அரசியல்ஆல்பம்:

24-Nov-2012
1 / 10
தமிழக சட்டசபை வைரவிழாவை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் புகைப்பட கண்காட்சியை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து பார்வையிட்டார்.
2 / 10
இந்தியா வந்துள்ள பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஜ் இனாசியோ லுலா டி சில்வா, தலைநகர் டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
3 / 10
சென்னையில், நேற்று மரணமடைந்த, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின், உடலை பார்த்து, கண் கலங்கிய, தி.மு.க., தலைவர் கருணாநிதி.
4 / 10
சமீபத்தில் காலமான சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்ரேவின் அஸ்தி, அரபிக்கடலில் இன்று கரைக்கப்பட்டது. அஸ்தியை கரைக்கும் பால் தாக்ரேவின் மகன் உத்தவ் தாக்ரே.
5 / 10
மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றவர்களை,லோக்சபாவில் பிரதமர் அறிமுகப்படுத்தினார். உறுப்பினர்களை பார்த்து வணக்கம் தெரிவிக்கும் அமைச்சர் மணீஷ் திவாரி.
6 / 10
ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஷர்மிளா, மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். மகபூப்நகர் பகுதியில் குழுமியிருந்த தனது ஆதரவாளர்களை பார்த்து கையசைக்கும் ஷர்மிளா. அருகில் தாயார் விஜயாம்மா.
7 / 10
பார்லிமென்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்.
8 / 10
சேலம் பூலாவரியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு, மலர்வளையம் வைத்து, தி.மு.க., தென்மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி அஞ்சலி செலுத்தினார்,
9 / 10
தலைநகர் டில்லியில் நடைபெற்ற ஜவஹர்லால் நேரு நினைவு உரை குறித்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் கலந்துகொண்டார்.
10 / 10
குஜராத் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாவ்நகர் தொகுதியில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் குஜராத் காங்கிரஸ் கட்சி தலைவருமான சகாட்டிசிங் கோகில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Advertisement