தமிழகத்தின் கண்ணாடி

14 Nov 2018
47 mins ago
1 / 40
ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரி கோட்டாவில் இருந்து , 'ஜிசாட் - 29' என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனையடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ராக்கெட் மாதிரியை கான்பித்த இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன். உடன் விஞ்ஞானிகள் ஜெயகுமார் , பாண்டியன்
1 hr ago
2 / 40
கஜாபுயல் நாளை கரையை கடக்க உள்ளதால் சிதம்பரம் அடுத்த கிள்ளை எம்.ஜி.ஆர். திட்டு பகுதிக்கு வந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினர்.
1 hr ago
3 / 40
குழந்தைகள் உதவி மையம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்தது.இதில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய குழந்தைகள் உதவி மைய குழுவினர்.
1 hr ago
4 / 40
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
1 hr ago
5 / 40
விபத்து ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர வாகனத்தில் பெட்டியை கட்டி செல்லலாமா. இடம்:திண்டுக்கல் - வத்தலக்குண்டு ரோடு .
1 hr ago
6 / 40
அ.தி.மு.க., அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறப்பதற்கு முன்பு வெள்ளை துணியால் போர்த்தப்பட்டிருந்தது. இடம்:ராயப்பேட்டை.
1 hr ago
7 / 40
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடந்தது.
1 hr ago
8 / 40
விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழாவில் வனச்சரக அலுவலர் சிவபெருமான் பேசினார்.
1 hr ago
9 / 40
விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1 hr ago
10 / 40
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு,  திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சைல்டு லைன் சார்பில் குழந்தைகளை காப்போம் என்ற வாசகம் பதித்த ராக்கியினை  குழந்தைகள் கையில் கட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
1 hr ago
11 / 40
தினமலர் மாணவர் பதிப்பு, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பர்ஸ்ட் பெஞ்ச்,கோ 4 குரு இணைந்து நடத்திய , வினாடி வினா போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, மாடம்பாக்கம் சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது. இதில் பள்ளி குழுமத்தின் தலைவர் டாக்டர் என்.விஜயன், வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சான்று மற்றும் கேடயம் வழங்கினார்.
1 hr ago
12 / 40
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் நடனமாடிய பள்ளி மாணவியர். இடம் : எம்.சி.சி பள்ளி, சேத்துப்பட்டு.
1 hr ago
13 / 40
சிவகங்கையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் ஓட்ட பந்தயம் நடந்தது.
1 hr ago
14 / 40
திண்டுக்கல்லில் தேசிய பசுமைப் படையின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சி வகுப்பில் வனத்துறை ரேஞ்சர் மனோஜ் பேசினார்.
1 hr ago
15 / 40
மதுரை பனையூர் கால்வாய் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை மாநகராட்சியினர் அகற்றினர்.
1 hr ago
16 / 40
திண்டுக்கல் அருகே ராமநாதபுரம்  பகுதியில் தேங்கிய மழை நீரில் தாகம் தீர்த்த ஆடுகள்.
1 hr ago
17 / 40
திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் பாலின சமத்துவம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஜூலியட் செல்வி பேசினார்.
1 hr ago
18 / 40
மழை பெய்ததை தொடர்ந்து திண்டுக்கல் சிலுவத்தூர் ரோடு அருகே நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
2 hrs ago
19 / 40
கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரியில் நடந்த துரையீரல் பரிசோதனை முகாமில் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.
2 hrs ago
20 / 40
இது தான் வருங்காலத்தில் சிறந்த பயணமாகும். இடம்: கோவை ராமநாதபுரம்
2 hrs ago
21 / 40
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் 50வது பொன் விழா ஆண்டையொட்டி குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக முதல்வர் பழனிசாமி,  துணை முதல்வர் பன்னீர்செல்வம், வண்ண பலூன்களை பறக்க விட்டனர். உடன் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர் விஜயாபஸ்கர் உள்ளிடோர்.
2 hrs ago
22 / 40
புதுச்சேரி பள்ளி கல்வித் துறை சார்பில் நடந்த குழந்தைகள் தின விழாவில் அரசு பள்ளி மாணவர்களின் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.முதல்வர் நாராயணசாமி பரிசு வழங்கினார்
2 hrs ago
23 / 40
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணாநகர் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்கள். இடம் : அண்ணாநகர்.
2 hrs ago
24 / 40
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரிசுகளை வழங்கினார். உடன் அமைச்சர் ஜெயகுமார், விஜயகுமார் எம்.பி, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன். இடம் : எம்.சி.சி பள்ளி, சேத்துப்பட்டு.
2 hrs ago
25 / 40
புதுப்பிக்கதக்க எரிசக்தி முகமை சார்பில் புதுச்சேரி கோரிமேடு மதர் தெரசா செவிலியர் கல்லூரியில் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வண்ணம் தீட்டும் மாணவர்கள்.
2 hrs ago
26 / 40
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2 hrs ago
27 / 40
புதுச்சேரியில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்தார். அருகில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான்.
2 hrs ago
28 / 40
ஊட்டி மார்கெட் மேல்கெட் பகுதியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
2 hrs ago
29 / 40
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் நடனமாடிய மாணவியர். இடம் : எம்.சி.சி பள்ளி, சேத்துப்பட்டு.
2 hrs ago
30 / 40
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரங்கில் ஆல் இல்லாமல் எரியும் மின்விளக்குகளால் வீணாகும் மின்சாரம்.
2 hrs ago
31 / 40
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பாரம்பரிய உடைகள் அணிந்து நடனமாட வந்த பள்ளி மாணவியர். இடம் : எம்.சி.சி பள்ளி, சேத்துப்பட்டு.
5 hrs ago
32 / 40
ஊட்டி ரயில்வே நிலையத்தில்,, பொது சுகாதாரத்துறையினர் இருக்கைகளை சுத்தம் செய்தனர்.
5 hrs ago
33 / 40
உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு திருப்பூர் லயன்ஸ் கிளப் சார்பில் வழக்கறிஞர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
5 hrs ago
34 / 40
கோவையில் ஆபத்தான முறையில் ஆட்டோகளில் பயணம் செய்யும் பள்ளி குழந்தைகள். இடம்: லாலிரோடு சிக்னல் .
5 hrs ago
35 / 40
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்பரமணியர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
5 hrs ago
36 / 40
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்பரமணியர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள்.
5 hrs ago
37 / 40
மாற்றத்தை காண மாறுவேடம் அணிந்து குழந்தைகள் தின விழா கொண்டாட சென்ற குழந்தை. இடம்: கோவை அவினாசி ரோடு .
5 hrs ago
38 / 40
சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை குறித்து நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
5 hrs ago
39 / 40
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு பழநி ஆண்டவர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த பழநி ஆண்டவர்.
5 hrs ago
40 / 40
கோவை அரசு மருத்துவமனையில் பரிதாபமாக காணப்படும் நோயாளிகளின் உறவுகள்.