அரசியல்ஆல்பம்:

04-Dec-2012
1 / 10
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ., பார்த்திபனை சந்தித்துஆறுதல் கூறுவதற்காக, அக்கட்சி தலைவர் விஜயகாந்த், தன் கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று வந்தார்.
2 / 10
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், பா.ஜ., தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் பத்திரிகையாளர்களை சந்திக்க விரையும், முதல்வர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி அருகில் பா,ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி.
3 / 10
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா. லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.
4 / 10
நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 128வது பிறந்தநாள், பார்லிமென்டில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் மீராகுமார், பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
5 / 10
கடந்த வாரம் காலமான முன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜ்ராலிற்கு, லோக்சபாவில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
6 / 10
உள் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசுவது என்பது இது தானோ...! தி.மு.க., கட்சியின் கொள்கைகளை, வெளியே பேசிக் கொண்டு உள்ளே சாமி சிலைகளை, வழிபடும் உடன்பிறப்புகள். எழும்பூர் கோர்ட்டுக்கு ரித்தீஸ்சுடன் வந்த உடன்பிறப்பின் காரில் எடுத்தது.
7 / 10
மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சித் சின்கா, பதவியேற்புக்கு பின் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
8 / 10
மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரில் நடைபெற்ற சிவசேனா கட்சி கூட்டத்தில் உத்தவ் தாக்ரேவிற்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. சிவசேனா தலைவர் பால் தாக்ரேவின் மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் கட்சி கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
9 / 10
இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான டுவென்டி20 போட்டி வரும் 25ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள நிலையில், கர்நாடக கிரிக்கெட் சங்க பிரதிநிதிகளை சந்தித்து மனு ஒன்றை அளித்து விட்டு திரும்பும் ஸ்ரீராம்சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முதாலிக்.
10 / 10
அசாம் வந்துள்ள வங்கதேச எம்.பி.க்கள் குழு, தலைநகர் கவுகாத்தியில் முதல்வர் தருண் கோகோயை சந்தித்துப் பேசினர்.
Advertisement