அரசியல்ஆல்பம்:

19-Jun-2012
1 / 10
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வு மற்றும் இன்ன பிற விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கோல்கட்டாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்றது.
2 / 10
மதுரை தி.மு.க. நகர் செயலாளர் தளபதி, நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
3 / 10
மகாராஷ்டிரா மாநிலத்தில் விமான நிலைய நவீனமயமாக்கும் பணியை, மத்திய விமானத்துறை அமைச்சர் அஜித் சிங்குடன் இணைந்து பார்வையிடும் முதல்வர் பிருத்விராஜ் சவான்.
4 / 10
இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சர் கிரீக் எல்லை பகிர்வு தொடர்பான 12வது சுற்று பேச்சுவார்த்தை தலைநகர் டில்லியில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஜெனரல் சுப்பா ராவ் தலைமையிலான அதிகாரிகளும் மற்றும் பாகிஸ்தான் சார்பில் ரியர் அட்மிரல் பரூக் அகமது தலைமையிலான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
5 / 10
தலைநகர் புதுடில்லியில் அசொசெம் - இந்திய தொழிற்கூட்டமைப்பு மற்றும் எப்.ஐ.சி.சி.ஐ சார்பிலான புத்தகத்தை வெளியிடும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் அருகில் அதன் தலைவர்கள்.
6 / 10
மத்திய பிரதேச அரசை கண்டித்து, தலைநகர் போபாலில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் அமைதிப் போராட்டம் நடத்தினர்.
7 / 10
தெலுங்கானா மாநிலம் விரைவில் அமைக்கக் கோரி, ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ராஷ்டிரிய தெலுங்கானா சமிதி எம்.எல்.ஏ.க்கள் தெலுங்கானா நினைவு சின்னம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 / 10
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் தருண் கோகோய் கவுரவிக்கப்பட்டார்.
9 / 10
பீகார் தலைநகர் பாட்னாவில், சுதந்திர போராட்ட தியாகி அனுக்ரஹா நாராயண் சின்காவின் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
10 / 10
தலைநகர் டில்லியில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஹரியானா மாநிலத்திலிருந்து கூடுதல் நீரை பெறும் பொருட்டு இரு மாநில முதல்வர்களும் டில்லியில் சந்தித்துப் பேசினர்.
Advertisement