அரசியல்ஆல்பம்:

25-Nov-2012
1 / 11
கோல்கட்டாவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
2 / 11
அன்னா ஹசாரே குழுவில் இருந்து பிரிந்த அரவிந்த் கெஜ்ரிவால் தமது அரசியல் கட்சிக்கு 'ஆம் ஆத்மி' என பெயர் சூட்டியுள்ளார். பத்திரிகையாளர் டில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் பெயரை வெளியிடும் கெஜ்ரிவால்.
3 / 11
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் நிதிஷ் குமார் (வலது), தமது அரசின் 7 ஆண்டு ஆட்சியின் சாதனை விவரத்தை வெளியிட்டார்.
4 / 11
கர்நாடக மாநிலம் கெங்கேரியில் 'பிஸ்கல் பாலிசி இன்ஸ்டியூட்'டினை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் (இடது), மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் ரகுமான் கான் ஆகியோர் திறந்து வைத்தனர்.
5 / 11
ஐதராபாத்தில் நடைபெற்ற உலக விவசாய பொதுமன்ற கூட்டத்தில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி கலந்து கொண்டார் (வலது).
6 / 11
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'பேங்கான்' எனப்படும் வங்கி தலைவர்களின் கூட்டத்தை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
7 / 11
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுடன் உரையாடிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் மணிஷ் திவாரி.
8 / 11
டில்லியில் கோலே மார்க்கெட் பகுதியில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முதல்வர் ஷீலா தீட்சித் தொடங்கி வைத்தார்.
9 / 11
வைரவிழாவை முன்னிட்டு, முதல்வர் ஜெ., துவங்கி வைத்த கண்காட்சியை, ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற குழு தலைவர், அஸ்தா. ஆர்.ஜோகன்ஸ் டோடேர் மற்றும் அவரது குழுவினர் பார்வையிட்டனர். அருகில் சபாநாயகர் தனபால்.
10 / 11
எம்.வி.நீரிழிவு மருத்துவமனை, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக்குழந்தைகளின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியது. பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கிய அமெரிக்காவின் "டீம் வைல்ட்' அமைப்பின் இயக்குநர் மேரிருட்டியுடன், சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் மருத்துவமனை மேலாண் இயக்குநர் விஜய்விஸ்வநாதன்.
11 / 11
உடல் நலக்குறைவால் இறந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய, துரைமுருகன், கனிமொழி.
Advertisement