தமிழகத்தின் கண்ணாடி

18 Nov 2018
30 mins ago
1 / 39
கேரள அரசு பஸ் மட்டுமே பம்பை வரை அனுமதிக்கபடுவதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
1 hr ago
2 / 39
கோவை வெள்ளலூர் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் யோகா போட்டி நடந்தது.
1 hr ago
3 / 39
கூட்டுறவு வாரவிழா : கடலூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் பயனாளிகளுக்கு அமைச்சர் சம்பத் நலத்திட்ட உதவி வழங்கினார்.அருகில் கலெக்டர் அன்புச்செல்வன், மண்டல இணை பதிவாளர் இளச்செல்வி, தனியார் டிராக்டர் நிறுவன உரிமையாளர் தரணி.
2 hrs ago
4 / 39
சிவகங்கை பகுதியில் பலத்த காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்து வீணாகியது.
2 hrs ago
5 / 39
கோவை பீளமேடு ராமகிருஷ்ணா கல்லூரியில் நடந்த உலக தெலுங்கு கூட்டமைப்பு 25வது ஆண்டு விழாவில் பரதநாட்டியமாடிய மாணவிகள் பார்வையாளர்களை கவர்ந்தார்.
3 hrs ago
6 / 39
சிகிச்சை : முதல் தேசிய இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு சென்னை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிற குளியல் சிகிச்சை குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது
4 hrs ago
7 / 39
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக ஆய்வு செய்ய வராத அதிகாரிகளை கண்டித்து அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் இரண்டு தினங்களாக வருவாய்த்துறை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து சாலையில் பொங்கல் வைத்து ஈடுபட்டு வருகின்றனர்.
4 hrs ago
8 / 39
வாழைஇலை குளியல்: முதல் தேசிய இயற்கை தினத்தை முன்னிட்டு சென்னை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாழைஇலை குளியல் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
5 hrs ago
9 / 39
நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயல் பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
6 hrs ago
10 / 39
நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயல் பாதிக்கப்பட்ட இடங்களை சீர் செய்வதற்காக வெளி மாவட்டத்தில் இருந்து வந்த பொக்லைன் இயந்திரங்கள்.
6 hrs ago
11 / 39
எஸ்.எஸ்.ஜெயின் சங்கத்தின் சார்பில் மருத்துவமுகாம் சவுக்கார்பேட்டையில் நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.
7 hrs ago
12 / 39
உலக சாலை விபத்தில் பலியானோர் நினைவு தினத்தை முன்னிட்டு சாலைவிபத்தில் பலியானவர்களுக்கு சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பெண்போலீஸ் அதிகாரி.
7 hrs ago
13 / 39
திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களுக்கு இடையே முளைத்துள்ள களையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
8 hrs ago
14 / 39
கடலூர் காலை புயலுக்கு பிறகு திடீர் மழை பெய்தது.இடம்:கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில்.
8 hrs ago
15 / 39
வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டதால் மானாமதுரை வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஆபத்தை உணராமல் வாகனங்களை கழுவி வருகிறார்கள்.
8 hrs ago
16 / 39
கரு மேகம் சூழ்ந்துக் கொண்டு, பலத்தமழை பெய்தது. இடம்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் .
8 hrs ago
17 / 39
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த சிவில் சர்வீஸ் நுழைவு தேர்வில் பங்கேற்ற மாற்றுதிறனாளிகள் .
8 hrs ago
18 / 39
கார்த்திகை திருநாளுக்காக மானாமதுரையில் மண் விளக்குகள் தயாரித்து வெயிலில் உலர்த்தும் சிறுவர்கள்.
8 hrs ago
19 / 39
சிவகங்கை அருகே சுந்தர நடப்பு பகுதியில் கண்மாய் கரைகளின் இரு புறத்திலும் பனை மரங்களை வளர்த்ததால் மண் அரிப்பு ஏற்படாமல் உள்ளது.
8 hrs ago
20 / 39
வ.உ.சி., நினைவு நாளையொட்டி கோவை மத்திய சிறை வளாகத்திலுள்ள செக்கிற்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
8 hrs ago
21 / 39
மழை பெய்ததையடுத்து பழநி சண்முகநதி அருகே இயந்திரம் மூலம் நடவுப்பணி நடந்தது.
8 hrs ago
22 / 39
சென்னை திருவல்லிக்கேணி, பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இடம்:சிந்தாதிரிப்பேட்டை.
8 hrs ago
23 / 39
விழுப்புரத்தில் இந்து முன்னணி சார்பில் கேரளா மாநில முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
8 hrs ago
24 / 39
ஈஷா கிராமோத்சவம் கபடி போட்டி கோவை நேரு ஸ்டேடியம் அருகே நடந்தது. இதில் மோதிய இளஞ்சிங்கம் - பி மற்றும் வளர்பிறை அணியினர்.
8 hrs ago
25 / 39
ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன்கோயில் வின்ச் ஸ்டேசனில் குவிந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
8 hrs ago
26 / 39
விழுப்புரத்தில் இந்து முன்னணி சார்பில் கேரளா மாநில முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
8 hrs ago
27 / 39
விழுப்புரம் அடுத்த பொய்யப்பாகம் கிராமத்தில் வீரப்பன் கோவிலில் சாமியின் கையில் இருந்த அருவாளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
8 hrs ago
28 / 39
மாவட்ட அளவிலான கேரம் போட்டி திருப்பூர் காட்டுவளவு பகுதியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட சிறுவர்கள்.
8 hrs ago
29 / 39
கடலூர் காலை திடீர் மழை பெய்தது.இடம்:கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில்.
8 hrs ago
30 / 39
பம்பையில் புனரமைப்புப் பணிகள் குறித்து முத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அருகில் எம்.எல.ஏக்கள்., அடுர் பிரகாஷ் , சிவக்குமார்
11 hrs ago
31 / 39
உடுமலை லயன்ஸ் மண்டபத்தில் நடந்த தினமலர் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் குறிப்பு எடுகின்றனர்.
11 hrs ago
32 / 39
உடுமலை லயன்ஸ் மண்டபத்தில் நடந்த தினமலர் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுடன் வரும் பிளஸ் 2 மாணவிகள் .
11 hrs ago
33 / 39
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த சிவில் சர்வீஸ் நுழைவு தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்.
11 hrs ago
34 / 39
இரு முடி தாங்கி சபரிமலைக்கு வந்த குழந்தைகள்.
11 hrs ago
35 / 39
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த சிவில் சர்வீஸ் நுழைவு தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்.
12 hrs ago
36 / 39
உடுமலை லயன்ஸ் மண்டபத்தில் நடந்த தினமலர் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமுடன் வரும் பிளஸ் 2 மாணவிகள் .
14 hrs ago
37 / 39
உலக பக்கவாத நோய் தினம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு கற்பகம் மருத்துவக் கல்லூரி சார்பில் கோவை சுந்தராபுரம் தினமலர் நாளிதழ் அலுவலகம் முன் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்கள்.
18 hrs ago
38 / 39
திருப்பூர் தென்னம்பாளையம் - வெள்ளியங்காடு செல்லும் ரோட்டில் குழாய் உடைப்பு பணி சரி செய்யப்பட்டு, குழியை சரியாக மூடாமல் விட்டு சென்றுள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது.
20 hrs ago
39 / 39
திருப்பூர் நொய்யலாற்றில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் செல்கிறது. இதனால் விடுமுறை நாட்களில் ஆற்றில் மீன் பிடிக்கும் வாலிபர்கள்