய்த சாராய கேன்களை ஊற்றி அழித்தனர்.
2 hrs ago
24 / 31
கேரளாவில் சபரிமலை ஐயப்பா பக்தர்கள் தாக்க படுவதை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
2 hrs ago
25 / 31
இலவச சைக்கிள்.. : கோவை ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க பணி தீவிரமாக நடக்கிறது.
4 hrs ago
26 / 31
கோவை ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளிகளுக்கான சி.சி எம்.எ., கூடைபந்து கோப்பைக்கான போட்டியில் யுவபாரதி பள்ளி - அல்வேர்னியா பள்ளி அணிகள் மோதின.
4 hrs ago
27 / 31
ஊர்வலம்... : கோவை செல்வபுரம் தெற்கு ஹயாத் துல் இஸ்லாம் சுன்னத் மதரசா ஜமாத் சார்பில், மிலாடி நபியையொட்டி ஊர்வலம் சென்றனர்.
4 hrs ago
28 / 31
புதுக்கோட்டை மாவட்டம் கொந்தமங்கலம் பகுதியில் அறுந்து கிடக்கும் மின் வயர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ராம்கோ சிமெண்ட் நிறுவன ஊழியர்கள்.
8 hrs ago
29 / 31
புதுக்கோட்டை மாவட்டம் கீழா தோட்டம் பகுதியில் கஜா புயலால் சாய்ந்து கிடக்கும் வாழை தோட்டம்
11 hrs ago
30 / 31
ஆலோசனை கூட்டம்: விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தொடர் வேலைநிறுத்த போராட்டம் சம்பந்தமாக ஆயத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
12 hrs ago
31 / 31
பழநி நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினர்.